எழுதுவது விமல் தீரசேகர
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 27 பிற்பகல் 03.25) தான் வழங்கும் அனைத்து வாய் மூலம் உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக நினைத்து அரச அதிகாரிகள் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 25 ஆம் திகதி பதுளை 100 ஏக்கர் கிராமத்தில் வைத்து இடம்பெற்ற கிராம மக்கள் சந்திப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் போது தெரிவித்தார்.
மண் கொண்டு வருவதற்கு அனுமதிப் பத்திரம் இல்லை என மண்பாண்ட கைத்தொழில் செய்யும் ஒருவர் ஜனாதிபதியிடம் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து அங்கு இருக்கும் அரச ஊழியர் ஒருவர் சுற்றறிக்கை தொடர்பான பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அந்த பதில் தொடர்பில் திருப்தி இல்லாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கீழ்க் கண்டவாறு பதில் அளித்தார்.
"ஜனாதிபதி கூறிய பின்னர் அது தான் சுற்றறிக்கை. விளங்குகிறதா ? நான் ஒரு மிதக்கும் ஜனாதிபதி அல்ல. இல்லை என்றால் அரச அதிகாரிகளுக்கு எதிராக நான் வேலை செய்வேன். நான் இதை பகிரங்கமாகவே கூறுகிறேன். அதை இன்று எழுதி வைத்துக் கொள்ளவும். ஜனாதிபதி சொல்வது தான் சுற்றறிக்கை. அதற்கு மேல் வேறு என்ன வேண்டும் ? அதற்குத் தானே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்பர். வேறு சுற்றறிக்கைகள் எதற்கு? நாம் யுத்தம் செய்யும் போது ஜனாதிபதி சுற்றறிக்கை அனுப்பிக் கொண்டா இருந்தார். இல்லை. அப்படி செய்திருந்தால் இன்றும் நாம் யுத்தம் செய்து கொண்டு தான் இருப்போம். மக்களை வாழ வைப்பது என்பதும் யுத்தம் தான்"
மேற்கூறிய கருத்துக்களை ஒரு வருடங்கள் கூட பதவி அனுபவம் இல்லாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளமை அரச நிர்வாகம் தொடர்பில் அவருக்கு உள்ள அழிவில்லா தன்மையை சுட்டிக்காட்டுவதாக அனேகமான இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டை ஆட்சி செய்யும் ஒருவரின் வாயில் இருந்து வரும் அனைத்து வார்த்தைகளும் சட்டமாக செயல்படுத்தப்பட்டமை ஆதி காலத்து மன்னர் ஆட்சியின் போதாகும். ஆனாலும் அந்த நிலைமை இன்று மாறியுள்ளது. இந்த நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளார்.
கிறிஸ்துக்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் இந்த உலகத்தில் இருந்து மிக பலம் பொருந்திய ராஜ்ஜியமாக ரோம் காணப்பட்டது. இங்கு கட்டுக்கடங்காத அதிகாரமிக்க நபராக ரோமாபுரியின் மன்னர் திகழ்ந்தார். 200 வருடங்கள் பழமை வாய்ந்த ரோமாபுரியின் அழிவு மார்க்கஸ் ஒரேலியசின் யுகத்தின் முடிவின் பின்னர் ஆரம்பமானது. மார்க்கஸ் ஒரேலியஸ் ரோம ராஜ்யத்தின் மன்னனாக கிறிஸ்துக்கு முன் 161 தொடக்கம் 180 வரையான காலப்பகுதியில் செயல்பட்டார். மன்னரின் வாய் வார்த்தைகள் அல்லாமல் எழுத்து மூலமான ஆவணமே தொழில் ரீதியான உத்தரவாக அமைய முடியும் என்ற தீர்ப்பை வழங்கியது மார்க்கஸ் ஒரேலியஸ் ஆவார். அதற்கு அவர் கூறும் காரணம் அபூர்வமானது.
