(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 14 பிற்பகல் 05.30) ஐக்கிய தேசியக் கட்சியில் எழுந்துள்ள தலைமைத்துவப் பிரச்சினையால் அந்தக் கட்சி இரண்டாக பிளவுபட்டு காணப்படும் நிலையில் அனைவரது விருப்பத்துடனும் கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கரு ஜயசூரியவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அவர் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார். அதில் பிரதானமான ஒன்று கட்சி தலைவர் பதவியை ஏற்பதானால் சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் மற்றையது அனைவரது விருப்பத்துடனும் தனக்கு கட்சித் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் கரு ஜெயசூரிய கோரிக்கை முன்வைத்திருந்தார்.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் கட்சியிலுள்ள அனேகமானோர் கரு ஜயசூரியவை தலைமை பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும் கரு ஜெயசூரிய அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் அழைப்பு விடுப்பதாலும் கட்சி தற்போது வீழ்ச்சியடைந்து காணப்படுவதாலும் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு 72 மணித்தியாலங்கள் தேவை என கூறியிருந்தார். அதன் பின்னர் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கரு ஜெயசூரிய அனைவரது விருப்பத்துடனும் தலைமைத்துவப் பதவியை ஏற்றுக் கொள்ள தயார் என அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் கரு ஜெயசூரியவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி உள்ளது. இதில் ஒருவரை தவிர ஏனைய அனைவரும் சஜித் பிரேமதாச கட்சித் தலைமைப் பதவியை ஏற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பௌத்த பிக்குகள் கிறிஸ்தவ மதகுருக்கள் இஸ்லாம், ஹிந்து மத குருக்களும் சிவில் அமைப்பின் தலைவர்களும் தனித்தனியாக கரு ஜயசூரியவை தொலைபேசியில் அழைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று கொண்டு உறுதியான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலைமை தொடர்பில் தெரிந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச கரு ஜயசூரியவின் வருகையின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்து வலுவடைந்து விடும் என்ற அச்சத்தில் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்து கட்சித் தலைவராக வைத்திருப்பதற்கான அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். கருவை தடுத்து நிறுத்துவதற்காக மகிந்த ராஜபக்ச ஊடக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள தனக்கு ஆதரவான நபர்களிடம் தொலைபேசி அழைப்பு எடுத்து கரு ஜயசூரியவை தலைமைப் பதவிக்கு நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்.
கட்சித் தலைமைப் பதவி பிரச்சினையை தீர்த்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி உள்ளதுடன் புதிய தலைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற இனத்திற்கும் வந்துள்ளது. கட்சி தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட நால்வரும் கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது உள்ள நிலைமையை ஆராய்ந்து பார்க்கும் போது ராஜபக்ச பிரதமர் மற்றும் ராஜபக்ச ஜனாதிபதி ஆகியோர் இடையே சகோதர முரண்பாடு ஏற்படாவிட்டால் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கம் நிலையாக செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதாக கூறிய ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறது. ஆனால் அது அவ்வாறு நடப்பதில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கு ஏதாவது ஒரு சேவையை செய்ய முயற்சிக்கின்ற நிலை காணப்படுகின்ற போதும் அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களை பார்க்கும் போது அதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. அமைச்சரவையில் அலி சப்ரி, ரமேஷ் பத்திரன ஆகியோரை தவிர ஏனைய அனைவரும் பழைய வயின் போன்றவர்களே. தற்போதைக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எதிர்கொண்டு வரும் 7 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பண உதவிகள் கப்பல் மூலம் இலங்கைக்கு வந்து சேர நாளாகும் என ஊடகங்களில் பகிரங்கமாக கருத்து வெளியிட்ட முட்டாள்தனமான நபருக்கு துறைமுக அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய நாடொன்றை கட்டி எழுப்புவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை காணப்படும்போது பிரபலமான எதிர்க் கட்சி ஒன்றின் அவசியம் உணரப்படுகிறது. அதற்காக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுக்கக்கூடிய மக்களை ஒன்று திரட்ட கூடிய புத்தி சாதுரியம் மிக்க பிரபல எதிர்கட்சி ஒன்று நாட்டு மக்களுக்கு அவசியமாக இருக்கிறது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான அதிகாரப் போட்டி மேலோங்கி நின்ற நிலையில் இருவரும் விலகிக் கொண்டு கட்சியின் தலைமைப் பதவியை கரு ஜயசூரியவிற்கு வழங்குமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் இருவரும் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்க பூஜ்ஜியத்தில் விழுந்து சஜித் பிரேமதாசவிற்கும் படுதோல்வி ஏற்பட்டு ராஜபக்சக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்றதே நடந்தேறியுள்ளது.
சஜித் பிரேமதாச பாராளுமன்ற தேர்தலில் 54 உறுப்பினர்களை பெற்ற போதும் ஜனாதிபதி தேர்தலில் அவர் பெற்றுக் கொண்ட 55 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளை பெற முடியாமல் போயுள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் 27 ஆயிரத்து 71 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே சஜித் பிரேமதாஸவின் அணியினால் பெற முடிந்துள்ளது. இதனை ஆராய்ந்து பார்க்கும் போது ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த சுமார் 20 லட்சம் பேர் இந்த பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கோ ரணில் விக்ரமசிங்கவிற்கோ வாக்களிக்கவில்லை என்பது புலப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் திசைகாட்டி சின்னத்திற்கும் ஜனாதிபதி தேர்தலை விட 27000 வாக்குகள் மாத்திரமே அதிகமாக கிடைத்துள்ளது. எனவே இதன் மூலம் தெளிவாக தெரியும் விடயம் சுமார் 20 லட்சம் பேர் மஹிந்த ராஜபக்ச அணிக்கு எதிரானவர்கள் என்ற போதும் சஜித், ரணில் முரண்பாட்டில் விரக்தியடைந்து வாக்களிக்கவில்லை.
கரு ஜயசூரியவின் வருகை மூலம் குறித்த 20 லட்சம் வாக்குகளை மீளப் பெற முடியும். அதற்காக செய்ய வேண்டியது ஒன்றுதான். அதுதான் ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமை. இந்த ஒற்றுமை இருந்தால் வடக்கு தவிர்ந்து 50 லட்சம் வாக்குகளுக்கு போராட முடியும்.
---------------------------
by (2020-08-16 12:51:17)
Leave a Reply