~

இலங்கையில் சர்லொக் ஹோம்ஸ் கொலை சூழ்ச்சியின் முதல் நடவடிக்கை ஆரம்பம், இந்த பூலோகத்தில் இல்லாத குற்றச்சாட்டை சுமத்தி சானி அபேசேகர கைது..!!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 31 முற்பகல் 9.45) இந்த பூலோகத்தில் எந்த ஒரு நாட்டிலும் இடம் பெறாத காரணம் ஒன்றை முன்வைத்து இலங்கையில் சர்லோக் ஹோம்ஸ் என்று அழைக்கப்படும் இரகசிய பொலிஸ் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சானி அபேசேகர இல்லாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ராஜபக்சே மயமாக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

கோடீஸ்வர வர்த்தகர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் உள்ளிட்ட குழுவினரின் வழக்கு விடயத்தில் சானி அபேசேகர சாட்சியாளர்களான போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார். 

பூலோக சாதனை..

அப்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் வாஸ் குணவர்த்தனவின் வீட்டை சோதனை செய்தபோது மொஹமட் ஷீயாம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்ட நிலையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் குற்றவியல் சட்டத்தில் 127 வது ஷரத்தின் படி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இது தொடர்பில் வழக்கு விசாரணையின் போது போலீசார் உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சாட்சி அளித்திருந்த நிலையில் அதற்கு எதிர் சாட்சிகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இதிலுள்ள புதுமையான விடயம் என்னவென்றால் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சாட்சியாளர்கள் தொடர்பான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை சாட்சியாளர்களுக்கு எவ்வித அழுத்தங்களும் தெரிவிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திடீரென சாட்சியாளர்களை சானி அபேசேகர அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து ஆட்சியாளர்கள் தொடர்பில் போலீசாருக்கு கேள்வி எழுப்ப முடியாது என்ற சட்டம் இந்த உலகத்தில் உள்ள நிலையில் ராஜபக்சக்களின் குற்றப்புலனாய்வு பிரிவினர் சானி அபேசேகர மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். 

சாட்சிகளுடன் ஆடும் ஆட்டம்..  

அன்று காட்சி அளித்த கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவு உறுப்பினர்களை பணத்துக்கு கொள்வனவு செய்து அவர்களை வைத்தே 'எமக்கு அழுத்தம் கொடுத்தனர்' என்று சொல்லிக் கொடுத்து நாடகம் ஆடுகின்றனர்.

 உயர்நீதிமன்றத்தில் வாஸ் குணவர்த்தனவின் இந்த வழக்கை விசாரணை செய்த 5 நீதிபதிகள் குழுவில் ஒருவரான பிரசன்ன ஜெயவர்தன உயிரிழந்த நிலையில் அதனை ஆயுதமாக எடுத்துக் கொண்டு இந்த நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் நீதிபதி ஒருவர் உயிரிழந்தால் குறித்த வழக்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரணை செய்யப்படும். அதன்படி உயர் நீதிமன்றத்தில் உள்ள வாஸ் குணவர்தனவின் மேல்முறையீட்டு மனு சிசிர டி ஆப்ரூ, பிரீத்தி பத்மன் சூரசேன, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் துரைராஜா ஆகிய ஐந்து நீதிபதிகள் குழு முன்னிலையில் எதிர்வரும் ஒக்ரோபர் 26, 27 மற்றும் நவம்பர் இரண்டாம் திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. ஆனாலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் சாட்சி எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. நீதிமன்றத்தில் போலீசார் அளித்த சாட்சி மீள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது. இவ்வாறு இருக்கையில் ஆட்சியாளர்களுக்கு சானி அபேசேகர அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன் வைத்து அவரை கைது செய்திருப்பது பழிவாங்கல் என்பது தெளிவாக தெரிகிறது.  

சானி மீது குற்றச்சாட்டு முன்வைப்பதற்கான உண்மை காரணம்..

மற்றும் ஒரு பக்கத்தில் 2013 ஏப்ரல் மாதத்தில் முஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்ட போது நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்சவே இருந்தார். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்தார். வாஸ் குணவர்தனவிற்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது இந்த இருவரின் பணிப்பின் கீழ் ஆகும். இதற்கு காரணம் முஹமட் ஷியாம் என்பவர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் ஆவார். மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் 3 நீதிபதிகளை நியமித்தது மஹிந்த ராஜபக்சவின் அடியாள் என கூறப்படும் அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆவார். நிலைமை இவ்வாறு இருக்கையில் வாஸ் குணவர்த்தனவின் வழக்கில் சானி அபேசேகரவை கைது செய்வதற்கு காரணம் கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுடைய குறைகளை வெளியில் கொண்டு வந்தது சானி அபேசேகர என்பதனாலாகும். 