ரோம் ராஜ்யத்தை விரிவு படுத்திய இறுதி நபர் ஒரேலியஸ் ஆவார். ஒரு காலத்தில் தற்போதைய ஜெர்மனிய ராஜியத்தை ரோமன் ராஜியத்துடன் இணைத்து கொள்ளும் திட்டம் ரோமானியர்களிடம் இருந்தது. ஒரேலியேஸ் அதற்காக ரோம் ராஜியத்திலிருந்து ஜெர்மனி குழுவுடன் மோதலுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தொற்றுநோய் ஒன்றுக்கு உள்ளானார். (அந்த தொற்று நோயும் அக்காலத்தில் சீனாவினால் பரப்பப்பட்ட ஒன்றாக கருதப்பட்டது. அது இன்று கண்டறியப்பட்டுள்ளது) தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரேலியஸ் ரோமாபுரி மன்னனுக்கு தூதுவர் மூலம் தெரியப்படுத்தினார். அந்த தகவல் ஒரு குறிப்பிட்ட தூரம் செல்லக்கூடிய தரகர் ஒருவரால் அந்த தூரத்தை கடக்கும் எல்லையில் இருந்த மற்றுமொரு தரகர் மூலம் இரண்டாவது தரகர் தனக்கு செல்ல கூடிய தூரம் அளவு சென்று எல்லையிலுள்ள பிறிதொரு தரகரிடம் அந்த செய்தியை கூறினார். அதன்பின் அது மன்னரிடம் சென்றது. இவ்வாறு ஒரு ஒரேலியாஸ் அனுப்பிய செய்தி எழுத்து மூலம் அன்றி வாய் மூலமானதாக அமைந்தது. வாய் மூலமாக செய்தி அனுப்பியமைக்கான காரணம் எழுத்து மூலம் செல்லும் செய்திகள் இடைநடுவில் எதிரிகள் கையில் சிக்கி விடக்கூடாது என்பதன் நோக்கத்தில் ஆகும். மேலும் தகவல் பரிமாற்றம் செய்பவரின் ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் இரகசியங்கள் பேணப்பட கூடும் என்பதுவும் காரணமாக அமைந்தது.
எனினும் ஒரு சந்தர்ப்பத்தில் ரோமாபுரியில் இருந்த அதி ராஜ வாதியான போஸ்டினாவிற்கு தவறான தகவலை வந்து சேர்ந்தது. அந்தத் தகவலில் மார்க்கஸ் ஒரேலியஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து தனது பாதுகாப்பு மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி ரோமபுரியில் அடுத்த நிலை அதிகாரத்தில் இருந்த நபரை போஸ்டினா மறுமணம் செய்து கொண்டார். குறித்த நபர் மார்க்கஸ் ஒரேலியஸை வீழ்த்த எதிர்பார்த்து இருந்தவர் என்பது துரதிஷ்டவசமான ஒன்றானது. சிறிது காலத்தில் மார்க்கஸ் ஒரேலியஸ் உயிருடன் இருக்கும் தகவலை போஸ்டினா அறிந்து கொண்டதுடன் தனது எதிரி ஒருவரை போஸ்டினா மறுமணம் செய்து கொண்டதை மார்க்கஸ் ஒரேலியஸ் தெரிந்து கொண்டார். மார்க்கஸ் ஒரேலியஸ் தனது ஆட்களை அனுப்பி போஸ்டினா மறு மணம் முடித்த நபரை கொலை செய்ததுடன் யுத்த களத்தில் இருந்து தான் அனுப்பிய செய்தி தவறாக கொல்லப்பட்டமை தொடர்பில் போஸ்டினாவிடம் விளக்கமளித்து மன்னிப்பு வழங்கினார்.
