திலக் தெமட்டமல் பிட்டிய கேள்வி
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 22 முற்பகல் 12.05) மெக்கோ என சுருக்கமாக அழைக்கப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களில் வெளிகாட்டும் நடிப்பை பார்க்கும் போது அவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது வழங்க வேண்டும் என தோன்றுகிறது.
கடந்த வாரம் இடம்பெற்ற அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நாடு தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்தல் நடத்த முடியாது என தெரிவித்திருந்தனர். நாடு பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் 1300 கோடி என்ற மிக அதிகமான பணத்தை செலவு செய்து தேர்தல் ஒன்றை நடத்துவது பொருத்தமாக அமையாது என கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
ஆனாலும் ஜனநாயகம் என்பது இலாபமாக பெறக்கூடிய ஒன்று அல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதன் விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் தரமும் அதிகரிக்கும் என கூறிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக ஊகிக்க முடிந்தது. ஆனாலும் தற்போது நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையின் பின்னர் வழங்கப்படும் உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தேர்தல் நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட வாசுதேவ நாணயக்கார தேர்தல் நடத்தப்பட கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டார். தேர்தல் நடத்துவதற்கு பொருத்தமான காலம் இதுவல்ல என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
எனினும் வாசுதேவ நாணயக்காரவை விட அரசாங்கம் சார்பில் முன்னிலையாகி இருந்த தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாசுதேவ நாணயக்காரவை பார்த்து, "நீங்கள் பிரதிநிதித்துவம் செய்வது ஆளும் கட்சியா? அல்லது எதிர்க் கட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.
இதன்போது தன்னை சுதாகரித்துக் கொண்ட வாசுதேவ நாணயக்கார தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்தார்.
இந்த சந்திப்பின் போது தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் விநியோகிப்பது தடை செய்யப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவ்வாறு கூறினாலும் தற்போது தாமரை மொட்டு கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அனைவருக்கும் விருப்பு இலக்கங்கள் கிடைக்கப்பெற்றது இவ்வாறு என எந்த ஒரு ஊடகமும் கேள்வி எழுப்புவதில்லை.
தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் திருட்டுத்தனமாக தமக்குத் தேவையானவர்களுக்கு வழங்கியதன் மூலம் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை எவ்வாறு நடத்த முடியும் என்ற கேள்விக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதில் அளிக்க வேண்டும்.
தற்போது சமல், நாமல், ஜானக உள்ளிட்ட அனைவரும் தங்களது விருப்பு இலக்கங்களை பதிவிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரங்களை வேண்டிய அளவு செய்து வருகின்றனர். உண்மையில் இவர்களுக்கு விருப்பு இலக்கங்களை வழங்கியது யார் என்று தேர்தல் கண்காணிப்பு இயக்கமான பெபரல் கூட கேள்வி எழுப்பவில்லை.
விருப்பு இலக்கங்கள் திருட்டுத்தனமாக வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்புக் கூற வேண்டும். அப்படி இல்லை என்றால் தங்களிடம் இருக்கும் விருப்பு இலக்கங்கள் வேட்பாளர்களுக்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.
எப்படி இருப்பினும் வழக்கும் தேரர்களதே வழக்கு பொருட்களும் தேரர்களதே என்ற அடிப்படையில் செயல்படும் நாட்டில் இதற்கு மேலதிகமாக எதனையும் எதிர்பார்க்க முடியாது.
---------------------------
by (2020-05-22 08:35:30)
Leave a Reply