(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 15 பிற்பகல் 03.50) முன்னிலை சோஷலிஸ கட்சி நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக 'தனிமைப்படுத்தல் சட்டத்தின் பெயரில் ஜனநாயகத்திற்கு கை வைப்பதை தடுப்போம்' என்ற தொனிப் பொருளில் தொழிற்சங்க அமைப்புகள் சிவில் அமைப்புகள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகள் பல இணைந்து நாளை 16 ஆம் திகதி மாலை லிப்டன் சுற்று வட்டத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள அமைப்புக்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு,
அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிசார் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலை இலங்கையில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை மற்றும் கருத்து வெளியிடும் உரிமை என்பவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக நாட்டினுடைய தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் கருதுகின்றன.
கொரோனா தொற்று நோயை வைத்துக் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி அரசாங்கத்தில் அதிகாரம் படைத்தவர்கள் வழங்கும் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டியது இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஆதரிக்கும் அனைவரினதும் பொறுப்பாகும்.
நாளை நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தை பொது சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மத்திய நிலையத்துடன் தொடர்புடைய தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் மேலும் சில தொழிற்சங்க அமைப்புகள், பொது மக்கள் அமைப்புகள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகள் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
நாளை அதாவது ஜூன் 16ம் திகதி மாலை 3 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம்.
(CMU, CTU, UFL)
---------------------------
by (2020-06-16 14:17:05)
Leave a Reply