~

மஹிந்தானந்தவை நோக்கி திலும் அமுனுகம துப்பாக்கிச்சூடு..! மயிரிலையில் உயிர் தப்பிய மஹிந்தானந்த..! மஹிந்த கோட்டா மோதலின் புதிய வடிவம்..!

( லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 29 பிற்பகல் 2.35) ஏற்பட்ட கடுமையான கருத்து மோதலை அடுத்து ஆத்திரமடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் திலும் அமுனுகம தனது தனிப்பட்ட துப்பாக்கியை எடுத்து அதே கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் மஹிந்தானந்த அளுத்கமகேவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். நல்லவேளை துப்பாக்கியில் ரவைகள் இல்லாததால் துப்பாக்கி வெடிக்கவில்லை. அதனால் மஹிந்தானந்த அலுத்கமகே மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னரும் திலும் அமுனுகம மஹிந்தானந்தவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். 

லங்கா ஈநியூஸ் உள்ளக தகவல் பிரிவுக்கு வந்துள்ள செய்தியின்படி நேற்று 28 ஆம் திகதி மாலை கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவம் இடம்பெற்ற போது இருவரும் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய இருவரும் தவறி விட்டனர். 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பணத்திற்கு விற்கப்பட்டதாக அண்மையில் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்ட கருத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து திலும் அமுனுகம மஹிந்தானந்த அளுத்கமகேவுடன் ஏற்படுத்திக் கொண்ட வாக்கு வாதத்தின் காரணமாகவே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இவ்விருவருக்கும் இடையில் சிறிது காலம் தொட்டே மோதல் நிலை இருந்து வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரிய வந்துள்ளது. உண்மையில் இந்த இருவரும் கண்டி மாவட்டத்தில் ஒரே கட்சி ஒரே சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் விருப்பு வாக்கு போட்டி ஏற்பட்டுள்ளதுடன் திலும் அமுனுகம  மஹிந்த ராஜபக்சே தரப்பிலும் மஹிந்தானந்த அளுத்கமகே கோட்டாபய  தரப்பிலும் இருப்பதால் இந்த மோதல் மென்மேலும் வலுவடைந்து உள்ளதாக தெரியவருகிறது. 

நாமல் மற்றும் விஜய் மல்லையா சூழ்ச்சி குறித்து மஹிந்தவின் விரல் நீட்டல்..

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் திலும் அமுனுகம மஹிந்த ராஜபக்ச அணியில் இருப்பதுடன் மஹிந்தானந்த அலுத்கமகே அதே கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடுவதுடன் அவர் கோட்டாபய ராஜபக்ச அணி சார்பில் உள்ளார். 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றதாக கூறப்படும் போட்டி காட்டிக் கொடுப்பு தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே தகவல் வெளியிட்டது கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புக்கு அமையவே. அதன் மூலம் சவாலுக்கு உட்படுத்துவது வேறு யாரையும் அல்ல மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவை என தெரிய வந்துள்ளது. இந்த கிரிக்கெட் போட்டி காட்டி கொடுப்பின் ஒப்பந்தக்காரர் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் விஜய் மல்லையா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியை கண்டுகளிக்க நாமல் ராஜபக்ச இந்தியா செல்ல இந்தியாவில் இருந்து விமானத்தை தயாரித்து இலங்கைக்கு அனுப்பியது விஜய் மல்லையா என கூறப்படுகிறது. இந்தியாவில் நாமல் ராஜபக்ச தங்கியிருந்ததும் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான இடத்தில் ஆகும். இந்த டீல் தொடர்பான தகவல்கள் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றாக தெரியும் என்பதால் இது தொடர்பில் மேலதிக தகவல்களை இப்போதைக்கு வெளியிடாமல் இருக்க லங்கா ஈ நியூஸ் தீர்மானித்துள்ளது. காரணம் இந்த இரண்டு தரப்பினர் மூலமாகவே குறித்த விடயங்கள் விரைவில் அம்பலத்திற்கு வரும். 

வீர கெப்பட்டிபொலவின் வீடு முஸ்லிம் பாடசாலையாக மாற்றம்...

