வெளியிடுவது சந்திர பிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 07 பிற்பகல் 9.30) மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா பரவல் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி இந்தியாவின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு வந்த யூ எல் 1159 என்ற விமானத்தில் இருந்து வந்த இந்திய பிரஜைகளால் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பிரண்ட்க்ஸ் நிறுவனத்தால் கூலிக்கு பெறப்பட்ட தனியார் விமானம் ஒன்றில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். (சாட்சி கீழுள்ள புகைப்படத்தில் உள்ளது) வெளியாகும் தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இலங்கையின் கொரோனா தடுப்பு திட்டங்களுக்கு உள்வாங்கப் படாமல் அனுப்பப்பட்டுள்ளனர். காரணம் 22 ஆம் திகதி நாட்டுக்கு வந்தவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டிலே தனிமையிலிருந்து அவர்கள் சமூகத்துடன் இணைய வேண்டுமானால் அது எதிர்வரும் ஒக்ரோபர் 20 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது. முறையாக நடந்திருந்தால் ஒக்டோபர் 5 ஆம் திகதி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பெண் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இருக்க வேண்டும். ஆனால் பிரண்டிக்ஸ் நிறுவனம் குறித்த நபர்களை வீட்டில் தனிமை படுத்துவதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அரசாங்கத்தின் உயர் பீட தலையீட்டில் இவ்வாறு முழுமையான தனிமைப்படுத்தல் இன்றி சமூகமய படுத்தப்பட்டுள்ளனர்.
பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் ஆடை உற்பத்தி தொழிற்சாலை இந்தியாவிலும் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக வெளி நாடுகளில் இந்தியாவுக்கு காணப்பட்ட ஆடை கேள்விகள் ரத்து செய்யப்பட்டு அந்த வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருந்தது. அதன்படி இந்தியாவின் பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த ஜோக்கி என்ற உள்ளாடை தைப்பதற்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாடை தைத்தல் வேலையில் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் சிலர் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் தனி கூலி விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேற்கூறிய இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் கரோனா தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முறையாக உள்வாங்கப்படாமல் பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் சேவை புரிந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒக்டோபர் 5 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட போதும் இன்று சுகாதாரப் பிரிவினர் வழங்கிய தகவல் படி செப்டம்பர் 25ம் திகதியே கரோனா வைரஸ் குறித்த ஆடை தொழிற்சாலையில் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் அதன் பின்னர் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்படுவதாக குறித்த ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 6 பேர் தங்களது மேலிடத்திற்கு தெரிவித்திருந்த போதும் தொடர்ந்து சேவை புரியுமாறு குறித்து ஊழியர்கள் மேலிடத்தினால் பணிக்கப்பட்டுள்ளனர். அதனால் கொரோனா வைரஸை கொண்டு வந்ததாக கடந்த வாரங்களில் அரச ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் விமர்சித்த திவுலபிட்டிய பெண் முதலாவது கொரோனா தொற்று நோயாளர் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெளிவாக தெரியும் விடையம் என்னவென்றால் இந்தியாவில் இருந்து வந்தவர்களால் கொரோனா வைரஸ் பரப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை வந்த இந்தியர்கள் இலங்கையில் உள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் கிளைகள் பலவற்றிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீரிகம, பண்ணல மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் பிரண்ட்க்ஸ் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய பிரஜைகள் எந்த கிளைக்கு சென்றார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என்ற போதும் சீதுவை, பண்ணல, மீரிகம போன்ற பிரண்ட்க்ஸ் கிளைகள் காணப்படும் பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கை வந்த இந்திய பிரஜைகள் குழுவில் இருந்து ஒருவர் பிரண்ட்க்ஸ் நிறுவன ஊழியர்கள் சிலருடன் கொழும்பிலுள்ள பிரபல கரோகே நிலையங்களுக்கு சென்றுள்ளதாகவும் ஆனால் தற்போது குறித்த இந்தியர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் தெரிவித்தார். இலங்கையில் கொரோனா பரிசோதகர்கள் இந்த கரோகே விடையத்தை கடந்த 5ம் திகதி தெரிந்து வைத்திருந்த நிலையில் அன்றைய தினமே குறித்த கொழும்பு பகுதிக்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்க ஏற்பாடாகி இருந்த நிலையில் உயர் அழுத்தம் காரணமாக அது பிற்போடப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரண்டிக்ஸ் உரிமையாளர்கள் தமக்குள்ள உயர் அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி மேற்கூறிய இந்திய பிரஜைகள் குழுவினர் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்தாமல் வெளியில் கொண்டு வந்தது எப்படி?
