~

கொரோனா மேல் எழும் போது கீழ் செல்லும் கீழ் செல்லும் போது மேல் எழும் ஏலியன்த வைட் நாடகம் (சிரிக்க வேண்டாம் பேய்கள்)

எழுதுவது சத்தி பனாவென்ன

(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 28 பிற்பகல் 11.10) முழு உலகமும் கொரோனா வைரஸ் காரணமாக இன்னும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றது. இலங்கையில் வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தால் வாழ்வதற்கு, வீடு வாசல் கட்டுவதற்கு, பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு விசேடமாக மத்திய கிழக்கு மற்றும் கொரியா போன்ற நாடுகளுக்கு சென்ற எமது ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாமல் பாரியளவு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பலரது வேலை இல்லாமல் போயுள்ளது. வீசா நிறைவு பெற்றுள்ளது. வேலை செய்யும் போது தங்கியிருந்த அறைக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. வீதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 'நாட்டு வீரர்கள்' என்று புகழ் பாடப்பட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் இன்று வீதிக்கு செல்லும் நிலைக்கு வந்துள்ளனர். நாங்கள் கொரோனா தொற்று இல்லை என மார்தட்டிக் கொள்கிறோம். உலகில் பலர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில் நமது நாட்டு பிரஜைகளும் அடங்குவர். நமது நாட்டுப் பிரஜைகளுக்கு நாடு திரும்புவதற்கான உரிமைகள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்க முடியவில்லை. புனர்வாழ்வு முகாம்களில் இடப்பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டில் இருந்து இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் 27ம் திகதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் இருந்து இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களைப் போன்று நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி சொகுசு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு முடியாது. கொரோனா வைரஸ் கூட இருப்பவன் இல்லாதவன் என்ற இடைவெளி பார்த்தே கவனிக்கிறது. கொரோனா வைரஸின் இருந்து விடுபட சுமார் இரண்டு வருடங்கள் செல்லும் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதுவரையில் நாம் விமான நிலையத்தை மூடி வைத்திருக்க போகிறோமா? இது குறித்து சிந்திக்க வேண்டும். 

சிரிக்க வேண்டாம் பேய்கள்..

இனிமேல்தான் நமது ஹீரோவான ஏலியன்த வைட் என்பவர் வெளியே வருகிறார். ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ரோயல் வைத்தியம் பார்ப்பதில் இவர் சிறந்த வைத்தியர் என்ற சான்றிதழை கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவே வழங்கினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு விளம்பரம் தேடித்தரும் தகவல்கள் வந்ததே தவிர வைத்திய ரீதியில் சாதனை எவற்றையும் செய்ததாக ஏலியன்த வைட் தொடர்பில் தகவல் வரவில்லை. கொரோனா வைரஸை அழிக்க உலகிலேயே இல்லாத மருந்துகளை கண்டு பிடித்த பலர் நமது நாட்டில் உள்ளனர். அதே போன்று அனைத்து வைரஸையும் தன்னுடைய உடலில் சுமந்து கொள்வதாக கூறிய தேர்தல் வேட்பாளரும் இருந்ததை நாம் கண்டோம். குறைந்தது தேசிய வைத்தியர்கள் குழு கூட இந்த ஏலியன்தவை கணக்கில் எடுக்காது. ஆனாலும் பிரதமர் மஹிநமகிந்த ராஜபக்ஷ ஏலியன்ஸ் வைட் என்பவரிடம் கொரோனா வைரஸை அழிக்க மருந்து ஒன்றை தயாரிக்குமாறு கூறினாராம். உடனடியாக ஏலியன்த வைட் மருந்து தயாரித்து அதனை வெலிசர கடற்படை முகாம் கடற்படை வீரர்களுக்கும் கந்தகாடு மத்திய நிலையத்தில் இருந்த கொரோனா நோயாளர்களுக்கும் வழங்கினாராம். இந்தத் திட்டம் வெற்றி அளித்ததால் மீண்டும் மருந்து தயாரித்து அதனை இலங்கையில் ஓடும் முக்கிய ஆறுகளில் கலந்தாராம் அதனாலேயே இலங்கையில் இருந்து கொரோனா வைரஸ் விரட்டி அடிக்கப்பட்டதாம். இதனை அறிந்த இந்திய அரசாங்கம் ஏலியன்த வைட்டை வாடகைக்கு வாங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன் வைத்ததாம். இதனை அடுத்து விசேட விமானம் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு ஏலியன்த வைட் கொரோனா வைரஸ் அழிக்க இந்தியா செல்கிறாராம். (சிரிக்க வேண்டாம் பேய்கள்) நீங்கள் இப்போது வாசித்தது ரசிக்கும் கதை அல்ல. கடந்த நாட்களில் 'தேசய' எனும் பத்திரிகையிலும் லங்கா சீ நியூஸ் என்ற இணையத்திலும் வெளியான செய்தி தான் இது .

கட்டுநாயக்க விட்டு ஒரு நீச்சல் தடாகம்..

அதற்கு இதற்கு என அடிக்கடி குரல் கொடுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன்?.  கொரோனவைரஸ் அழிக்க சுகாதாரப் பிரிவினர் பாதுகாப்பு தரப்பினர் எதையும் செய்யவில்லை என்பது போலத்தான் இந்த ஏலியன்த வைட்டின் கதை அமைந்துள்ளது. நாம் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு ஏலியன்ஸ் வைட் குறித்து தேடுமாறு கேட்கப் போவதில்லை. மிகவும் முக்கியமான யோசனை ஒன்றை முன் வைக்கிறோம். அந்த ஏலியன்த வைட் வைத்தியரை வைத்து மேலும் கொஞ்சம் மருந்துகளை தயாரிக்க சொல்லவும். மருந்து தயாரித்து ஆற்றில் வீச வேண்டாம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக நீச்சல் தடாகம் அல்லது குளம் ஒன்றை தயாரிக்கவும். அதன்பின் வெளிநாட்டில் இருக்கும் நமது இலங்கையர்களை அழைத்து வந்து குறித்த நீச்சல் தடாகத்தில் நீந்த சொல்லுங்கள். ஆற்றில் மருந்து போடுவதால் கொரோனா அழிக்கப்படுவது உண்மை என்றால் மருந்து தெளிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் நீந்திவர்களுக்கு கொரோனா வைரஸ் நீங்கிவிடும். கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கவும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அச்சமின்றி வரச் சொல்லவும். தற்காலத்தில் எங்கும் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வெள்ளைக்காரர்கள் விரைந்து இலங்கைக்கு வருவார்கள். நாட்டில் வருமானம் அதிகரிக்கும். இந்தியா இலவசமாக கேட்பதால் அதை செய்துவிட முடியாது. கட்டுநாயக்க வேலையை செய்ய முடியாவிட்டால் பொய் கூறி பெயர் போட்டுக் கொண்டு திரியும் ஏலியன்த வைட் வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் அரசாங்கத்தை டுவிட்டர் மூலம் குறைந்தது நாமல் ராஜபக்சவை அவரது டுவிட்டர் மூலம் தகவல் வெளியிட கூறவும். 

சத்தி பனாவென்ன 

---------------------------
by     (2020-08-29 10:58:02)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links