(லங்கா ஈ நியூஸ் 2020 மே 11 பிற்பகல் 07.00) சுகாதார அமைச்சின் செயலாளராக பதவி வகித்த பத்ராணி ஜெயவர்தன அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு இராணுவ சுகாதார பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மற்றும் இராணுவத்தின் சுகாதார பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். (புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன)
களுத்துறை பிரதேசத்தில் பிறந்த சஞ்சீவ முனசிங்க விசேட வைத்திய நிபுணர் ஆவார். இராணுவத்தில் கேப்டனாக 1986 ஆம் ஆண்டு இணைந்து கொண்டார். அவருடைய மனைவியும் வைத்தியர் என்பதுடன் அவரும் இராணுவ வைத்திய பிரிவில் சேவை புரியும் பிரிகேடியர் ஆவார். சஞ்சீவவின் இளைய சகோதரர் கெமுனு ஹேவா படை பிரிவில் சேவை புரிந்த நிலையில் இறுதி யுத்தத்தின் போது அவர் உயிரிழந்தார்.
கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய போது லங்கா ஹாஸ்பிடல் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் பணிப்பாளராகவும் சஞ்சீவ முனசிங்க செயல்பட்டார். சஞ்சீவி முனசிங்க மீது அரச நிதி மோசடி குற்றச்சாட்டு இல்லை. அவரும் அவருடைய மனைவியும் தனியார் வைத்திய நிலையங்களை நடத்திச் செல்வதால் அவர்களுக்கு நிதி பற்றாக்குறை இல்லை. சஞ்சீவி முனசிங்க இராணுவத்தில் நற்பெயர் பெற்ற வைத்தியராக இருக்கிறார். அவர் சிறந்த ராணுவ அதிகாரியாக இருந்த போதும் நிர்வாகத் துறையில் சிறந்து விளங்கவில்லை.
இன்று சுகாதார அமைச்சிக்கு அரச நிர்வாக சேவையில் சிறந்த திறமையுள்ள அதிகாரி ஒருவரே செயலாளராக தேவைப்படுகிறார். விசேட வைத்திய நிபுணராக இருந்தாலும் சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். சுகாதார துறையில் உள்ள வைத்திய சங்கங்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களின் கோரிக்கை சுகாதார அமைச்சுக்கு வைத்திய நிர்வாகம் (Medical Administration) தொடர்பில் விசேட பட்டம் பெற்ற சிரேஷ்ட திறமையான அதிகாரி ஒருவரே செயலாளராக வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அப்படி இல்லை என்றால் அரச நிர்வாக சேவையில் சிரேஷ்ட நபர் ஒருவரை நியமிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் நிர்வாகத் திறமை என்ற அடிப்படை தகைமை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுபவருக்கு இருக்க வேண்டுமென்ற கோரிக்கை மேலோங்கி நிற்கிறது. நாட்டில் கொடிய தொற்று நோய் அபாயம் நிலவி வரும் வேளையில் சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவத்தில் கடமையாற்றிய விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பயனுள்ளதாக அமையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் அனேகமான அரச நிறுவனங்களுக்கு தலைவர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னர் இந்த விடயங்களுக்கு எல்லாம் எதிர்ப்புகளை தெரிவிக்கும் வீரர்கள் தற்போது வாயை மூடிக் கொண்டு காதைப் பொத்திக் கொண்டு போகிற போக்கில் கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு இருப்பதைக் காண முடிகிறது. இதற்கு சிறந்த உதாரணம் சுங்கத் திணைக்களம். இலங்கை துறைமுக அதிகார சபை மற்றுமொரு சிறந்த உதாரணம். விரைவில் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜயனாத் கொலம்பகே நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் முன்னைய காலங்களில் சுகாதார அமைச்சுக்கு இராணுவ வீரர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் ஆடைகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு வரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் GMOA வைத்தியர்கள் இனி மேஜர் ஜெனரல் ஒருவரின் கீழ் காதுகளை பொத்திக் கொண்டு செலியூட் அடித்துக் கொண்டு சத்தமின்றி வேலை செய்வதை நாட்டு மக்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இதேவேளை மற்றுமொரு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலாயகிய ஏ. கே. எஸ் பெரேரா மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார் அத்துடன் மேலும் 5 அமைச்சு செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு,
எஸ் எம் முகமது -
நீதிமன்ற மனித உரிமை மற்றும் சட்ட புனரமைப்பு அமைச்சு.
ஜே ஜே ரத்னசிறி -
அரச நிர்வாகம், சுதேச நடவடிக்கை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு.
எஸ். ஹெட்டியாராச்சி -
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு
எச். கே. டி. டபுள்யூ. எம். என். பி. அப்புஹின்ன -
மகளிர் மற்றும் சிறுவர் நடவடிக்கை, சமூக பாதுகாப்பு அமைச்சு.
ஜே. எம். பி ஜெயவர்தன -
உள்நாட்டு வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன் அமைச்சு.
---------------------------
by (2020-05-12 01:06:13)
Leave a Reply