இலங்கையில் தற்போதைய புதிய ஆடைத் தொழிலின் தந்தை என கருதப்படுவது அமெரிக்காவின் எதிர்கால நோக்கு கொண்ட வியாபாரியான மார்ட்டின் டிரஸ்டி ஆவார். பிரண்டிக்ஸ் நிறுவனம் 1969 ஆம் ஆண்டு இவரது தலைமையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு பிரண்டிக்ஸ் நிறுவனம் ஓமார் குரூப் என்ற நிறுவனத்துடன் இணைந்து கூட்டு வியாபாரத்தை ஆரம்பித்தது. அதன் பின்னர் இலங்கையின் பெயர் பெற்ற வியாபாரியான தேசமானிய கேன் பாலேந்திரன் தலைமைத்துவத்தில் பிரதான நிறைவேற்று பதவியுடன் பிரண்டிக்ஸ் நிறுவனம் இலங்கை ஆடை தொழிற்சாலையில் முன்னிலை பெற்றது. கேன் பாலேந்திரன் ஓய்வு பெற்றதன் பின்னர் பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரியாக அஸ்ரொப் ஓமார் தெரிவு செய்யப்பட்டார். ஓமார் குடும்பத்தில் அஸ்லாம் ஓமார், பெரோஸ் ஓமார் ஆகியோரும் பிரண்டிக்ஸ் நிறுவன பணிப்பாளர் சபையில் இருந்தனர். ஏனைய நான்கு பணிப்பாளர்களும் உள்ளனர். எனவே பிரண்டிக்ஸ் ஓமார் அவர்களின் வியாபாரம் என்று கூறினால் அது பிழை அல்ல.
மேற்கூறிய அஸ்ரொப் ஓமார் என்பவர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர வியத்மக ஊடக செயல்பட்ட பிரதானி ஆவார். இவருக்கு முன்னால் கமல் குணரத்ன போன்றோர் சிறியவர்களே. லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைத்துள்ள தகவல் படி ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முதலாவது தேர்தல் பிரச்சார தொகையாக ஆயிரம் மில்லியன் ரூபாவை அஸரொப் ஓமார் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றிலிருந்து பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரியாக முன்னாள் விமானப்படை தளபதி (2011 – 2014) ஸர்ச அபேவிக்ரம செயல்படுகிறார். ஹர்ஷ அபேவிிக்ரம 52 நாள் ஆட்சியில் இலங்கை வங்கியின் தலைவராகவும் செயல்பட்டார்.
எனவே மேற்கூறிய இந்திய பிரஜைகள் இலங்கையின் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படாமல் வெளியில் வந்தது ஜனாதிபதியில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஊடாக செயல்படும் பிரண்ட்ஸ் நட்புறவை அடிப்படையாக வைத்தே என்பதை இலங்கையின் புத்தியுள்ள மக்களுக்கு சொல்ல வேண்டுமா?
இந்த விடயம் 7 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற சபை அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோரால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது எதிர்க்கட்சியின் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாராளுமன்றத்திற்கு இவ்விடயம் வந்ததன் பின்னர் இலங்கையின் 'கொரோனா பெரியவர்' என அழைக்கப்படும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் பிரண்டிக்ஸ் நிறுவனமும் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த குற்றச்சாட்டை நிராகரித்த இருந்தது. கூலிக்கு பெறப்பட்ட மூன்று விமானங்களின் மூலம் இந்தியாவில் இருந்து நபர்கள் அழைத்து வரப்பட்டது உண்மை என்றாலும் அவர்கள் இந்தியாவில் உள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இலங்கை பணியாளர்கள் எனவும் இதில் இந்திய பிரஜைகள் எவரும் இருக்கவில்லை எனவும் இந்தியாவிலிருந்து எவ்வித துணி வகைகளும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் இந்தியாவிலிருந்து வந்த இலங்கைப் பணியாளர்கள் முறையான கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய இரண்டு நிராகரிப்புகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. சவேந்திர சில்வாவின் நிராகரிப்பை அடுத்து இந்தியாவில் இருந்து மூன்று விமானங்கள் இலங்கைக்கு வந்ததாக பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சவேந்திர சில்வா தெரிவிக்கவில்லை. பிரண்ட்க்ஸ் நிறுவனம் குறித்த மூன்று விமானங்களும் எந்த திகதியில் இலங்கைக்கு வந்தது என்பதை குறிப்பிடவில்லை. அத்துடன் தாம் அழைத்து வந்தது இலங்கை பிரஜைகள் என்றால் அவர்கள் தற்போது எந்த எந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கிறார்கள் என்பதையும் பிரண்டிக்ஸ் நிறுவனம் தெரிவிக்குமா?
எனினும் இந்த கட்டுரையை எழுதி முடிக்கும் போது எமக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பிரண்டிக்ஸ் நிறுவன பொறுப்பாளர் அஸ்ரொப் ஓமாரை தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 'நீ என்னை திண்றுவிட்டாய்' என திட்டி உள்ளார்.
பின்குறிப்பு :
பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பரவிய கொரோனா தோற்று இந்தியாவில் இருந்து வந்தவர்களால் பரப்பப்பட்டதா முதல் முதலாக செய்தி வெளியிட்டது ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமான இணையதளத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2020-10-08 14:18:45)
Leave a Reply