விசேட செய்தியாளரின் வெளியீடு
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 23 பிற்பகல் 11.15) வெலிசர கடற்படை முகாம் உள்ளே கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பரவிய விதம் தொடர்பில் கருத்து வெளியிட முகாமில் உள்ள பலர் மிகவும் அஞ்சுகின்றனர். வெளிசர கடற்படை முகாம் வீரர்கள் அவ்வாறு தகவல்களை வழங்கினாலும் வற்புறுத்தலின் அடிப்படையிலேயே தருகின்றனர். குரல் எழுப்ப முடியாமல் இருக்கின்ற அவர்கள் சார்பில் யாரேனும் கட்டாயம் குரல் எழுப்ப வேண்டும். இந்த புகைப்பட சாட்சி ஆதாரங்களுடனான கட்டுரை அவர்களுக்கு குரல் கொடுக்கும் நோக்கிலாகும்.
சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கடற்படை வீரர்கள் வெலிசர கடற்படை முகாமில் உள்ளனர். இதில் சில விடுதிகளில் 50 தொடக்கம் 60 கடற்படை வீரர்கள் தங்கியுள்ளனர். வெலிசர கடற்படை முகாமில் கொரோனா தொற்று பாரிய அளவு பரவியமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்கள் குழுவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை செயல்படுத்த கூடிய வசதிகள் வெலிசர கடற்படை முகாமில் இல்லை என தெரிவித்திருந்தனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகாத அனைத்து விடுமுறையில் இருந்த கடற்படை வீரர்களையும் உடனடியாக கடற்படை முகாமிற்கு அழைத்து எவ்வித பரிசோதனையும் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்ட கடற்படை வீரர்களுடன் தொடர்பினை பேணும் வகையில் தங்க வைக்க எடுத்த முட்டாள்தனமான தீர்மானத்தின் காரணமாக பாரிய அளவு கொரோனா தொற்று இந்த வெலிசர கடற்படை முகாமில் ஏற்பட்டமை மிகத் தெளிவாக தெரிகிறது.
கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறுவது போல இந்த கடற்படை வீரர்களுக்கு 'நோய் எதிர்ப்பு சக்தி' அதிகம் என்பதால் கொரோனா தொற்று ஏற்பட்ட போதும் அது அபாய நிலைக்கு செல்லவில்லையாம். அதனால் வெலிசர கடற்படை முகாமுக்குள் கொரோனா தொற்று ஏற்படுவது அந்த அளவு பிரச்சினைக்குரிய விடயம் இல்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். வைத்தியர் அல்லாத கடற்படை ஊடகப் பேச்சாளர் எந்த அடிப்படையில் இவ்வாறான கருத்தை முன்வைத்தார் என்பது தெரியவில்லை.
வெலிசர கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் அவர்களுக்கு பலாத்காரமாக 'புகை தெளித்தல்' மற்றும் 'கஞ்சி பருகுதல்' போன்றவை செயற்படுத்தப்படுவதாக கடற்படை வீரர்கள் உறுதி செய்துள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் கடற்படை வீரர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் உறுதியான கருத்து வெளியிட்டுள்ளமை மேற்கூறிய முட்டாள்தனமான நடவடிக்கைகளின் பின்புலமாக என்பது தெரிய வருகிறது.
'கெமுனு' என்ற அடையாளம் காணப்படும் பகுதியில் கடற்படை வீரர்கள் ஆயிரத்து 800 பேருக்கு 200 புகை தெளிக்கும் திரவம் கொண்டுவரப்பட்டு பலாத்காரமாக புகை தெளிக்கப்பட்டதாக கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடற்படை முகாமுக்குள் உள்ள கடற்படை வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் கழிவுகள் வைத்தியசாலை அமைந்துள்ள இடத்தில் இருந்து இருநூறு மீட்டர் தொலைவிலும் கடற்படை வீரர்கள் தங்கியுள்ள விடுதிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும் உள்ள குப்பை குழியில் வீசப்படுவதாக கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் இந்த வைத்தியசாலைக் கழிவுகள் உடனடியாக எரித்து சாம்பலாக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான வைத்தியசாலைக் கழிவுகள் குப்பை குழிக்குள் வீசப்படும் போது அதன் மூலமாக பல வகையான சுகாதார பிரச்சினைகள் நோய் வகைகள் ஏற்படக் கூடும் என்பது பலருக்கும் தெரிந்த விடயமாகும்.
