எழுதுவது பொலிஸ் பொட்டா
(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 31 பிற்பகல் 10.10) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் மாபியாவுடன் தொடர்புபட்ட ஏழு பேர் பொலிஸாருக்கு ஆயுதங்கள் காட்டுவதாக அழைத்து செல்லப்பட்டு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வரலாற்றில் சட்டத்தை குழி தோண்டிப் புதைத்து காட்டுவாசி யுகத்தை நடத்திச் சென்ற 2005 தொடக்கம் 2015 வரையான காட்டாட்சி காலத்தில் இவ்வாறு எத்தனை பேர் கொல்லப்பட்டு பரலோகம் சென்றார்கள் என்பதை மேலே உள்ள கடவுளுக்கு கூட எண்ணிக் கொள்ள முடியாது.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி பாதாள உலகக் குழுவை சேர்ந்த இந்திரஜித் குமார என்ற பெயருடைய 'இந்திரா' கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதன் பின்னர் போலீசார் மேற்கொண்ட தாக்குதலில் அவருடைய வலது கை உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு கை உடைக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படத்தை குறித்த சந்தேக நபரை கைது செய்த நவகமுவ போலீஸ் பொலிஸ் நிலையத்தில் வைத்து எடுத்து வெளியிட்டிருந்தனர். குறித்த சந்தேகநபர் பொலிசாரினால் கொலை செய்யப்பட்டதன் பின்னர் ஆயுதம் காட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் போலீஸ் வண்டி சாரதியின் கழுத்தை நெறிக்க முற்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். அதன் போது சந்தேக நபரின் வலது கை உடைக்கப்பட்டிருந்தது. வலது கை உடைக்கப்பட்ட ஒருவர் கழுத்தை எவ்வாறு நெறித்திருப்பார்?
இவ்வாறு கைது செய்யப்படும் பாதாள உலகக் குழு சந்தேக நபர்கள் கொலை செய்யப்படுவதன் மூலம் அவர்கள் செய்த அனைத்துக் கொலை, குற்றச் செயல்களும் அதன் பின்னணியில் இருந்து இயக்குபவர்கள், இயங்குபவர்கள் தொடர்பான தகவல்களும் மறைக்கப்படுகிறது.
அன்று தொடக்கம் அனுர சேனநாயக்க, வாஸ் குணவர்தன ஆகியோருக்கு பதிலாக இன்று தேசபந்து, மெரில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் களத்திற்கு வந்துள்ளனர். நாட்டில் பெரும்பாலான மக்கள் ராஜபக்ச மோகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய சிவில் அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் ஆகியனவும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன.
இன்று லடியாவிற்கு சமியாவிற்கு இந்திராவிற்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சாதாரண மக்களுக்கு ஊடகவியலாளர்களுக்கு சிவில் செயற்பாட்டாளர்களுக்கு பாய்வதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை.
அதற்கு முன்னர் சட்டத்தை மதிக்கும் 'பொலீஸ் பொட்டா' காணும் கனவை எழுதி வைக்க வேண்டியது கடமையாகும்.
ஜனாதிபதி பதவிக்கு வந்த நாள் தொடக்கம் ஏனையவர்கள் போலவே போலீஸ் துறைக்கு உள்ளும் பெரியவர்கள் போட்டிக்காக ஜனாதிபதியிடம் பெயர் போட்டுக் கொள்ளும் செயற்பாடுகளை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வரிசையில் பொலிஸ் மாஅதிபர் கனவில் மிதக்கும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் முதன்மை பெறுகிறார். தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதி முயற்சி செய்யும் பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் மாபியா காரர்களை கண்டு பிடித்து அவர்களை அழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இந்த மரணங்களின் அளவைப் பார்த்து ஜனாதிபதியிடம் அதிகளவு விருப்பத்தை பெற முடியும் என தேசபந்து நினைக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து தேசபந்து தென்னகோனின் கனவிற்கு இடையூறாக இருந்தது பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியாக செயல்பட்ட எம். ஆர். லத்தீப் ஆவார். லத்தீப் பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் மாபியா சந்தேகநபர்களை அழிப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். லத்தீப் ஓய்வு பெற்றதன் பின்னர் அவருடைய இடத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்க நிரப்பினார். லத்தீபின் வழியில் அமைதியாக இருந்து பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் மாபியா சந்தேகநபர்களை அழிக்கும் செயல்பாட்டை லயனல் குணதிலக்க முன்னெடுக்க முனைந்த போதும் அதற்கு தேசபந்து தென்னகோன் மிகப் பெரிய தடையாக இருந்தார். மாளிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கஞ்சிபானி இம்ரான் தொடர்புபட்ட கொலை ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரை சுட்டுக் கொலை செய்யுமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். எனினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை சட்ட விரோதமாக கொலை செய்ய முடியாது என பிரதி பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக மறுப்பு தெரிவித்த பின்னர் தேசபந்து தென்னகோன், லயனல் குணதிலகவிற்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்தி தனது கனவை நனவாக்கி கொள்ளும் திட்டத்தை ஆரம்பித்தார். பல காரணங்களால் லத்தீப் எஸ்ரிஎப் பொறுப்பாளராக இருந்த போது ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய எஸ்ரிஎப் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு தேசபந்து தென்னகோன் செய்த சூழ்ச்சியால் லயனல் குணதிலக்க எஸ்ரிஎப் பிரதானி பதவியை இழந்தார்.
