~

சட்டமா அதிபரை ஏமாற்றிய சொக்கா மல்லிக்கு நவாஸ் வழங்கிய தீர்ப்பு..! "இவ்வாறான தீர்ப்புக்கு காரணம் உலகிலுள்ள எந்த ஒரு சட்ட புத்தகத்திலும் இல்லை. யாருடையதேனும் பைக்குள் வேண்டுமானால் இருக்கலாம்"

- எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 7 பிற்பகல் 10.30) 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரான தொடம்கொடகே சுசில் பெரேரா ஏலியஸ் சாந்த தொடம்கொடகே என்பவரை சுட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஹால்கண்டலிய லேகம்லாகே பிரேமலால் ஜயசேகர என்ற 'சொக்கா மல்லி'க்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்குமாறும் அதற்கென அவரை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார இம்புல்தெனிய, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

எஸ்பி மற்றும் சரத் பொன்சேகா..

இதற்கு முன்னர் சொக்கா மல்லியின் நியமனம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டிருந்த நிலையில் அரசியல் யாப்பின் 89 (இ) பிரிவின் படி மரண தண்டனை அல்லது இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் ஒருவருக்கு வாக்குரிமை கிடையாது எனவும் அதனால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய தகுதி அற்றவர் எனவும் தெரிவித்து சொக்கா மல்லியை பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியாது என சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவித்து இருந்தார். 

இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக எஸ் பி திசாநாயக்கவிற்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தால் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை வழங்கிய போது எஸ் பி திஸாநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. மற்றுமொரு உதாரணமாக சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட இராணுவ நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்து இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட அதாவது 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த இரண்டு தண்டனைகளுடன் ஒப்பிடும் போது பிரேமலால் ஜயசேகரவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பெரியதாகும். இது மனித கொலையுடன் தொடர்புபட்ட குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை ஆகும். 

தண்டனை வழங்கப்பட்டதன் பின்னர் குற்றவாளி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது பொருந்தாத காரணமாகும். காரணம் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தால் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து இருந்த போதிலும் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. 

எனவே சிறைச்சாலை அதிகாரிகள் கோரிய ஆலோசனைக்கு சட்டமா அதிபர் வழங்கிய பதில் மிகவும் சரியானதும் சட்ட ரீதியானதும் ஆகும்.   

நாய்க்கு வீசப்பட்ட நியாயங்கள்..  

இந்த அனைத்து காரணங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பிரேமலால் ஜயசேகர முன்வைத்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழு பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை சட்ட விரோதமான செயல் என எந்தவொரு நீதிமன்றத்திலும் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவரை பாராளுமன்றத்திற்கு செல்ல தடை விதிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நவாஸ் பகிரங்க நீதிமன்றில் அறிவித்தார். 

ஆனாலும் எஸ் பி திசாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர்களது வழக்கிலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டது சட்டவிரோதம் என எவ்வித நீதிமன்றத்திலும் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கவில்லை. இருந்த போதும் அரசியல் யாப்பு விதிமுறைகளில் மிகத் தெளிவாக கூறப்பட்டு இருக்கின்ற விடயத்தின் அடிப்படையில் அவர்களது பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டது. 

அரசியல் யாப்பு சரத்துக்கள்படி மனுதாரர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவிக்கக் கூடியதற்கான சட்டத் தடைகள் இல்லை என தெரிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நவாஸ், பிரேமலால் ஜயசேகரவிற்கும் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொள்வதற்கு சட்டத் தடை இருப்பதாக தெரியவில்லை என அறிவித்தார். 

அதனால் பிரேமலால் ஜயசேகரவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவின் பிரதிவாதிகளான சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்தது. மனு எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 

நவாஸ் முன்னிலையில் ரமேஷ் ஆஜராகியமை குழப்பம்..

இந்த வழக்கில் பிரேமலால் ஜெயசேகர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகினார். நீதிபதி நவாஸ் தலைமை வகித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகிமை ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையாக மாறியுள்ளது. காரணம் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிபதி நவாஸ் தொடர்பான வழக்கிலும் ஆஜராகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள போதும் அவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று தற்போதும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. குறித்த வழக்கிலும் ஏனைய வழக்குகளிலும் நவாஸுக்கு சார்பாக அவரது சட்டத்தரணியாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியுள்ளார். எனவே இந்த பிரேமலால் ஜயசேகர தொடர்பான உத்தரவு எவ்வாறு பிறப்பிக்கப்பட்டது என்பதை அனைவரும் தற்போது தெளிவாக அறிவர். 

புதுமையான இரண்டு பதில்கள்..

சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் முன்னாள் வழக்குகள் தொடர்பான அனுபவங்கள் என்பவற்றை ஓரம் கட்டிவிட்டு மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நவாஸினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது அதிகாரம் மிக்கதா எனவும் அதன் சட்ட ஏற்புடைமை தொடர்பாகவும் லங்கா ஈ நியூஸ் மற்றுமொரு ஜனாதிபதி சட்டத்தரணியிடம் வினவிய போது அவர் புதுமையான பதில்களை வழங்கினார். 

"இவ்வாறான தீர்ப்பு வழங்குவதற்கு ஏதுவான காரணம் உலகில் எந்த ஒரு சட்ட புத்தகத்திலும் இல்லை. யாரேனுமது பையில் வேண்டுமானால் இருக்கலாம்" 

இந்த தீர்ப்பு தொடர்பில் லங்கா ஈ நியூஸ் வாசகர் ஒருவரும் அபூர்வமான கதையை தெரிவித்தார். 

"ஒரே இரவில் 3000 இராணுவ வீரர்களை கொலை செய்ததாக கூறிய நபர்கள் பாராளுமன்றத்தில் அபூர்வமாக இருக்கும் போது ஒருவரை மாத்திரம் கொலை செய்த நபரும் இருந்துவிட்டுப் போகட்டுமே..!"

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழு வடிவத்தை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 
https://www.lankaenews.com/home/downloads/81/choka-malli-writ.pdf

சந்திரபிரதீப்

---------------------------
by     (2020-09-07 20:27:03)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links