இருந்த போதும் மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் திலும் அமுனுகமவிற்கு கோட்டாவின் அணியை சேர்ந்த மஹிந்தானந்த அலுத்கமகே கருத்து அலர்ஜிக் ஆக இருப்பதற்கு காரணம் சாதாரண கருத்து மோதல் மாத்திரமன்றி இருவரும் ஒரே கட்சியில் ஒரே சின்னத்தில் ஒரே மாவட்டத்தில் போட்டியிடுவதால் விருப்பு வாக்கு மோதலும் உள்ளடங்குகிறது. 

இதற்கு முன்னர் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நெலுதெனிய உள்ளிட்ட திலும் அமுனுகமவின் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் மஹிந்தானந்த அளுத்கமகே சரத் அமுனுகம விற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் இது தொடர்பில் மஹிந்தானந்த அலுத்கமகேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கெட்ட வார்த்தைகளால் திட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதேவேளை மஹிந்தானந்த அலுத்கமகே உடன் இணைந்து பல காலம் செயல்பட்ட நவ்பர் ஹாஜியார் என்பவர் இம்முறை தேர்தலில் திலும் அமுனுகம உடன் இணைந்து செயல்படுவதால் மஹிந்தானந்த நிலவும் இடையேயான மோதல் வலுவடைய காரணமாக உள்ளது. ஹாஜியாரின் ஆதரவு இன்றி மஹிந்தவிற்கு முஸ்லிம் விருப்பு வாக்குகளை பெற முடியாது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

நவ்பர் ஹாஜியார் மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே இருவருக்கும் இடையில் பிளவு ஏற்பட காரணம் முஸ்லிம் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு கண்டி விளக்கமறியல் சிறைச்சாலை அமைந்திருந்த பழைய கட்டிடத்தை பெற்றுத் தருவதாக மஹிந்தானந்த வாக்குறுதி அளித்து விட்டு அதை நிறைவேற்ற தவறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விளக்கமறியல் சிறைச்சாலை அமைந்திருந்த கட்டிடம் வீர கெப்பெட்டிபொல வாழ்ந்த வீடு என்பதால் அதனை முஸ்லிம் பாடசாலைக்கு வழங்க முடியாது. 

பாதுகாப்பு அதிகாரியின் மூளையான வேலை..

இவ்வாறு மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் திலும் அமுனுகம இடையே காணப்பட்ட விரிசல் நேற்று இருவரும் குடிபோதையில் சந்தித்துக் கொண்டபோது பூதாகரமாக வெடித்துள்ளது.

திலும் அமுனுகம தனது தனிப்பட்ட துப்பாக்கியை எடுத்து மஹிந்தானந்தவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது இந்த சந்தர்ப்பத்தில் ஆகும். திலும் அமுனுகம குடிபோதையில் இருந்தால் அவரை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாது என முன்கூட்டியே அறிந்து கொண்ட அவரது பாதுகாப்பு அதிகாரி (PSO) துப்பாக்கியில் இருந்து ரவைகளை அகற்றி வைத்துள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கியில் ரவைகள் இல்லாததன் காரணமாக மஹிந்தானந்த அளுத்கமகே மயிரிழையில் உயிர் தப்பினார். 

இந்த சம்பவத்தின் பின்னர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவரான திலும் சுராஜ் பண்டார அமுனுகம கங்க சிரிபுற பாடசாலையின் முன்னாள் மாணவன் விற்பனை முகவர் மஹிந்தானந்த அலுத்கமகேவை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ஹோட்டல் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

மோதலை இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகாரிகளும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யாது இருக்கவும் வழி செய்தனர். எனினும் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு கண்டி பொலிஸார் விரைந்து சென்றபோது மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். 

இந்த மோதல் நிலை தொடர்பில் லங்கா ஈ நியூஸ் உள்ளக சேவைப் பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் இரண்டு தரப்பிலிருந்தும் யாராவது ஒருவர் முதலில் உயிரிழப்பர் என தெரிவித்தார். இதற்கு காரணம் இந்த இருவர் பின்னணியிலும் ஜனாதிபதியும் பிரதமரும் இருப்பதனாலாகும். 

சந்திரபிரதீப 

---------------------------
by     (2020-06-29 15:13:57)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links