(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 27 பிற்பகல் 4.45) நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் சந்தருவான் சேனாதீயவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 14 மனுக்களும் மனு தாக்கல் செய்த ஓவிட்டிகலகே மதுர விதான என்பவரால் (தற்போதைய தாமரை மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்) 25ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மதுர விதானகே இவ்வாறு மீளப் பெற்றுள்ளார். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுவதற்கு முன்னரே வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாக மதுர விதானகே தெரிவித்ததன் காரணமாக மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. எல்.ரி.பி தெஹிதெனிய, யசந்த கோதாகொட மற்றும் ஏ. ஜி.ஆர் அமரசேகர ஆகிய மூன்று நீதியரசர்கள் குழுவினால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் சந்தருவன் சேனாதீர வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டு இருந்த நிலையில் சட்டத்தரணி சந்திரசிறி செனவிரத்ன, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியோரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். அழைப்பாணை கொடுக்கப்பட்ட பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி உபுல் குமாரபெரும நீதிமன்றில் முன்னிலையாகினார். 2016 நவம்பர் 23ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு 2020 ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை சுமார் நான்கு வருட காலங்களுக்கு மேலாக லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவிற்கு அழைப்பாணை வழங்க முடியாத காரணத்தால் வழக்கு விசாரணை இடம்பெறவில்லை என்பதுடன் தொடர்ந்து வழக்கு பிற்போடப்பட்டு வந்தது. நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை கையளிக்காமல் வழக்கு விசாரணை மேற்கொள்ள முடியாது. அழைப்பாணை கிடைக்கப் பெறாததால் லங்கா ஈ நியூஸ் சார்பில் நீதிமன்றில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலை ஆகவில்லை.
எவ்வாறாயினும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தாலும் லங்கா ஈ நியூஸ் நீதிமன்றத்தை அவமதித்ததாக நிரூபித்து இருக்க முடியாது என்பது எமது நம்பிக்கை. காரணம் பதினான்கு மனுக்களில் நீதிபதிகளின் மோசமான செயற்பாடுகள் தொடர்பில் லங்கா ஈ நியூஸ் வெளியிட்ட செய்திகள் ஆதாரத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த ஒவ்வொரு செய்திகளிலும் நீதிபதிகளின் மோசமான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இறுதியில் இந்த நீதிபதிகளின் நடவடிக்கைகள் காரணமாக முழு நாட்டு மக்களுக்கும் நீதிமன்ற கட்டமைப்பின் மீது உள்ள நம்பிக்கை இழக்க படுவதாக சுட்டி கட்டப்பட்டிருந்தது. அதனால் குறித்த செய்திகளை நீதிமன்ற அவமதிப்பு செய்திகளாக கருத முடியாது. எனவே லங்கா ஈ நியூஸ் இணைய செய்தி பொய் என நினைத்திருந்தால் குறித்த நீதிபதிகள் மான் நஸ்ட வழக்குத் தாக்கல் செய்து நட்ட ஈடு கோரி இருக்கலாம். ஆனால் நீதிபதிகள் மோசமான காரியங்களில் ஈடுபட்டிருந்த காரணத்தால் லங்கா ஈ நியூஸ் மீது மான நஸ்ட வழக்கு தாக்கல் செய்து அதனை நிரூபிக்க முடியாது போய்விடும் என்ற காரணத்தினால் எந்த ஒரு நீதிபதியும் சிவில் வழக்கு தாக்கல் செய்யவில்லை.
எவ்வாறாயினும் இந்த வழக்கு தாக்கல் செய்த மதுர விதானகே என்ற நபர் வழக்கு தாக்கல் செய்ய உண்மையான காரணம் உள்ள நபர் என கருத முடியாது. இவர் லங்கா ஈ நியூஸ் மீது கோபம் கொண்ட ஒருவர் அல்ல. பிரிதொருவரால் ஏவி விடப்பட்ட நபர் மாத்திரமே. இவரை வழக்கு தாக்கல் செய்ய தூண்டியவர் இந்த உலகத்தில் உருவான மிக மோசமான அரச தலைவர்களில் முக்கிய இடத்தைப் பெறும் மைத்திரிபால சிறிசேன மற்றும் கிளி மகாராஜா ஆகியோர் ஆவர். கோட்டே நகர சபையின் பிரதி மேயராக செயல்பட்டு வந்த மதுர விதானகே மைத்திரிபால சிறிசேனவின் நண்பரும் அவருடைய சிரேஷ்ட ஆலோசகரும் இணைப்பு செயலாளரும் ஆகிய சிரால் லக்திலகவின் நெருங்கிய பாடசாலை நண்பர் ஆவார். கிளி மகாராஜாவின் தேவைக்காக இந்த வழக்கை தன்னுடைய வழக்காக நினைத்து முன் கொண்டு சென்றவர் சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய ஆவார். ஆனால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹேமந்த வர்ணகுலசூரிய சிறிது நாட்களில் உயிரிழந்தார். ஹேமந்த வர்ணகுலசூரிய இத்தாலி தூதராக செயல்பட்ட போது 'நமக்காக நாம்' என்ற நிதியத்தின் ஊடாக நிதி திரட்டி அந்த நிதியை மோசடி செய்த விடையத்தை லங்கா ஈ நியூஸ் அம்பலப்படுத்தியதால் அவர் தனிப்பட்ட ரீதியில் லங்கா ஈ நியூஸ் மீது கோபம் கொண்டிருந்தார். இந்த மோசடி குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை ஆரம்பித்திருந்த போதிலும் ஹேமந்த வர்ணகுலசூரியவிற்கு இருந்த அரசியல் பாதுகாப்பினால் விசாரணை மூடி மறைக்கப்பட்டது.
இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 2014 நவம்பர் 23ஆம் திகதி காலப் பகுதியில் மைத்திரிபால சிறிசேன லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு எதிராக பாரிய தாக்குதல்களை முன்னெடுத்து வந்தார். முதலில் 2016 நவம்பர் 18ஆம் திகதி அவசரமாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உரை ஒன்றை நிகழ்த்தி லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பிரதம ஆசிரியர் சந்தருவான் இலங்கை நீதிமன்ற கட்டமைப்பிற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு சுயாதீன நீதிமன்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இது தேசிய அச்சுறுத்தல் எனவும் பிரதம ஆசிரியருக்கு எதிராக சர்வதேச பிடி ஆணை பெற்று அவர் உலகத்தில் எங்கிருந்தாலும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என பேசியிருந்தார். 23ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 25ம் திகதி லங்கா ஈ நியூஸ் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு லங்கா ஈ நியூஸ் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நீதிபதி கவீந்திர நாணயக்கார லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக தெரிவித்து அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடி ஆணை பிறப்பித்தார். இந்த பிடியானை சர்வதேச போலீஸாருக்கு (Interpol) வழங்கப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூலம் லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியரை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்கு ஹேமந்த வர்ணகுலசூரிய முழுமையான ஒத்துழைப்பு வழங்கி இருந்தார். குற்றவியல் குற்றம் ஏதும் இன்றி சர்வதேச பிடி விராந்து பிறப்பிக்க முடியாது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பின்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். அதனை அடுத்து சர்வதேச பிடி விராந்து என்ற கதை முடிவுக்கு வந்தது. மீதமிருந்தது மீளப் பெறப்பட்ட 14 மனுக்கள் மாத்திரமே.
சிறிசேனவிற்கும் கிளி மகாராஜாவிற்கும் லங்கா ஈ நியூஸ் மீது இந்த அளவு கோபம் வருவதற்கு காரணம் என்ன?. இவ்விருவரும் இணைந்து 'ரஷ்யாவின் ஆயுத கப்பல்' ஒப்பந்தத்தில் பாரியளவு நிதி மோசடி செய்ய இருந்த விடையத்தை லங்கா ஈ நியூஸ் அம்பலப்படுத்தியது. இதனால் இவர்கள் செய்வதறியாது லங்கா ஈ நியூஸ் மீது கடும் கோபம் கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிறிசேன சுருட்ட நினைத்த நிதி கொஞ்சமல்ல. சிறிசேனவிற்கு மாத்திரம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்க இருந்தது. சிறிசேனவினால் கிளி மகாராஜாவிற்கு இலங்கைக்கு ஆயுதம் இறக்குமதி செய்வதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட இருந்ததோடு கிளி மகாராஜாவின் ஊடக பணிப்பாளர் செவான் டேனியலை ரஷ்யாவிற்கு அனுப்பி இந்த ஒப்பந்தம் செய்யப்பட இருந்தது. எனினும் லங்கா ஈ நியூஸ் வெளியிட்ட செய்தியின் காரணமாக இந்த ஒப்பந்த திட்டத்தை முன்னெடுக்க முடியாது போனது. அதனால் மைத்திரி - கிளி இருவரும் இணைந்து லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு எதிராக செயல்பட்டனர். நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடித்து உள்ளனர்.
தற்போது சிறிசேனா நாய்க்கு கூட கணக்கெடுக்க முடியாத நபர் ஆகிவிட்டார். ஹேமந்த வர்ணகுலசூரிய உயிரிழந்து விட்டார். கிளி மகாராஜாவிற்கு தற்போதைய ஜனாதிபதியுடன் ஆயுத ஒப்பந்தம் செய்ய முடியாது. காரணம் அதற்கு தேவையான நபர்கள் ஜனாதிபதியிடம் தற்போது உள்ளனர். திலீத் ஜயவீர இருக்கும் வரை ஜனாதிபதி கோட்டாபயவின் அருகில் கிளி மகாராஜாவிற்கு செல்ல முடியாது. அதனால் மதுர வித்தானகேவிற்கு யாருடைய ஆதரவும் இல்லை. இனியும் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு எதிராக வழக்கைக் கொண்டு செல்ல அவருக்கு தேவையுமில்லை.
இதன்மூலம் மற்றுமொரு விடயமும் தெளிவாகிறது. மைத்திரிபால சிறிசேனவின் குப்பைகளை இழுத்துச் செல்ல கோட்டாபய அரசாங்கத்திற்கு தேவையில்லை. அதனால் மைத்திரிபால சிறிசேன காலத்தில் தடை செய்யப்பட்ட லங்கா ஈ நியூஸ் இணையத்தின் தடையை நீடிக்கவும் அவசியமில்லை. மேலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற அரசாங்கம் சிறு குழந்தைகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை. லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி ஊடக சுதந்திரம் உடைய அரசாங்கம் என நற்பெயர் எடுக்க விருப்பமில்லையா? அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ளும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
இறுதியில் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியமைக்காக சுமார் 4 வருடங்களாக நீதிமன்றத்தில் வயிற்றுப் பிழைப்பு நடத்த நேரிட்டதையிட்டு சட்டத்தரணி சந்திரசிறி செனவிரத்னவிற்கு நாம் வருத்தம் தெரிவிக்கிறோம். அவருக்காக இலவசமாக முன்வந்த சட்டத்தரணி உபுல் குமாரபெரும மற்றும் சட்ட ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன ஆகியோருக்கு நன்றிகள்.
---------------------------
by (2020-08-27 19:51:29)
Leave a Reply