(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 26 பிற்பகல் 05.15) அமெரிக்க டொலர் 480 மில்லியன் எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கைக்கு கன்னத்தில் அறைவது போலான பதிலை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டர் வலைத் தளம் மூலம் வெளியிட்டுள்ளது. அது வருமாறு,
"எம்சிசி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட இருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ் எவ்வித நிதியும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை அல்லது செலவிடப்பட வில்லை. தயார்படுத்தலுக்கான நிதியம் இல்லாது செய்யப்பட்டது அல்லது திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளது. இலங்கையுடன் எம்சிசி ஒப்பந்தம் செய்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளது." (No MCC grant monies were ever transferred to or spent by the Government under the current $480 million grant. Funds for preparatory activities have been canceled or indefinitely postponed, pending the Government’s decision whether to proceed with the grant. -U.S. Embassy Colombo )
அதன்படி எவ்வித வட்டியுமின்றி இலங்கையில் போக்குவரத்து அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து கொள்ளல் மற்றும் காணி நிர்வாகத்தை முன்னேற்ற செல்லல் போன்றவற்றிற்காக இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 480 மில்லியன் அமெரிக்க டொலர் பெரும்பாலும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த ஒப்பந்தம் தொடர்பில் ராஜபக்சக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூறியவை எவையும் கட்டுப்பாடுகள் அல்ல.
எம்சிசி உடன்படிக்கை என்பது ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி முகவரான மில்லேனியம் சேலஞ்சர்ஸ் கூப்பரேஷன் பிரிவு மூலம் வழங்கப்படும் உதவி நிதியம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் அரச திணைக்கள மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரி பிரதானிகள் இதன் பணிப்பாளர் சபையில் இருக்கின்ற போதும் எம்சிசி சுயாதீனமாக வேறு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. நல்லாட்சி ஊக்குவிப்பு, சுகாதார சேவை கல்வி அபிவிருத்தி மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான முதலீடு உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாடுகளை தேர்ந்தெடுத்து நிதிய முகவர் பிரிவு போட்டித் தன்மையை ஏற்படுத்தும். தகுதி பெற்ற நாடுகள் உலக வங்கியின் வரிசைப்படுத்தலுக்கு அமைய மத்திய வருமானம் பெறும் நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கு 5 வருட காலங்களுக்கு 480 மில்லியன் டொலர் வழங்க அமெரிக்கா தீர்மானித்தது. தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் பொருளாதார நிலைமை தொடர்பில் ஆராய்ந்து உதவி செய்வது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இலங்கையின்பொருளாதார நிலைமைகள் தொடர்பில் பாவட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான மத்திய நிலையம் மற்றும் எம்சிசி உதவியுடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது.
இவ்வாறு இருக்கையில் கடந்த நவம்பர் மாதம் நாட்டில் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர் 2020 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து செயற்படும் வகையில் எம்சிசி உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் ஆராய அபூர்வமான நான்கு பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்தார். பொருளாதார நிபுணர் என சொல்லிக்கொள்ளும் ஆனால் இதுவரையில் எவ்வித உருப்படியான வேலைகளையும் செய்யாத கலாநிதி லலிதசிறி குனருவான் தலைமையில் போக்குவரத்து அமைச்சை குழப்பி அடித்த முன்னாள் செயலாளர் கலாநிதி பிஎஸ் ஜெயவீர ஜனாதிபதி சட்டத்தரணி என சொல்லிக்கொள்ளும் நிஹால் ஜெயவர்தனே மற்றும் எவ்வித திறமையற்ற நாலக்க ஜெயவீர ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் இடைக்கால அறிக்கையை கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட நிலையில் முழுமையான ஓர் ஆய்வு அறிக்கை 25ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றமை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு எம்சிசி ஒப்பந்தத்தின் ஊடாக 7.4 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் போன்றவை 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை ஆவணங்கள் எதுவுமில்லை எனவும் லலிதசிறி குனருவான் தெரிவித்ததாக அறிக்கை வெளியிடப்பட்டது. அத்துடன் எம்சிசி ஒப்பந்தத்திற்கு எதிராக முட்டாள்தனமான கருத்துக்கள் சிலவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.(அறிக்கையின் முழு வடிவம் இங்கே தரப்பட்டுள்ளது)
கொழும்பு அமெரிக்க தூதரகம் எம்சிசி உடன்படிக்கையின்கீழ் இலங்கைக்கு எவ்வித பணமும் வழங்கப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் வழங்கப்பட மாட்டாது என்ற தோரணையிலும் ட்விட்டர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளது.
வட்டியில்லாத மீண்டும் திருப்பி செலுத்த வேண்டிய அவசியமில்லாத இவ்வாறான உதவி ஒன்று நாட்டுக்கு கிடைக்க இருந்த போது அந்த 480 மில்லியன் அமெரிக்க டொலரை இல்லாது செய்வதற்கான வேலைகளை தாமரை மொட்டு கட்சியினர் செய்தனர். ஆனால் அதற்கு பதிலாக சீனாவிடமிருந்து 8 வீதம் என்ற அதிக வட்டியில் கடன் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நாடு தொடர்பான சிந்தனை இல்லை நாடு தேவையுமில்லை.
---------------------------
by (2020-06-28 12:30:14)
Leave a Reply