எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 23 முற்பகல் 11.10) இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து கின்னஸ் சாதனை படைத்து வந்த நிலையில் தற்போது புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். பிரதமராக பதவி வகித்த பின்னர் இடம்பெற்ற தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த பிரதமர் என்ற சாதனையை அண்மையில் படைத்திருந்தார். கட்சி மிக மோசமான நிலையில் அதல பாதாளத்தில் விழுந்துள்ள போதும் கட்சித் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்காமல் மற்றும் ஒரு சாதனையையும் அவர் படைத்தார்.
அண்மையில் அவர் படைத்த புதிய சாதனை, தன்னுடைய அரசாங்கத்தை உருவாக்கி பிரதமராக பதவி வகித்த காலத்தில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்து தன்னுடைய தலைமையில் உருவாக்கப்பட்ட அரச நிறுவனங்களுக்க எதிராக புதிய அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர் சாட்சியாளராக செயல்பட்டுள்ளார். இந்த சாதனையை கடந்த திங்கட்கிழமை அவர் படைத்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதியான உபாலி அபேரத்ன என்ற 'பிஸ்ஸு புஷா' தலைமையில் இடம்பெற்று வரும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விடயங்களை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்த அழைப்பின் பேரில் கடந்த செப்டம்பர் மாதம் நான்காம் திகதி அந்த ஆணைக்குழுவில் ஆஜராகி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்கள் இல்லாமல் அங்கு சாட்சி ஒன்றை அளித்தார். இங்கு சாட்சி அளிக்கப்பட்ட விடயங்கள் என்ன என்பது ஊடகங்கள் மற்றும் ஆணைக்குழு வாயிலாக வெளியில் வரவில்லை. இருப்பினும் அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்களில் கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட 'ஊழல் எதிர்ப்பு செயலகத்தினால்' அனைத்து விடயங்களும் நடைமுறைப் படுத்தப்படவில்லை எனவும் 'சட்ட விரோத'மான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சட்ட விரோதமான விடயங்கள் என்ன என்பது வெளிப்படுத்தப்படவில்லை. பின்னர் ரணில் விக்ரமசிங்க குறித்த ஊடக செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவும் இல்லை.
அதன் பின்னர் கடந்த 21ம் திகதி ஆணைக்குழு தலைவர் உபாலி அபேரத்ன ரணில் விக்ரமசிங்கவை அரச தரப்பு சாட்சியாளராக கருதுவதாக அறிவித்திருந்தார். அதனையும் ரணில் விக்ரமசிங்க இன்றுவரை நிராகரிக்கவில்லை. எனவே பிரதிவாதியாக ஆணைக்குழு முன்னிலையில் விசாரணை செய்ய அழைக்கப்பட்ட விக்ரமசிங்க தற்போது அரசு தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்.
'எப்சிஐடி' என சொல்லப்படும் விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் 'ஊழல் ஒழிப்பு செயலகம்' என்பவற்றை ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது அவரே அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்து உருவாக்கி இருந்தார். தன்னால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்புக்களை ஏற்காமல் அந்த நிறுவனங்களில் கடமையாற்றிய அதிகாரிகள் மீது பொறுப்பை சுமத்திவிட்டு தற்போது கை நழுவிச் செல்ல பார்க்கிறார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட உலகிலுள்ள ஒரே ஒரு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனவே இதுவும் ரணில் விக்கிரமசிங்க படைத்த கின்னஸ் சாதனையாகும்.
அரசியல் பழி வாங்கல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவும் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. குறித்த ஆணைக்குழுவின் தலைவராக செயல்படும் பிஸ்ஸு பூசா என அழைக்கப்படும் ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன சட்டவிரோதமான முறையில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். விசாரணை குழுவின் மற்றுமொரு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சந்திரசிறி ஜயதிலக்க என்பவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது வழக்கு தீர்ப்பு ஒன்றை சாதகமாக வழங்கவென 2.5 மில்லியன் லஞ்சம் பெற்றதாக சாட்சியாளர் தெரிவித்திருந்தார். இது குறித்த விசாரணையில் இருந்து அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி சந்திரசிரி விடுபட்டு கொண்டார். மற்றுமொரு உறுப்பினராக உள்ள சந்திரா பெர்னாண்டோ சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர். ஏற்கனவே ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர் மற்றுமொரு ஜனாதிபதி விசாரணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டமையும் கின்னஸ் சாதனையாகும்.
(ஒரே ஒரு எதிர்வு கூறலை கூற முடியும். எதிர்வரும் நவம்பர் மாதத்தில் தற்போது லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் உள்ள ஆணையாளர்கள் ஓய்வுபெற உள்ள நிலையில் குறித்த ஆணை குழுக்களுக்கு புதிதாக மூவர் 'புதுமையான மூவர்' நியமிக்கப்படுவர். லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவராக பிஸ்ஸு பூசா நியமிக்கப்படுவார்.)
எது எவ்வாறு இருந்த போதிலும் தற்போது நாட்டில் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக கூட இல்லாத ரணில் விக்ரமசிங்கவிற்கு தற்போதைய அரசாங்கம் நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை வழங்கி உள்ளது. அதே போன்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அப்போது ஓய்வு பெற்ற அமைச்சின் செயலாளராக மாத்திரம் இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 400க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை பாதுகாப்பிற்கு வழங்கியிருந்தார்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல்வாதிகள் நண்பர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் பருப்பு உண்கின்றனர். 'முழு உலகமும் இந்த நாட்டுக்கு அடிமை' என்று 1965 ஆம் ஆண்டு மகாகமசேகர எழுதியது இந்த நட்புறவை தெரிந்து வைத்திருந்தோ என்னவோ.
---------------------------
by (2020-09-23 12:08:45)
Leave a Reply