~

20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணையின் போது நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சித்த அரசாங்கம்..! கோட்டா மற்றும் அலி சப்ரி தனிமைப்படுத்தல்..!

வெளிப்படுத்துவது சந்திர பிரதீப்‍

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 01 பிற்பகல் 2.25) வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனுக்கள் தொடர்பில் அரசாங்க தரப்பில் திருத்தங்கள் முன்வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்தமை நீதிமன்றத்தை முழுமையாக ஏமாற்றும் செயல் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

பிரதம நீதியரசர் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் கடந்த 29 ஆம் திகதி குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூல ஆவணத்தில் பாராளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது திருத்தங்கள் பல கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்து சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் சில ஆவணங்களை முன்வைத்துள்ளார். அதில் உள்ள திருத்தங்கள் என்ன என்பது கீழே உள்ள படங்களில் உள்ளது 57 சத்துக்களை உள்ளடக்கிய வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் 32 சரத்துக்களில் மீண்டும் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார். 

சட்டமா அதிபரின் இந்த ஆவண சமர்ப்பிப்பு உயர் நீதிமன்றத்தை ஏமாற்றும் செயலே தவிர உண்மையான நிலையாக இருக்காது என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் பாராளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் பாராளுமன்ற குழு நிலை விவாதத்தில் போது சமர்ப்பிக்கப்படுமா என்ற உறுதிப்பாடு இல்லை. அதற்குப் பிரதான காரணம் திருத்தங்களை முன்வைக்கும் சட்டமா அதிபர் பாராளுமன்றை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. அரசாங்கம் குறித்த திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை பாராளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது சமர்ப்பிக்கப் வில்லை என்றால் அது தொடர்பில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. எனவே நீதிமன்றம் குறித்த ஆவணத்தை உண்மையான ஆவணமாக கருதுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தை அடிப்படையாக வைத்தே நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

ஒரு எழுத்தை கூட மாற்ற முடியாது ஜனாதிபதி பிடிவாதம்..

திருத்தம் கொண்டு வர வாய்ப்பு இல்லை என்பதை 20வது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் தற்போது வெளியாகி உள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஊகிக்க முடியும். 20வது திருத்த சட்டத்தை ஆராய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் உடைய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அமைச்சரவையில் கூட சமர்ப்பிக்க முடியவில்லை. முக்கியமாக 20ஆவது திருத்தச் சட்டத்தில் ஒரு எழுத்தை கூட மாற்ற முடியாது என ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் உறுதிபட கூறியுள்ளார். இவ்வாறு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த செய்தி பொய்யானது அல்லது தவறானது என நிராகரிக்கும் பதில் செய்தி ஒன்று ஜனாதிபதியிடம் இருந்தோ அவரது ஊடகப் பிரிவில் இருந்து இன்று வரை வரவில்லை. அதனால் சட்ட மா அதிபரால் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை எவருக்கும் வர வாய்ப்பில்லை என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டும் மற்றுமொரு முக்கியமான விடயம், சாதாரண சட்டம் இயற்றும் போது குழு நிலை விவாதத்தின் போது மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் கொண்டு வரப்படும் என நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அரசியல் யாப்பு திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்ற ஒரு பதிவு நீதிமன்றில் இதுவரை இருக்கவில்லை என்பதாகும். அரசியல் யாப்பு திருத்த சட்ட மூலத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்ற ஆவணம் நம்பிக்கைக்குரிய ஒன்று அல்ல என தெரிவித்துள்ளனர். அதனால் சட்டமா அதிபர் மூலம் நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். 

மேலும் இருபதாவது சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் விருப்பம் பெறவும் பின் நிற்கப் போவதில்லை என தெரிவித்த நீதி அமைச்சர் அலி சபரி தற்போது அதில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கின்றமை மக்கள் விருப்பத்திற்கு செல்ல அஞ்சியா என கேள்வி எழுப்பப்படுகிறது. 

கோட்டா மற்றும் அலி சப்ரி ஆகியோர் தனிமையில்..

இந்த மனு விசாரணைகளின் போது விசேட சில அம்சங்கள் காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னால் அரசியல் யாப்பு திருத்தம் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது ஆளும் கட்சி தரப்பிலும் ஓரிருவர் மனுக்களை தாக்கல் செய்வர். காரணம் சட்ட மா அதிபருக்கு மேலதிகமாக அரசாங்கத்தின் தரப்பில் கருத்துக்கள் முன் வைக்கப்படுவது அவசியம் என்பதாலாகும். ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் 39 எதிர்க்கட்சிகள் மற்றும் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அரசியல் கட்சிகள் தேசிய அமைப்புகள் என கூறிக்கொள்ளும் அமைப்புகள் மஹிந்த வாதிகள் பிக்குகள் என அரசாங்க தரப்பில் இருந்து எவரும் நீதிமன்றத்தில் கருத்து  வெளியிட முன்வரவில்லை.  

மற்றும் ஒரு விசேடமான விடயம் நீதிமன்றத்திற்கு முன்னால் ராஜபக்ஷாக்களுக்கு ஆடைகளை கழட்டி கொண்டு வக்காலத்து வாங்கும் பிரதான சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டீ சில்வா ஆகிய இருவரும் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அரசாங்க தரப்பில் வாதாடுவதற்கு நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. முன்வைக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு திருத்தங்களைக் கொண்டுவர நியமிக்கப்பட்ட பிரதமரின் விசேட குழுவில் சட்ட ஆலோசகராக உள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்க முன்னிலை ஆகவில்லை.  எனினும் சுயாதீனமாக 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன மாத்திரமே நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். சஞ்சீவ ஜெயவர்தன அண்மையில் உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த ஜயவர்தனவின் சகோதரர் ஆவார்.  

எனினும் இந்த தகவல்கள் மூலம் இருப்பதாவது திருத்தச் சட்ட மூல விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது புதிய நீதி அமைச்சர் அலி சப்ரியும் தனிமை படுத்தப்பட்டு உள்ளது புலனாவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

சந்திர பிரதீப்‍ 

---------------------------
by     (2020-10-01 23:34:54)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links