அதன் பின்னர் தேசபந்து தென்னகோனை 'சேர்' என அழைக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை உருவாக்கப்பட்ட நாள் தொடக்கம் இலங்கையின் பொலீஸ் மிலிட்டரி படையாக செயல்பட்டு பொலிஸ்மா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பு கூற வேண்டிய கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி தற்போது வரலாற்றில் முதல் தடவையாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கட்டளைக்கு அடிபணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வருண ஜெயசுந்தர மிகத் திறமையான அதிகாரி என்ற போதும் தேசபந்து தென்னகோனிடம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் கோவை ஒன்று காணப்படுவதால் அவருக்கு தலை சாய்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வருண ஜயசுந்தர இந்த அளவு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. காரணம் பொலிஸ் தலைமையகத்தில் தேசபந்து தென்னக்கோனின் ஊழல்கள் அடங்கிய கோவைகள் இருக்கும் இடத்தை 'பொலீஸ் பொட்டாகள்' அறிவர். தேசபந்து தென்னகோன் நுகேகொட போலீஸ் அதிகாரியாக செயல்பட்ட:போது தனது உத்தியோகபூர்வ போலீஸ் வாகனத்தை தனிப்பட்ட தேவைக்கு எடுத்து சென்று கடுவல பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளாகி அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய ஒன்பது லட்சம் ரூபாய் தொடர்பான பிரச்சனை இன்னும் அப்படியே உள்ளது.
குடு துமிந்த நடு வீதியில் வைத்து பட்டப்பகலில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த போது துமிந்த சில்வாவின் பின்னால் நின்று கொண்டிருந்தவர் தேசபந்து தென்னகோன் ஆவார். அது மாத்திரம் அல்லாமல் இந்த கொலை வழக்கை துமிந்த சில்வாவிற்கு சார்பாக நடத்திச் செல்வதற்கு தேசபந்து தென்னக்கோன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் போலீசார் அறிவர். தேசபந்து தென்னக்கோன் இன்றும் துமிந்த சில்வாவை 'சேர்' என அழைக்கும் அடிவருடி ஆவார்.
தேசபந்துவின் அனாவசியமான தலையீடுகள் காரணமாக வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை வீழ்ச்சியை கண்டுள்ளது.
