(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 16 பிற்பகல் 06.25) இலங்கையில் கொரானா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த பின்னர் நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியின் காரணமாக வங்கி கடன்கள் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலையிட்டில் அரசாங்கம் நிவாரணங்களை வழங்குவதாக ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் நடைமுறையில் குறித்த நிவாரணத்தை இந்த நாட்டினுடைய வணிக வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்ப முடிந்ததே தவிர வாடிக்கையாளர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்கட்சியில் உள்ள எவரும் வாடிக்கையாளர்களுக்காக பரிந்து பேச முன்வரவில்லை.
எனினும் மத்திய வங்கியினுடைய நிவாரண திட்டங்கள் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்து முதல் முறையாக வாடிக்கையாளர் ஒருவர் அண்மையில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் வங்கி, இலங்கை மத்திய வங்கி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். வியட்நாமில் விமானியாக கடமையாற்றும் வெயாங்கொட மாரபொல பிரதேசத்தைச் சேர்ந்த நந்தன பிரியங்க தசநாயக்க என்ற நபர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
2020 03 20 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கு அமைய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வாடிக்கையாளர்களுக்காக நிவாரண திட்டம் வழங்குமாறு மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி லக்ஷ்மன் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் குறித்த நிவாரணம் தனக்கு கிடைக்கவில்லை எனவும் சாதாரணமாக கடன் தொகையை செலுத்தாமல் இருந்தால் அறவிடப்படும் தண்டப் பணத்திற்கு மேலதிகமாக பாரியளவு தொகை கொரோனா காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தண்ட பணமாக அறவிட தான் கணக்கு வைத்துள்ள வங்கி செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய குறித்த நிவாரணம் வழங்கப்பட்ட காலத்திற்கு தண்ட பணமாக வட்டியை மாத்திரம் அறவிட முடியும் என்ற நிலையில் பல வணிக வங்கிகள் மொத்த கடன் தொகைக்கான வட்டியை தண்டமாக அறவிடுவது சட்ட விரோதமான செயல் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்ட வணிக வங்கியை சவாலுக்கு உட்படுத்தி வாடிக்கையாளர் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகிறது. குறித்த மனு எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
---------------------------
by (2020-09-16 23:14:14)
Leave a Reply