சானி அபேசேகரவை சிறைக்குள் கொலை செய்ய திட்டம்..

லங்கா ஈ நியூஸ் ஆகிய நாம் தெளிவான எச்சரிக்கை ஒன்றை முன்வைக்கிறோம். இது சானி அபேசேகரவை சிறைக்குள் வைத்து கொலை செய்வதற்கான முதற்கட்ட சூழ்ச்சியாகும். அதற்கு காரணம் சானி அபேசேகர என்பவர் நாட்டில் பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பிரபல குற்றங்களுடன் தொடர்புடைய சுமார் 112 வழக்குகளின் பிரதான சாட்சியாளர் ஆவர். எனவே சானி கொலை செய்யப்படும் போது குறித்த 112 வழக்குகளின் குற்றவாளிகள் வெளியில் வந்து விடுவர். இந்த குற்றவாளிகள் பட்டியலில் ராஜபக்சக்கள் உள்ளடங்குகின்றனர். 'எமக்கு மீண்டும் சிறை செல்ல முடியாது' என பசில் ராஜபக்ச பகிரங்க மேடையில் அறிவித்ததன் காரணம் என்ன என்பதை தற்போது புரிந்து கொள்ள முடிகிறது. சானி அபேசேகர போன்றவர்கள் முன்னெடுத்த விசாரணைகளில் குற்றம் செய்திருந்தால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவற்றை மூடி மறைக்க முடியாது. காரணம் பெசில் போன்றவர்களின் வழக்குகளில் பி அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பசில் ராஜபக்ச சிறைக்கு போகாமல் இருக்க வேண்டுமானால் அவர் செய்ய வேண்டியது பிரதான சாட்சியாளரை அழிப்பதாகும். அதற்கான நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.   

நாங்கள் மீண்டும் அவதானத்திற்கு கொண்டு வருகிறோம். சானி அபேசேகர கொலை செய்யும் சூழ்ச்சி நிறைவேற்றப்பட்டால் அதற்கு முழுமையான பொறுப்பை ராஜபக்சக்கள் ஏற்க வேண்டும். வேறு யாரும் பொறுப்பல்ல. உண்மையில் ஐந்தாம் திகதி தேர்தல் நடத்துவதற்கு அர்த்தமில்லை. தேர்தல் ஒன்றை வைத்துக் கொண்டு சானி அபேசேகர போன்றவர்கள் இவ்வாறு பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பழிவாங்கல்கள் இடம்பெறுமாயின் தேர்தல் நடந்த பின்னர் நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவு சீரழிவை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

வெட்கப்பட வேண்டிய மோசமான போலீசார்..  

சானி அபேசேகர என்பவர் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்பட்ட அதிகாரி அல்ல. அவர்  முதுகெலும்புள்ள நேர்மையான அதிகாரி ஆவார். குறைந்தளவு யாரிடமும் தேனீர் கோப்பை வாங்கி பருகாதவர். இவ்வாறான நேர்மையான அதிகாரி ஒருவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்த பொலிசார் வெட்கப்பட வேண்டும். இவர்களது தாய் தந்தையரும் வெட்கப்பட வேண்டும். சட்டத்தை மதிக்கும் நாட்டு மக்கள் இவர்கள் முகத்தில் காறி உமிழ வேண்டும். 

நாட்டின் சட்டத்தை முறையாக நடைமுறைப் படுத்துவதாக கூறிக் கொண்டு ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்த வேலை செய்யும் வீரரான ஜனாதிபதி, பதவி ஏற்றவுடன் முதலில் செய்தது சானியை பழிவாங்கும் திட்டத்தை முன்னெடுத்தார். வேலை நிறுத்தப்பட்ட போது வழங்கப்பட இருந்த மிகுதி சம்பளத்தையும் வழங்கவில்லை. நாட்டைவிட்டு வெளியேறவில்லை. ஓய்வுபெற இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இவர் சிவப்பு பச்சை நீலம் என கட்சி நிற பார்த்து செயல்படவில்லை. அதனால் இன்று சானி சார்பாக கதைப்பதற்கு யாருமில்லை. ஆனால் இந்த நாட்டில் சட்டத்தை மதிக்கும் மக்களிடம் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புகிறோம். சானி அபேசேகர போன்ற நியாயமான அதிகாரிகளுக்கு ஆதரவாக நீங்கள் குரல் கொடுக்காவிட்டால் நாளை உங்களுடைய பிள்ளைகளுக்காக குரல் கொடுக்க யாரும் வரமாட்டார்கள். அவ்வாறு வருபவர்களை ராஜபக்சக்கள் வர விடவும் மாட்டார்கள். சட்டத்தை மதிக்காமல் அதற்காக துணை போவதை விட இறப்பது மேலாகும்.! 

-சந்திரபிரதீப்-

---------------------------
by     (2020-07-31 11:47:38)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links