~

தரத்தை நிரூபித்துள்ள கற்றவர்கள்..! பௌத்த தகவல் மத்திய நிலையம் பேக்கரி மற்றும் ஹோட்டலாக மாற்றம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 17 முற்பகல் 9.40) தற்போதைய அரசாங்கத்தில் கல்வி கற்றவர்கள் என கூறிக் கொள்ளும் நபர்கள் தங்கள் தரம் என்ன என்பதை காட்டும் வகையில் உலகிற்கு அதனை உரத்து சொல்லும் அளவிற்கு பௌத்த தகவல் மத்திய நிலையம் மற்றும் அமைதியாக இருந்து வாசிக்கக் கூடிய நூலகம் என்பவற்றை பேக்கரி மற்றும் ஹோட்டலாக மாற்றி அமைத்துள்ளனர். 

கடந்த அரசாங்க காலத்தின் போது மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெரிய நகரங்கள் அபிவிருத்தி அமைச்சராக இருந்த பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கருத்திட்டத்தில்  கிம்புலாவல நீர் தேக்கத்திற்கு மத்தியில் அழகிய  அமைதியான சூழலில் கட்டிடம் ஒன்றை அமைத்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றையும் அதற்குள் வாசிப்பு நிலையம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இந்த கட்டடத்தை நாட்டில் பௌத்தத்திற்கு கௌரவம் வழங்கும் தலைவராக கருதப்படும் அப்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமை தாங்கி திறந்து வைத்தார். அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட பௌத்த பிக்குகள் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரிடம் பெறுமதி வாய்ந்த பௌத்த புத்தகங்களையும் வழங்கிய வைத்தனர்.  

புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி புராதன பௌத்த ஆவணங்கள், பௌத்த நூலகம், எழுத்து வடிவங்கள் என பல அம்சங்கள் இந்த பௌத்த மத்திய நிலையத்தில் காணப்பட்டது. பௌத்த மதத்தில் பெருமைகளை எடுத்துக் கூறும் பல விடயங்கள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டு இருந்தன. பௌத்த கல்வியை அமைதியான அழகிய சூழலுல் முன்னெடுத்துச் செல்லக்கூடிய அளவு வசதிகள் இந்த மத்திய நிலையத்தில் காணப்பட்டன. 

பாரிய அழிவு..! நூலகத்திற்கு தீ வைத்த ஆட்சியாளர்கள் உள்ள நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் குறித்த பௌத்த மத்திய நிலைய கட்டிடத்தை தற்போதைய அரசாங்கம் பேக்கரி மற்றும் ஹோட்டலாக மாற்றி அமைத்துள்ளது. இன்று நகர அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இராஜாங்க அமைச்சராக கல்வி கற்ற புத்திசாலி எனக் கூறப்படும் கலாநிதி நாலக கொடஹேவாவும் உள்ளனர். இவ்வாறான படித்தவர்களுக்கு கிம்புலாகல நீர் தேக்கத்திற்கு அருகில் ஹோட்டல் நடத்துவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லை போலும். 

கிம்புலாகல பௌத்த மத்திய நிலையம் திறக்கப்பட்ட போதும் தற்போது அதன் நிலை குறித்தும் கீழே புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

---------------------------
by     (2020-10-17 16:58:49)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links