(லங்கா ஈ நியூஸ் 2020 ஆகஸ்ட் 19 பி.ப 5.40) கடந்த 17ஆம் திகதி சுமார் எட்டு மணித்தியாலங்களாக நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டமைக்கு சதித் திட்டமே காரணம் என லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவைக்கு செய்தி வந்துள்ளது.
இந்த சதி வேலையை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பிரதான கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. அனல் மின் நிலையத்தின் ஜெனரேட்டரில் சாதாரணமாக 3030 RPM காணப்பட வேண்டும் என்ற போதும் அன்றைய தினம் 3060 RPM ஆக அதிகரிக்கப்பட்டு இருந்ததாக தெரிய வருகிறது. இதனால் மின் விநியோகம் அதிகரிக்கப்படும். நுரைச்சோலை அனல் மின் நிலையம் 50.5 (Frequency) அலைவரிசையை தாங்கக் கூடியது. எனினும் RPM அதிகரிக்கப்பட்ட பின்னர் அலைவரிசை 52 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டதால் ஜெனரேட்டர் செயலிழக்கும். செயலிழக்கும் ஜெனரேட்டரை மீள செயல்படுத்த சுமார் மூன்று நாட்கள் செலவாகும். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் மூன்று ஜெனரேட்டர்கள் உள்ள நிலையில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இருக்குமாயின் 3 ஜெனரேட்டர்களும் ஒரே நேரத்தில் செயலிழக்க வாய்ப்பில்லை.
இலங்கை மின்சார துறையில் காணப்படும் 'டீசல் மாஃபியா' காரணமாக இந்த சதிச் செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. தற்காலத்தில் டீசல் நிலையங்களிலிருந்து மின்சார கொள்வனவு இடை நிறுத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து இலங்கைக்கு தேவையான மின்சாரத்தில் 45 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு பொறுப்பாக தனியார் நிறுவனம் ஒன்று செயற்பட்டு வருகின்ற நிலையில் அவை டீசல் மாபியாவுடன் தொடர்புபட்ட நபர்களால் செயல்படுத்தப்படுகிறது.
மின்சாரத் தடை ஏற்பட்டதன் பின்னர் சுமார் 75 சதவீதமான பகுதிகளுக்கு மீள மின்சாரம் வழங்கப்பட்ட இந்நிலையில் தற்போது 100 வீதம் மின் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இயங்கவில்லை.
இந்த சதித் திட்டம் தொடர்பில் இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதென தெரிய வருகிறது.
---------------------------
by (2020-08-19 15:02:31)
Leave a Reply