~

கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் புதைகுழிக்குள்..! அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு இடி விழும் வரி விதிப்பு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 22 பிற்பகல் 08.15) கொரோனா தொற்று காரணமாக வருமான வழிகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களை கொரோனா தொற்று ஏற்படா விட்டாலும் புதைகுழிக்குள் தள்ளும் வகையில் ராஜபக்சகளின் வேலை தெரியாத அரசாங்கம் மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றிற்கு இடி விழும் வகையிலான வரி விதிப்பை செய்துள்ளது. 

சீனி தொடக்கம் கஜு வரையில் மாத்திரமன்று காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், வெள்ளைப் பூண்டு, செமன், பருப்பு, உருளைக் கிழங்கு, தேங்காய் எண்ணெய் மார்ஜின், சிறிய சீரகம், பெரிய சீரகம் வரையும் இடி விலக்கூடிய அளவு வரி விதிக்கப்பட்டுள்ளது.

செமன், மேக்கரல் போன்ற டின் மீன் வகைகளுக்கு கிலோ ஒன்றுக்கு நூறு ரூபா வீதமும் சீனி, பெரிய வெங்காயம், வெள்ளைப் பூண்டு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்களுக்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபா வீதமும் பருப்பு மற்றும் கடலை வகைகளுக்கு கிலோ ஒன்றிற்கு 5 தொடக்கம் 10 ரூபா வரையும் காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றுக்கு 100 ரூபா தொடக்கம் 125 ரூபாய் வரையும் சிறிய சீரகம், பெரிய சீரகம் கிலோ ஒன்றுக்கு 162 ரூபா வீதமும் மாஜரின் கிலோ ஒன்றிற்கு 650 ரூபா வீதமும் விசேட விற்பனை வரி விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் அரசியல் மேடைகளில் ஏறி 'பெரிய வெங்காயம் எவ்வளவு?: என கேட்டு 'இப்போது சுகமா?' என கேள்வி எழுப்பிய தற்போதைய நிதி பொருளாதாரக் கொள்கை அபிவிருத்தி மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச  தற்போது பொது மக்கள் மீது இடி விழும் வகையான வரி அறிவிப்பை விடுத்து எதிர்வரும் 6 மாதங்களுக்கு அது அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளார். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் 'எமக்கு பணம் உள்ளது' என்று வாய் சவடால் பேசிய மகிந்த ராஜபக்ச இன்று பணமே இல்லாத அப்பாவி பொது மக்களிடம் இருந்து பணம் பறிக்கவென விசேட விற்பனை வரி என்ற பெயரில் அத்தியாவசிய பொருட்களுக்கு இடி விழும் வகையான வரிகளை விதித்துள்ளார். ராஜபக்ச அரசாங்கம் நாட்டினுடைய இந்த அசாதாரண சூழ்நிலையில் தங்களது அம்பாந்தோட்டை பகுதிக்கு அதிவேக வீதிகளை அமைக்கவும் ஹோமாகம பகுதியில் பாரிய விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

'இடி விழும் வகையான வரி விதிப்பு' தொடர்பான மஹிந்த ராஜபக்ஷவின் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

---------------------------
by     (2020-05-23 16:35:54)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links