எழுதுவது சந்திர பிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 30 பிற்பகல் 2.45) ஜாதகம் இல்லாமல் முன்வைக்கப்பட்டு அதனை அரசாங்கத்திற்கு உள்ளேயே விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்ட இலங்கை வரலாற்றில் நாட்டு மக்கள் பயன்படுத்தும் இறைமையை பறித்தெடுக்க கூடியதான மன்னர் ஒருவரை உருவாக்கும் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வரலாறு படைக்கும் வகையில் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கு கூட இந்த அளவு உயர் நீதிமன்றில் எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை வரை 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் 28ம் திகதி மாத்திரம் 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுமார் 21 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அனைத்தையும் சேர்க்கும் போது மொத்தமாக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ரட்ணஜீவன் ஹூல், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இளைஞர் பிரிவு பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வர்த்தக மற்றும் வணிக பொது சேவை சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் 20ஆவது சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் உள்ள புதுமையான விடயம் மக்கள் விடுதலை முன்னணி 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உதவியை நாடவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்புக்கள் என பல தரப்பினரும் ஹிட்லர் ஆட்சியை உருவாக்கும் 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு சவால் விடுத்து நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் இவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அஞ்சாமல் சவால் விடுக்க முன்வந்துள்ளமை தெரிகிறது.
20ஆவது திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்ட ஒருவர் இல்லாமல் ஜாதகமற்ற சட்டம் மூலமாக மாறி இருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திடீரென முன்வந்து 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு தந்தையாகி 'பிறப்புச் சான்றிதழ்' வெளியிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ மீது உள்ள அச்சத்தின் காரணமாக இந்த சட்ட மூலத்திற்கு நீதிமன்றில் எதிர்ப்பு தெரிவிக்க எவரும் வரமாட்டார்கள் என நினைத்திருந்த சமயத்தில் அச்சமின்றி பல தரப்பினரும் இருபதாம் சட்டத்திற்கு எதிராக முன்வந்து மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மக்கள் மத்தியில் கேலிக்குரிய நபராக மாறி உள்ளதை இது காட்டி நிற்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இவரது உத்தரவுகள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்பட்டது. அதனால் வர்த்தமானி அறிவித்தல் விடுப்பது அதனை ஓரிரு நாட்களில் ரத்து செய்வதுமாக செயல்பட வேண்டி ஏற்பட்டது. ஜீ ஆர் என்றால் 'வர்த்தமானி ரிவர்ஸ்' என்று கேலி செய்யும் அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது. குறைந்தது நோய்த் தொற்று காலத்தில் வங்கி கடன் தவணைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு பிறப்பித்த உத்தரவை குப்பையில் வீசி சாதாரண காப்புறுதி நிறுவனங்கள் கூட கணக்கில் எடுக்கவில்லை. இது தொடர்பில் குரல் கொடுத்த முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பட்டப்பகலில் நடு வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் தன்னுடைய உத்தரவு சார்பாக முன்னிற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முதுகெலும்பு இருக்கவில்லை. அரச நிறுவனங்கள் தொடர்பில் இவர் நடத்தும் நாடகம் திடீரென அரச நிறுவனங்களுக்கு புகுந்து காட்டும் படம் இன்று கேலிக்கூத்தாக மாறியுள்ளது. இவை நாட்டு மக்களுக்கு நகைச்சுவை அளிக்கும் சம்பவங்களே தவிர இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. பிரபல நகைச்சுவை நடிகர் 'டெனிசன் குரே' மறைந்த பின்னர் நாட்டு மக்களுக்கு நகைச்சுவை வழங்குவதற்கு 'புதிய நபர்' உருவாகி உள்ளதாகவே கூற முடிகிறது. வீதி போக்குவரத்து ஒழுங்கு சட்டத்தை வெறும் இரண்டு நாட்களுக்கு மாத்திரமே இவரால் செயல்படுத்த முடிந்தது. அதனையும் திருப்பி பெற்றுக் கொண்டனர். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 'தேங்காய் அளவு' முறையும் நாட்டு மக்கள் மத்தியில் சுவாரஸ்யமான நகைச்சுவையாக மாறி உள்ளது. ஓரிரு நாட்களில் குறித்த வர்த்தமானியும் ரத்து செய்யப்படும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு. அரசியல் எவ்வித அனுபவமும் இல்லாமல் திடீரென ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டங்கள் எவையும் இந்த பூமியில் செயல்படுத்த முடியாதவையாக மாறி உள்ளன. ஜனாதிபதியாகி சுமார் பத்து மாத காலங்களில் அவர் முன்னெடுத்த செயற்பாடுகள் மூலம் கோட்டாபய ராஜபக்ச என்றால் 'பயம்' என்று இருந்த நிலை மாறி கோட்டாபய ராஜபக்ஷ என்றால் 'சிறந்த நகைச்சுவை' என்ற நிலைக்கு மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் சிறிது காலம் தொடர்ந்து கொண்டிருந்தால் நாட்டு மக்கள் 'கோட்டாவின் அம்மா..' என அழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும்.