அண்மைய நாளொன்றில் வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் 12 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சில மணித்தியாலங்கள் கழித்து குறித்த நோயாளர்கள் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கடற்படை வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாவது முறையாக செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்கள் கொரோனா நோயாளர்கள் அல்ல என உறுதி செய்யப்பட்டதால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். ஒரு தடவை பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு நோய் அறிகுறி உறுதி செய்யப்பட்டு இரண்டாவது தடவை பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் போது அவருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் அவர் நோய் தொற்று அற்றவர் என உறுதி செய்வது கடினமாகும். பிசிஆர் பரிசோதனை என்பது நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரின் 'மூக்கு சளி' எடுத்து அதில் கரோனா வைரஸ் இருக்கிறதா என பரிசோதனை செய்வதாகும். இந்த சளி மாதிரி பெறப்படும் போது அந்த இடத்தில் வைரஸ் இருந்திராவிட்டால் குறித்த நபருக்கு நோய்த் தொற்று இருந்தாலும் இல்லை என்று முடிவு காண்பிக்கும். ஆனால் உண்மையில் சுவாச பகுதியில் வேறு இடங்களில் கொரோனா வைரஸ் இருக்கக் கூடும். முதலாவது பிசிஆர் பரிசோதனையில் 'நெகட்டிவ்' என்று வந்த போதிலும் இரண்டாம் அல்லது மூன்றாம் பரிசோதனைகளின் போது அவருக்கு 'பொசிடிவ்' என வர வாய்ப்புகள் உள்ளன. அதே போன்று முதலாவது பிசிஆர் பரிசோதனையில் 'பொசிடிவ்' என வரும் நபருக்கு இரண்டாவது பரிசோதனையின் போது பெறப்படும் சளியில் வைரஸ் தொற்று இல்லாமல் 'நெகட்டிவ்' என காட்டலாம். அதனால் அவர் நோய் தொற்று அல்லாத நபர் என கணிக்க முடியாது. எனவே ஒருமுறை பொசிடிவ் என காண்பிக்கும் பரிசோதனையில் மறுமுறை நெகட்டிவ் என காண்பிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அத்துடன் நெகட்டிவ் என காண்பிக்கும் பரிசோதனைகள் மறுமுறை பொசிடிவ் என காண்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. உண்மையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதியாக சொல்லக் கூடிய பரிசோதனை குறித்த நபரினுடைய இரத்த மாதிரியை பெற்று செய்யப்படும் பரிசோதனை ஆகும். அதில் நோய்க்கு எதிராக போராடக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா (Antibodies) என்பது பரிசோதனை செய்யப்படும் எனவே நோயாளர்கள் உடன் கலந்து ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் எவ்வித நோய்களும் இல்லை என நோயாளர்கள் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டமை தவறான விடயமாகும். கொரோனா தொற்று தொடர்பில் எவ்வித தெளிவுகளும் இல்லாமல் ஆட்சியாளர்கள் செயல்படும் விதம் இங்கு உறுதியாகிறது.
