-எழுதுவது ஜெயிலர் போட்டா
(லங்கா ஈ நியூஸ் 2020 ஆகஸ்ட் 19 பிற்பகல் 09.40) கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி 'சிறைச்சாலைக்குள் இருந்து துமிந்தவின் கெட்போய் காட்டெல் பாதாள குழுவினர் போதைப்பொருள் மறைத்து வைத்திருக்கும் ஞானசாரவின் பன்சலை மற்றும் பாதாள குழுவிடம் சன்மானம் பெறும் எழுத்தாளர்' என்ற தலைப்பில் ஜெயிலர் பொட்டாவினால் லங்கா ஈ நியூஸ் ஊடாக இரகசிய தகவல் வெளிக் கொணரப்பட்டது. மௌவுபிம பத்திரிகையின் எழுத்தாளர் பிரசாத் அபேவிக்ரம என்பவர் கடந்த 17ஆம் திகதி மாலை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர நிலந்த கரசிங் ஆராச்சி உள்ளிட்ட குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஹோமாகம பிட்டபன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பலகை தயாரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தும் பாரிய தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டன. குறித்த ஆயுதங்களை தம்புளையில் இருந்து கொழும்பிற்கு சூட்சமமாக கொண்டுவர பூரண ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டதாக டிரான் அலஸின் மௌவுபிம பத்திரிகை எழுத்தாளர் பிரசாத் அபேவிக்ரம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குடு துமிந்தவின் 'கெட்போய்' காட்டேல் பாதாள உலகக் குழுவின் சிறைச்சாலையில் உள்ள சண்டியர் கொஸ்கொட தாரக்கவிற்கு சொந்தமான குறித்த சட்டவிரோத ஆயுதங்கள் தம்புள்ள பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து விரட்டப்பட்ட இராணுவ வீரர்களால் குறித்த ஆயுதங்கள் பாதாள உலகக் குழுவிற்கு விற்க்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய்கள் சிலர் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா கால பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி தனது ஊடக அடையாள அட்டை மற்றும் சட்டக்கல்லூரி அடையாள அட்டை என்பவற்றை பயன்படுத்தி இந்த ஆயுத கடத்தலை மேற்கொண்ட எழுத்தாளர் பிரசாத் அபேவிக்ரம இதற்கென கொஸ்கொட தாரக்கவிடமிருந்து மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திலீத் ஜெயவீரவின் அருண பத்திரிகையில் பணியாற்றும் திஸ்ஸ ரவீந்திர பெரேரா என்ற எழுத்தாளரே கொஸ்கொட தாரக்கவை பிரசாத் அபேவிக்ரமவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதேவேளை தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள கொஸ்கொட தாரக்கவின் சகோதரரை சட்டவிரோதமாக நாடு கடத்துவதற்கு என அருண திஸ்ஸ மற்றும் மாவ்பிம பிரசாத் ஆகியோருக்கு கொஸ்கொட தாரக்க 20 லட்சம் ரூபா வரை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மவுபிம பத்திரிக்கையின் உரிமையாளர் டிரான் அலஸ் பிரதம ஆசிரியர் சிசிர பரனதந்ரி மற்றும் அருண பத்திரிக்கையின் உரிமையாளர் திலித் ஜெயவீர பிரதான ஆசிரியர் மஹிந்த இலேபெரும ஆகியோர் இணைந்து தமது கோலயாக்கலை காப்பாற்றுவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி, பிரதமர் வரை உள்ள அனைத்து தொடர்புகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஆடைகளின்றி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்படுபவர்கள் என்பதாலும் அருண திலித் மற்றும் தாமரை மொட்டு கட்சியில் தேசியப் பட்டியல் காசு கொடுத்து பெற்ற டிரான் அலசின் நண்பர்கள் என்பதாலும் அனைத்து விசாரணைகளும் முடக்கப்பட்டு விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு அழுத்தம் வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் முதல் கட்டமாக இந்த செய்தியை இலங்கை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தாமல் இருப்பதில் இவர்கள் வெற்றி கண்டுள்ள போதிலும் அடுத்தடுத்து வரும் நாட்களில் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
பாதாள உலகக் குழு தலைவர்களிடம் சன்மானம் பெற்றுக் கொண்டு நாள்தோறும் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு அருண மற்றும் மாவ்பிம பத்திரிகை எழுத்தாளர்கள் முன்னெடுக்கும் வியாபாரங்கள் தொடர்பில் லங்கா ஈ நியூஸ் பெயர் விலாசத்துடன் அம்பலப்படுத்தியது. இன்று அனைத்தும் உண்மை என நிரூபணமாகியுள்ளது.
---------------------------
by (2020-08-19 15:08:44)
Leave a Reply