யுத்த களத்திற்கு செல்லும் போது ஒரேலியஸ் குணமடைந்து நல்ல நிலையில் இருந்ததுடன் போஸ்டினா தனக்கு நேர்ந்த விடயங்களை ஒரேலியஸிடம் கூறினார். அமைதியாக அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரேலியஸ் வயின் கிளாஸ் ஒன்றை அருந்த கொடுத்துவிட்டு வெளியில் சென்றார். பின்னர் முகாமிற்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகளால் போஸ்டினா இறந்து கிடப்பதை காண முடிந்தது. போஸ்டினாவிற்கு வழங்கப்பட்ட வயின் கிளாஸில் விஷம் கலக்கப்பட்டு இருந்தமை பகிரங்கப் படுத்தப் படவில்லை. போஸ்டினா இயற்கை மரணம் எழுதியதாக தகவல் பரப்பப்பட்டது.
இந்த சம்பவத்தின் பின்னர் ஒரேலியஸ் ஜெர்மன் படைகளுடன் யுத்தம் செய்து வெற்றி பெற்றார். ஜெர்மன் ரோமராஜியத்துடன் இணைக்கப்பட்டது. அத்துடன் ரோம இராஜ்யத்தின் பலம் பொருந்திய தன்மை அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் ரோம ராஜ்யத்தின் ஆட்சிக்கு வந்த கலிகியோ, நீரோ போன்றவர்களால் ரோம ராஜ்யம் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
இதேவேளை சிறந்த போராளியும் கல்விமானும் உதாரண புருஷராகத் திகழ்ந்த மார்க்கஸ் ஒரேலியஸ் போஸ்டினாவிறாகு ஏற்பட்ட அனுபவத்தின் பின்னர் எந்த ஒரு மன்னனின் வாய்மூல உத்தரவுகளையும் செயல்படுத்த கூடாது எனவும் அவை கட்டாயமாக எழுத்து மூலமாக அமைந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்து சட்டம் இயற்றினார். அந்த சட்டம் தற்போது ரோம் அரசு அதிகாரிகள் ராஜதந்திரிகள் கடைபிடிக்க வேண்டிய சுற்றறிக்கையாக அது தற்போது திகழ்கிறது. இன்றுவரைக்கும் ரோமில் வழக்கில் உள்ளது.
2020 ஆம் ஆண்டு ஆகியுள்ள நிலையில் 25ஆம் திகதி ஜனாதிபதி கணக்கில் எடுக்காது பணியாற்றுமாறு கூறியது இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் நடைமுறையில் இருந்து வரும் சுற்றறிக்கை விடயத்தை ஆகும்.
அரசுகள் பல அபிவிருத்தி அடைந்து பின்னர் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஆட்சியாளரின் வாய்மொழி உத்தரவுகளை அன்றி அரசு அதிகாரிகள் சுற்றறிக்கைகள் மற்றும் ஏனைய சட்ட திட்டங்களின் அடிப்படையில் நிர்வாக சேவைகளை ஆற்றி வருகின்றனர். பாரிய தீர்மானங்களை எடுப்பதற்கும் தன்னுடைய அலுவலகத்தில் இயங்காமல் இருக்கும் மின்குமிழை அகற்றி புது மின்குமிழ் பொருத்துவதற்கு தேவையான வழிமுறைகளும் அரச சுற்றறிக்கையில் உள்ளது. கோத்தாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்தின் பின்னர் இனி அரச அலுவலகங்களில் சுட்டுப்போன மின்குமிழை மாற்றுவதற்கும் அரச அதிகாரிகள் ஜனாதிபதியின் வாய்மூல வார்த்தையை எதிர் பார்க்காமல் இருந்தால் சரி.
ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதியால் உத்தரவு பிறப்பித்து ஜனாதிபதி பதவியை மன்னர் பதவியாக நினைத்து செயல்படும் முதலாவது நபர் கோட்டாபய ராஜபக்ச அல்ல. இவ்விடயத்தில் முதன்மை பெறுபவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆவார். ரணசிங்க பிரேமதாச தான் அமரும் சிம்மாசனம் மற்றும் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்த பிறகு கால் வைக்கும் இடம் என்பவற்றை அதிக பணம் கொடுத்து தயாரிக்கும் அளவு அவருக்கு அதிகார தொற்று இருந்தது. அது மாத்திரமன்றி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு அரச நிறுவனங்களுக்கு உள்நுழைந்து தன்னை ஒரு மக்கள் நலன் சார்ந்த தலைவராக காட்டிக் கொள்ளவும் ரணசிங்க பிரேமதாஸ தவறவில்லை. இறுதியில் ஆமர் வீதியில் துண்டு துண்டாக உடைந்த நிலையில் உயிரிழந்தார். சடலத்தை கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சுக்கு நூறாகினார். அவர் இடுப்பில் அணிந்திருந்த கயிறு ஒன்றை வைத்து அடையாளம் காணப்பட்டார்.
ரணசிங்க பிரேமதாசவின் உத்தரவு இன்றி ஒன்றுமே நடக்காத அந்த காலம் தொடர்பில் அபூர்வமான அனுபவங்களை முன்னாள் அமைச்சர் அலிக் அலுவிஹார இந்தக் கட்டுரையை எழுதும் ஊடக நண்பரிடம் தெரிவித்திருந்தார். அலுவிஹார அப்போது துறைமுக அமைச்சராக இருந்தார். தனது அலுவலகத்தில் கதவு ஒன்றை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருந்த போதும் அதற்காக ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்து இறுதியில் அதனை மாற்ற வேண்டாம் என ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உத்தரவு வழங்கியதுடன் குறித்த கதவை மாற்றுவதன் மூலம் தனது ராசி பலனில் வீழ்ச்சி ஏற்படும் என ரணசிங்க பிரேமதாசவின் ஜோசியர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. துறைமுக அமைச்சராக இருந்து தனது அமைச்சில் ஒரு கதவினை மாற்றிக்கொள்ள முடியாத நிலைக்கு அளிக்க அலுவிஹார அன்று தள்ளப்பட்டார். ரணசிங்க பிரேமதாசாவுக்கு இருந்த அதிகாரத் தொற்று எந்த அளவு என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
ஜனாதிபதிகளின் 'வாய்மூல உத்தரவு' என்பது அதிகாரத்தின் உச்சக்கட்ட அசிங்கம் என்பது மறுக்க முடியாத ஒன்று.
இந்தக் கட்டுரையின் இறுதியில் கோட்டாபய ராஜபக்ச கருத்து வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாய்மொழி உத்தரவு ஒன்றை செயல்படுத்த சென்று மாட்டிக் கொண்ட விதத்தை ஞாபகப்படுத்திக் கொள்வது சிறந்தது.
ஜனாதிபதி சிறிசேன ஒரு தடவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வாவை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்ததாகவும் அதன்படி தானும் இடமாற்றம் செய்ததாகவும் ஆனால் இரண்டு நாட்களின் பின்னர் நிசாந்த சில்வாவை ஏன் இடமாற்றம் செய்தீர்கள் என சிறிசேன ஜனாதிபதி தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் 'ஏன் சார் நீங்கள் தானே அவ்வாறு செய்யச் சொன்னார்கள்' என்று தான் பதில் அளித்ததாகவும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்து இருந்தார்.
ஜனாதிபதிகளின் 'வாய்மூல உத்தரவு பைத்தியம்' உத்தரவு பிறப்பித்தவர் மற்றும் உத்தரவை செயல்படுத்தியவர் ஆகிய இருவரையும் அழிவுக்கு கொண்டு சென்ற விதமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் அழிவை ஏற்படுத்திய விதத்தை ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்கள் எமக்கு நிரூபித்துக் காட்டியுள்ளன.
மேற்கூறிய விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் பாதையும் அனைவரையும் அழிவை நோக்கி அழைத்துச் செல்வதாக காணப்படுவதுடன் 100 ஏக்கர் கிராமத்தில் இவருடைய பேச்சுக்கு கைத்தட்டிய நபர்களுக்கு இது விரைவில் புரியும்.
---------------------------
by (2020-09-27 09:43:34)
Leave a Reply