எனினும் 28 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் அனைத்தும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் குழு முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய தலைமையில் புவனேகா அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்தன் மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் தலைமையில் பரிசீலனை செய்யப்படுகிறது.
மக்கள் மத்தியில் உள்ள அவர்களது இறைமைகளை ஏதேனும் ஒரு ஆட்சியாளர் பறிக்க முயற்சித்தால் அதனை வெறுமனே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் மாத்திரம் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அதற்கு கட்டாயம் மக்கள் விருப்பம் பெறப்பட வேண்டும். நீதிமன்றமும் மக்கள் இறைமைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படும் நிறுவனமாகும். கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தில் நீதிமன்றத்தில் உள்ள மக்கள் இறைமை பறிக்கப்பட்டு தனிநபர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. நாட்டு மக்களின் இறைமைக்கு சமனாக செயல்படும் பாராளுமன்றில் 18வது திருத்தத்திற்கு கையை உயர்த்தி 19 ஆவது திருத்தத்திற்கு கையை உயர்த்தி தற்போது தங்களின் கீழ் உள்ள அதிகாரத்தையும் அடகு வைக்கக் கூடிய 20ஆம் திருத்தச் சட்டத்திற்கும் கை உயர்த்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வரும் நிலையில் நீதிமன்றமும் அவ்வாறே செயல்படாது என்ற பரிபூரண நம்பிக்கையில் நாட்டு மக்கள் உள்ளனர். 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை இதற்கு சான்றாகும். 20 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்து நீதிபதிகள் தங்களுடைய நேர்மையை வெளிப்படுத்தக் கூடிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய தங்களது மனசாட்சியை பரீட்சித்து பார்க்க கூடிய சந்தர்ப்பமாக இது காணப்படுகிறது.
எப்படி இருப்பினும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதோடு மக்கள் விருப்பமும் கேட்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால் அதற்கு தயார் என நீதி அமைச்சர் முகமது உவைஸ் முகமது அலி சப்ரி தெரிவித்துள்ளார். அலி சப்ரி தன்னை அடி முட்டாள் என காட்டிக் கொள்ளும் அளவிற்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 20 ஆவது திருத்தச் சட்டம் என்பது ஜே ஆர் ஜெயவர்தன அவர்களின் 78ஆம் ஆண்டு யாப்பு திருத்தத்திற்கு பின் நோக்கி செல்வதாக அமையுமென கூறி இருந்தார். உலகில் அரசியல் யாப்புத் திருத்தங்கள் கொண்டு வருவது எதிர்காலத்தின் முன்னேற்றத்திற்காகவே தவிர பின்னடைவை நோக்கி செல்வதற்கு அல்ல. ஆனால் முட்டாள் அலி சப்ரியின் கருத்துப்படி சுமார் 42 வருடங்கள் பழமை வாய்ந்த அரசியல் யாப்பை நோக்கி நாம் பின் நகர்ந்து செல்வது புலனாகிறது. அலி சப்ரியின் தந்தையான 'களுத்துரை லோக்கா' தனது மகனின் முட்டாள்தனமான இந்த பேச்சை கேட்காமல் முன்னதாகவே அதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறான முட்டாள்தனமான கருத்தை அமைச்சர் ஒருவரால் அல்ல முட்டாள் அமைச்சர் ஒருவரால் மாத்திரமே கூற முடியும். அதனை நீதி அமைச்சர் அலி சப்ரி பதிவு செய்து காட்டியுள்ளார்.
---------------------------
by (2020-09-30 07:36:02)
Leave a Reply