~

ஆயுர்வேத சபை மற்றும் ஆணையாளர்கள் போதைப் பொருள் தடுப்பு பொலிஸ் வியாபாரத்தை விட அபாயமான வியாபாரத்தில்..!

கீர்த்தி ரத்நாயக்கவின் வெளியீடு

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 15 பிற்பகல் 11.30) தற்சமயம் சந்தைகளில் வெனிவெல் கட்டை, கொத்தமல்லி, மஞ்சள் தூள் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையில் கொத்தமல்லி செய்கை இடம்பெறுவதில்லை. அதனால் வருடத்திற்கு 13 ஆயிரம் மெற்றிக் தொன் கொத்தமல்லி இறக்குமதி செய்யப்படுகிறது. அச்சத்தின் பின்னர் இறக்குமதி செய்யப்படும் கொத்தமல்லியின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிக அளவு கொத்தமல்லி இறக்குமதி செய்யப்படுகிறது. வெனிவெல் கட்டையை இலங்கையின் சில வனப் பகுதிகளில் இருந்து பெற முடிகிறது. மஞ்சள் இலங்கையில் எந்த ஒரு வீட்டிலும் வளரக் கூடிய ஒன்றாகும். ஆனாலும் தற்போது அந்த பொருட்களும் இறக்குமதி பொருட்களாக மாற்றம் அடைந்துள்ளன. 

வெனிவெல் கட்டை என்பதன் விஞ்ஞானப் பெயர்  Coscinium fenestratum  என்பதாகும். அது Menispermaceae வர்க்கத்தை சேர்ந்தது. இதில் அடங்கியுள்ள ரசாயன பதார்த்தத்தை Berberine  என அழைப்பர். பேராசிரியர் பியல் பிரியங்கவின் கருத்துப்படி இந்த இரசாயன பதார்த்தங்கள் அடங்கும் வெணிவேல் கட்டை நன்றாக உலர்த்தப்பட்டு காணப்படும். நன்றாக உலர்த்தப்படாத போலியான வெனிவெல் கட்டை மற்றும் பொருட்கள் இலங்கை சந்தையில் விற்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் 267, 268, 269 ஆகிய சரத்துக்கள் படி தண்டப்பணம் அறவிடல் அல்லது ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய குற்றமாகும். 

போலி வெனிவெல் கட்டை மற்றும் கொத்தமல்லி இறக்குமதி..

கொரோனாவினால் ஏற்பட்ட அவசர நிலையின் காரணமாக கடந்த மாதங்களில் வெளிநாட்டிலிருந்து கொத்தமல்லி மற்றும் மஞ்சள் போன்றவை ஆயிரம் டொன் கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டன. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் தற்போது சந்தையில் விநியோகிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வெனிவெல் கட்டை கொத்தமல்லி மற்றும் மஞ்சள் போன்றவை போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தமல்லி மற்றும் வெனிவெல் கட்டை போன்றவை தரமானவை அல்ல என ஆயுர்வேத வைத்தியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்வாறு போலி வெனிவெல் கட்டை மஞ்சள் போன்றவை மனித உடம்புக்குள் சேர்வதால் நோய்கள் ஏற்படும் என வைத்தீர்கள் எச்சரித்துள்ளனர். 

போலி வியாபாரத்தின் பங்காளிகள்..

தொற்றுநோய் காலத்தில் பல விளம்பரங்கள் மூலமாக கொத்தமல்லி வெனிவெல் கட்டை போன்றவற்றை பருகுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற கருத்து சமூக மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் போலியான கொத்தமல்லி வெனிவெல் கட்டை போன்றவை விற்கப்படுவதால் அதனை பருகும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து விரைவாக நோய்வாய்ப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு என ஆயுர்வேத சபை அனுமதி அளிக்கிறது. அதே போன்று இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத பொருட்களின் தரம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியது இந்த ஆயுர்வேத சபையின் திணைக்களத்தின் கடமையாகும். எனவே போலியான ஆயுர்வேதப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது ஆயுர்வேத சபை மற்றும் திணைக்களத்திற்கு தெரியாமல் அல்ல. இவர்களும் இந்த போலி வியாபாரத்தின் பங்காளிகள் ஆவர். 