முகாமிற்குள் நான்காயிரம் பேர் இருந்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் பரிசோதனை மேற்கொண்டால் நான்கு நாட்களுக்குள் நான்காயிரம் பெயரையும் பரிசோதனை செய்து முடித்திருக்க முடியும். அதிலிருந்து நோய் தொற்று அறிகுறி உள்ள நபர்களை வேறு பிரித்து வேறு பராமரிப்பு முகாம்களுக்கு அனுப்பி இருக்க முடியும். நோய்த் தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்தி மீண்டும் அவர்களிடம் பரிசோதனை செய்திருந்தால் உண்மை நிலையை கண்டறிந்து இருக்க முடியும். தற்காலத்தில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் இல்லை என சுகாதார பிரிவு கூறுவதால் பிசிஆர் பரிசோதனை செய்யக் கூடிய அனைத்து உபகரணங்களையும் வெலிசர கடற்படை முகாமுக்கு எடுத்துச் சென்று இந்த பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். இவ்வாறு முன்னெடுக்கப்படும் பரிசோதனையின் முடிவில் நோய் தொற்று உள்ளவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி மற்றவர்களை வேறு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கும் அனுப்பிவிட்டு வெலிசர கடற்படை முகாமிற்குள் கிருமி நாசினி புகை தெளித்து கடற்படை முகாமை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். நான்காயிரம் பேர் உள்ள ஒரு கடற்படை முகாமை சுத்தம் செய்ய முடியாத ஆட்சியாளர்களுக்கு 21 மில்லியன் மக்கள் உள்ள நாட்டை எப்படி சுத்தம் செய்ய முடியும் என்ற கேள்வி எழவே செய்கிறது.
WHO சர்வதேச சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு முரணான முட்டாள்தனமான புகை தெளித்தல், கஞ்சி பருகுதல் போன்றவற்றை கடற்படை முகாமிற்கு கொண்டு வந்து இதனை பலாத்காரமாக கடற்படை வீரர்களுக்கு வழங்கியமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது வைத்தியசாலை பணிப்பாளர் அதிகாரிகள் எங்கு இருந்தார்கள்? முகாமுக்கு சுகாதாரம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர் யார்? வைத்தியசாலை கழிவுகளை முறையான வகையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத தொற்று நோய் பரவும் வகையில் செயல்பட்ட அனைவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வீடுகளில் விடுமுறையில் இருந்த கடற்படை வீரர்களை உடனடியாக முகாமுக்கு அழைத்து அங்கு தங்க வைத்து வெளியில் கூட செல்ல முடியாமல் நோய்த் தொற்று பரவுவதற்கான அனைத்து வழிகளையும் ஏற்படுத்தி கொடுத்து இராணுவ வீரர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என கணித்து அவர்களை எந்த ஒரு பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்று வீரர்களின் நோய் பரிசோதனை கூடத்தை எலிகளின் கூடு நிலைக்கு மாற்றியமை கடுமையான பிழையாகும்.
ஏதேனும் ஒரு மருந்தினை பரிசோதனை செய்ய வேண்டுமாயின் அதற்கு உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படிமுறைகள் உள்ளன. அது தொடர்பில் நபர்களைத் தெளிவுபடுத்தி அவர்களது அனுமதியைப் பெற்று அந்த பரிசோதனை செய்ய முடியும். எனினும் வெலிசர கடற்படை முகாமிற்கு உள்ளே கடற்படை வீரர்களை பலாத்காரமாக பயன்படுத்தி ஊடகங்கள் வாயிலாக அவர்களை "வீரமிக்க இராணுவ வீரர்கள்", "வீரமிக்க கடற்படை வீரர்கள்" என்ற பெயரில் அழைத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை சிக்கலில் தள்ளிய இந்த செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாதது.
எனவே இது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு கடற்படை வீரர்களின் வாழ்க்கையை கஷ்டத்தில் தள்ளியமை தொடர்பில் முகாமுக்குள் முட்டாள்தனமான செயற்பாடுகளை பலாத்காரமாக கடற்படை வீரர்களுக்கு திணித்து தனிமைப்படுத்தல் சட்டத்தை புறந்தள்ளி முகாமுக்குள் அபாயமான சுகாதார பரிசோதனை என்பவற்றை நடத்திய அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் தேடி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(வெளிசர கடற்படை முகாமில் முட்டாள்தனமான புகைத்தல் மற்றும் வைத்தியசாலைக் கழிவுகள் அடங்கிய புகைப்படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.)
---------------------------
by (2020-05-25 21:46:07)
Leave a Reply