~

மஹிந்த ராஜபக்ச கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாத்தான்களின் பின் பகுதியை காட்டினர் (Video)

எழுதுவது சந்திர பிரதீப்‍

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 04 பிற்பகல் 9.30) மெதமுலனவின் ராஜபக்சக்களுக்கு (எம் ஆர் கள்) கருதினால் எம் ஆர் என்ற மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாத்தான்களின் பின் பகுதியை காட்டியதாக சொல்லாமல் சொல்லி ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தின் மூலம் பல விடயங்கள் புரிய வைக்கப்பட்டுள்ளன. ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்பு இருப்பதற்கான சாற்சிகள் உள்ளதென முன்னதாக அறிவித்த ராஜபக்ச அரசாங்கமே ரிசாத் பதியுதீன் முன்னாள் அமைச்சரின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் வவுனியாவில் றிஷாத் பதியுதீன் மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவசரமாக சாட்சிகள் எதுவும் இல்லை என தெரிவித்து விடுதலை செய்தமை தொடர்பில் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தார். கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியூதீன் ஐந்து மாதங்களாக தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டார். 

இந்த அவசர விடுதலை தொடர்பாக சமூகத்திலும் அரசாங்கத்தின் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அதற்கு காரணம் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய சஹரான் உள்ளிட்ட குழுவினருடன் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தமைக்கான சாட்சிகள் இருப்பதாக தற்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  எஸ் எஸ் பி ஜாலிய சேனாரத்ன ஊடகங்களிடம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அதே பொலிஸ் ஊடக பேச்சாளர் ஊடகங்களில் முன்னிலையாகி ரியாஸ் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய சாட்சிகள் இல்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் திலீத் ஜெயவீரவின் ஊடகத்திற்கு நேரடியாக வந்து நேர்காணல் வழங்கிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சஹரான் குழுவினருடன் ரியாஜ் பதியுதீன் தொடர்புகளைப் பேணியமைக்கான ஆதாரங்கள் சாட்சிகள் இருப்பதாக தெரிவித்தார். ஒரு தற்கொலை குண்டுதாரியுடன் குண்டு வெடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பிரபல ஹோட்டலில் வைத்து சந்திப்பு நடத்தியதாகவும் விசேட சமூக நல அமைப்புகளை உருவாக்கி அதில் பதவிகளை வகித்து தற்கொலை குண்டுதாரி களுடன் தொடர்புகளை பேணிய தாகவும் குறித்த நிறுவனங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகள் முதலீடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்திருந்தார். 

அது மாத்திரமன்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமித்துள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த ஜூன் மாதம் முன்னிலையான பொலிஸ் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஒருவர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். 2017 ஆம் ஆண்டு சஹரானுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாகவும் அப்போது மன்னார் கடற்பரப்பின் ஊடாக சஹரான் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் உதவி செய்ததாகவும் அத்துடன் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மற்றுமொரு நபரையும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது தெரிந்தும் நாட்டில் இருந்து தப்பிக்க ரியாஜ் பதியுதீன் உதவி செய்ததாகவும் இது தொடர்பில் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் 2019 மார்ச் 22ம் திகதி அதாவது தற்கொலை குண்டு தாக்குதல் நடப்பதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்து இருந்ததாகவும் ஆணைக்குழுவின் முன் தகவல் வெளியிட்டிருந்தார். 

இந்தளவு சாட்சிகள் காணப்பட்ட சந்தேகநபர் ஒருவர் மீது திடீரென போலீசாருக்கு சாட்சிகள் இல்லாமல் போனது எப்படி? 

ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்ற கட்டட திறப்பு விழா நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு இருந்ததுடன் சிரித்து மகிழ்ச்சியாக இருந்ததை காண முடிந்தது. ரிசாத் பதியுதீனை கொன்று திண்பதற்காக பார்த்துக் கொண்டிருந்த பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன குட்டி போட்ட நாய் போன்று ரிஷாத் பதியுதீனுக்கு கை கொடுத்து வரவேற்பு அளித்ததை அங்கு காண முடிந்தது. இதன் மூலம் 20 ஆம் திருத்தச் சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பர் என்ற செய்தி ஊடகங்களில் பரவியது. இந்த நிலையிலேயே கமல் குணரத்னவின் கையொப்பத்தில் சுமார் ஐந்து மாதங்கள் தடுப்புக் காவலில் இருந்த ரியாஜ் குற்றமற்றவர் என கருதி விடுதலை செய்யப்பட்டார். 

மெதமுலன ராஜபக்ஷகளின் அரசியல் என்பது பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த காட்டாட்சி அரசியல் என்பதை இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு விலங்கினமும் அறிந்து வைத்திருக்கும் நிலையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஆண்டவர் இதனை உணர்த்த வில்லையோ என்னவோ தெரியவில்லை. அதனால் தான் ராஜபக்ஷக்களுக்கு வெள்ளை அடிக்கும் வேலையை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்து செய்து வந்தார். ராஜபக்சக்களின் கூலியாக செயல்படும் துமிந்த சில்வாவுடன் கூட கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூட்டிணைந்து செயல்பட்டார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசாங்கத்தை ஒழித்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடைக்கு அல்லாமல் சூப்பர் மார்க்கெட்டுக்கே சென்றார். இவர் நல்லாட்சி அரசாங்கத்தில் எவ்வித நல்ல விடயங்களையும் வரவேற்றது கிடையாது. 

அதன்படி ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் ரத்தம் சிந்துவதற்கு முன்னரே வெளிநாட்டில் இருந்த கோட்டாபய ராஜபக்ச தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த போதும் இந்த குண்டு தாக்குதல்களுடன் மெதமுலன ராஜபக்ஷக்களுக்கு தொடர்பு இருந்ததா என்ற சிறிய சந்தேகத்தை கூட எழுப்புவதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு மூளை இருக்கவில்லை. இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது திணித்து விட்டு ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர செயல்பட்டார். ஞாயிறு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவர் என விளம்பரம் செய்து வந்தார். அதற்கு ராஜபக்சக்களின் ஆசிர்வாதமும் கிடைத்தது. 

இருந்த போதிலும் ஆண்டவர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கண்ணை திறந்து போல ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டதுடன் மெதமுலன ராஜபக்ஷ தனக்கு சாத்தான்களின் பின்பக்கத்தை காட்டியதாக விலங்கிக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. இந்த நாட்டிலுள்ள புத்தி சாதுரியமான கத்தோலிக்க மக்களின் அழுத்தத்தால் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த 3 ஆம் திகதி ஊடக சந்திப்பு நடத்தி ராஜபக்சக்கள் தொடர்பில் புலம்பினார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முகத்தை பார்க்கும் போது ராஜபக்சக்கள் அவருக்கு காட்டிய சாத்தான்களின் பின்பக்கம் போலவே எமக்கு தெரிந்தது. 

சந்திர பிரதீப்‍  

கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஊடக சந்திப்பு வீடியோ கீழே 

---------------------------
by     (2020-10-06 00:49:26)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links