(லங்கா ஈ நியூஸ் 2020 ஆகஸ்ட் 7 பிற்பகல் 6.00) இலங்கையில் இடம்பெற்ற 2020ம் ஆண்டு 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. தேசிய காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி ஆகியன தலா ஒவ்வோர் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. இந்த கட்சிகள் அரசாங்க ஆதரவு அணிகள் என்பதால் 152 என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். இதேவேளை, 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், 7 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வீதமும் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி மாவட்ட மட்டத்தில் இவ்வித ஆசனங்களையும் வெற்றிகொள்ளவில்லை. ஒரு தேசிய பட்டியல் ஆசனம் மாத்திரமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஞானசார தேரர் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வார்.
2020 பொதுத் தேர்தல் - இறுதி முடிவு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்ற மொத்த வாக்குகள் - 68,53,693 - 59.09%
மாவட்ட மட்டத்தில் 128 ஆசனங்கள் 18 மாவட்டங்களில் வெற்றி
தேசிய பட்டியல் ஆசனங்கள் - 17
மொத்த ஆசனம் - 145
ஐக்கிய மக்கள் சக்தி - மொத்த வாக்குகள் 27,71,984 - 23.9%
வென்ற மாவட்டம் திருகோணமலை
மாவட்ட மட்டத்தில் 47 ஆசனங்கள்
தேசிய பட்டியல் - 7
மொத்த ஆசனங்கள் - 54
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - மொத்த வாக்குகள் - 3,27,168 - 2.82%
மாவட்ட மட்ட 9 ஆசனங்கள்
தேசிய பட்டியல் 1
மொத்த ஆசனங்கள் - 10
தேசிய மக்கள் சக்தி - மொத்த வாக்குகள் - 4,45,958 - 3.84%
மாவட்ட மட்டத்தில் 2 ஆசனங்கள்
தேசிய பட்டியல் - 1
மொத்த ஆசனங்கள் - 3
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - மொத்த வாக்குகள் 61,464 - 0.53%
மாவட்ட மட்டத்தில் பெற்ற ஆசனங்கள் - 2
தேசிய பட்டியல் இல்லை.
ஐக்கிய தேசிய கட்சி - மொத்த வாக்குகள் 2,49,435 - 2.15%
ஒரு தேசிய பட்டியல் மாத்திரம்
தேசிய காங்கிரஸ் - அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனம் (அதாவுல்லா)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - யாழ்ப்பானத்தில் ஒரு ஆசனம் - அங்கஞன் ராமநாதன்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - மாவட்ட மட்டத்தில் ஒரு ஆசனம்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - ஒரு ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி - மட்டக்களப்பில் ஒரு ஆசனம் - பிள்ளையான்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - மாவட்ட மட்டத்தில் ஒரு ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - மாவட்ட மட்டத்தில் ஒரு ஆசனம் வன்னி (பதியூர்தின்)
முஸ்லிம் தேசிய கூட்டணி - ஒரு ஆசனம்
எங்கள் மக்கள் சக்தி - மொத்த வாக்குகள் 67,758 - 0.58%
ஒரு தேசிய பட்டியல் - 1 (ஞானசார தேரர்)
---------------------------
by (2020-08-08 05:52:08)
Leave a Reply