ஆயுர்வேத ஆணையாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை..

இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வினியோகிக்கப்படும் கொத்தமல்லி மற்றும் வெனிவெல் கட்டை போன்றவை போலியானவை அல்லது தரம் குறைந்தவை என்ற முறைப்பாடுகள் பல வந்துள்ளன. ஆனால் ஆயுர்வேத திணைக்களம் இது தொடர்பில் மௌனம் காக்கிறது. போலி ஆயுர்வேத மருந்து பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க அனுமதி அளிப்பது இவர்கள் என்பதால் இந்த மௌனம் காப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவசர பரிசோதனை நடவடிக்கை செய்து இந்த போலி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதில் சிக்கப் போவது தாங்கள் என்பதை இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இந்த போலி வியாபாரத்துடன் தொடர்பு வைத்தில்லை என்ற போதும் இவ்விடயத்தில் அவர்கள் அமைதி காப்பதற்கான காரணம் இறக்குமதியை முன்னெடுப்பது வேலை தெரியாத டாசன் ஒருவர் என்பதால் ஆகும். 

வேலை செய்யும் வீரர் சற்று விழித்தெழ வேண்டும்.. 

இலங்கையின் வனப்பகுதிகளில் வேண்டிய அளவு தரமான வெனிவெல் கட்டை காணப்படுகிறது. எனினும் அவற்றை பெறுவதற்கு சட்டம் தடையாக உள்ளது. இலங்கையில் இரண்டு சட்ட புத்தகங்கள் உள்ளமை இரகசியமான விடயமல்ல. அதுதான் ஏழை எளியவர்களுக்கு ஒரு சட்ட புத்தகமும் பணக்கார திமிர் பிடித்த தரப்பினருக்கு ஒரு சட்ட புத்தகமும் உள்ளதாகும். பணக்கார பெரியவர்களுக்கு புல்டோசர் கொண்டு காட்டை அழிக்க முடியும். ஆனால் ஏழை எளிய சிறியவர்கள் விறகு துண்டு வெட்டினால் இறுதியில் கைதாகும் நிலைக்கு தள்ளப்படுவர். கடந்த மாதங்களில் பல பகுதிகளில் வெனிவெல் கட்டை வெட்டிய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலை செய்யும் வீரர் நாட்டிற்கு ஏதேனும் செய்ய நினைத்தால் வெனிவெல் கட்டை மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை இலங்கையில் இருந்தே பெற்று சந்தைக்கு விநியோகிக்க ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். 

போதைப் பொருள் தடுப்பு போலீஸ் வியாபாரத்தை விட அபாயமான வியாபாரம்..

அண்மையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று நேற்று கைது செய்யப்பட்டாலும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் போதைப் பொருள் வியாபாரிகளுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவது காலம் தொட்டு நடந்து வருவதாகும். லங்காஈநியூஸ் இணையம் இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் செய்திகளையும் வெளியிட்டுள்ளது. ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர்கள் வியாபாரிகளுடன் இணைந்து தரமற்ற போலி ஆயுர்வேத மருந்துகளை இறக்குமதி செய்வதானது போதை பொருள் தடுப்பு போலீசார் போதைப் பொருள் வியாபாரிகளுடன் இணைந்து முன்னெடுத்த வியாபாரத்தை விட அபாயமானது. காரணம் குடு பயன்படுத்துவோர் சிறிய அளவில் காணப்படுகின்றனர். ஆனால் கொரோனா நோய்த் தொற்றின் பின்னர் கொத்தமல்லி வெனிவெல் கட்டை போன்றவற்றை பயன்படுத்துவோரின் தொகை பாரியளவு அதிகரித்துள்ளது. போலி ஆயுர்வேத மருந்துகளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து மக்கள் நோய்த்தொற்றுக்கு விரைவில் உள்ளாகும்போது அதன் முடிவு விபரீதமாகும். 

கீர்த்தி ரத்னாயக்க

முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி 

---------------------------
by     (2020-07-16 09:56:15)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links