சில திறமையான அதிகாரிகளை ஒதுங்கி உள்ளதுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் குழுக்கள் உருவாகி ஒருவருக்கொருவர் குழி பறித்துக் கொண்டிருக்கின்றனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உண்மையான நிலை வெளியாவது தொடர்பில் அச்சம் கொண்டுள்ள கட்டளையிடும் அதிகாரி வருண ஜெயசுந்தர கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களின் ஊடகவியலாளர்கள் சிலரை தொலைபேசியில் அழைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிட வேண்டாம் என தயவுடன் கேட்டுக் கொண்டுள்ளார். தேசபந்துவின் அழுத்தத்திற்கு அமையவே வருட ஜெயசுந்தர இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு மேலதிகமாக தேசபந்து தென்னகோன் தினமும் மௌவ்பிம பத்திரிகையின் சிசிர பரணதந்திரி மற்றும் அருண பத்திரிகையின் மஹிந்த இலேபெருமை ஆகியோருக்கு 'தலைப்புச் செய்திகள்' வர வேண்டிய விதம் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரி லத்தீப் பல காரணங்களால் பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் மாபியா விடயங்களில் ஒதுக்கி வைத்திருந்த அதிகாரிகள் சிலர் மீண்டும் களத்துக்கு இறக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் பொறுப்பு போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு சந்தேக நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது அல்லாமல் தேவைப்படும் சந்தேக நபர்களை சுட்டுக் கொலை செய்து பொலிஸ் மா அதிபர் கனவில் மிதக்கும் தேசபந்து கழுத்திற்கு பிணங்களின் மரண மாலை அணிவிப்பதாகும். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கொல்லப்படும் சந்தேக நபர்களின் வாழ்க்கைக்கு பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் பொறுப்புக் கூறுவர். அதற்கு மேலதிகமாக 'இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள்' குழுவும் களத்திற்கு வந்துள்ளனர். அண்மையில் அனுராதபுரத்தில் எஸ்எப் லொக்கா கொலை செய்யப்பட்டது இந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள விசேட அம்சம் என்னவென்றால், கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலைக்கு பொறுப்பாக செயல்படும் குடு துமிந்தவின் ஆசிர்வாதம் பெற்ற தெமட்டகொட சமிந்த, தெமட்டகொட ருவான் தலைமையிலான 'கெட்போய்ஸ் காட்டெல்' பாதாள உலகக் குழுவுடன் தொடர்புபட்ட போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் தேசபந்து தென்னகோனினால் சுட்டுக் கொல்லப்படுவதில்லை. முடிந்தால் குடு துமிந்தவின் சகா ஒருவரை சுட்டுக் கொலை செய்யுமாறு தேசபந்து தென்னகோனிடம் பொலிஸ் பொட்டா சவால் விடுகிறார்.
ஜனாதிபதி சேரின் விருப்பத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொலை செய்யும் மற்றும் எந்த ஒரு 'குப்பாடி' வேலைகளையும் செய்யும் அதிகாரிகள் காட்டாட்சி காலத்தில் அனுர சேனாநாயக்க, வாஸ் குணவர்தன மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவி போலீஸ் அதிகாரி சிசிர குமார ஆகியோருக்கு நேர்ந்த கதியே நேரும் என்பதை மறந்து விடக் கூடாது.
பொலிஸ் மா அதிபர் கனவில் மிதக்கும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகள் தனது நீண்டகால நண்பரான ஆயுள் முழுக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்கப் போகும் தனது 'சேர்' துமிந்தவை பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் மாபியா துறையில் ஏகாதிபதியாக மாற்றுவதற்கே ஆகும். குடு துமிந்தவின் 'கெட்போய் காட்டெல்' குழுவுக்கு எதிரான பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் மாபியா சந்தேகநபர்கள் மாத்திரமே தேசபந்து தென்னகோனின் கொலை பட்டியலில் உள்ளனர். குடு துமிந்தவிற்கு எதிரான போட்டியாளர்களின் குடு மாத்திரமே கைது செய்யப்படும்.
இதுவரை கொலை செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக 'ஹரக் கட்டா', 'பொட்ட வஜிர' ஆகியோரின் சகாக்களும் 'சுமேத'வும் தேசபந்துவின் கொலை பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் அனைவரும் துமிந்தவின் 'கெட்போய் காட்டெல்' குழுவிற்கு எதிரான அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் மாபியா குழுக்களைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும். அது தெரிவு செய்யப்பட்ட குழுக்களில் இருந்து மாத்திரமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தி முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவை அழிக்க தேவையான சட்டங்கள் இருக்கின்ற போதிலும் அதனை செயல்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் இன்மை காரணமாக நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. தெரிவு செய்யப்பட்ட குழுக்களை மாத்திரம் கொலை செய்வதன் மூலம் போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவை அழித்து விட முடியாது. அவ்வாறு செய்வதானால் காட்டாட்சி காலத்தில் கொல்லப்பட்ட கொலைகளை பார்க்கும் போது தற்போது நாட்டில் பாதாள உலகக் குழு போதைப் பொருள் மாபியா காரர்களை கண்டுபிடிக்கவே முடியாமல் போயிருக்கும்.
---------------------------
by (2020-09-01 20:43:37)
Leave a Reply