~

பதில் பிரதமர் யோசித்த ராஜபக்ஷ...!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 17 பிற்பகல் 12.40) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாற் தொகுதி பிரதானியாக அவரது இரண்டாவது மகனும் கடற்படை உறுப்பினருமாகிய யோசித்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். 16ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நியமனத்தை யோசித்த ராஜபக்ஷவிற்கு வழங்கியுள்ளார். அன்றைய தினமே யோசித்த ராஜபக்ஷ பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் உடனடியாக கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் பதில் தூதுவர் ஹூ வெய் யோசித்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தமை விசேட அம்சமாகக் கருதப்படுகிறது. 

இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அதாவது 2019 டிசெம்பர் 14ம் திகதி அறிக்கை ஒன்றை வௌியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்கள் தமது தனிப்பட்ட பணியாற் தொகுதிக்கு உறவினர்களை நியமிக்கக் கூடாதென கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி ஜனாதிபதியின் உத்தரவை மதிக்காது பிரதமர் இந்த நியமனத்தை செய்திருக்க வேண்டும். இல்லாவிடின் யோசித்த ராஜபக்ஷவை தனது மகனாக கருதாமல் இந்த நியமனத்தை வழங்கி இருக்க வேண்டும். 

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமது கடமைகளை செய்து கொள்ள முடியாத அளவு அவரது சுகாதார நிலை மற்றும் உடல் நிலை மாற்றம் அடைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் பிரதமர் தனக்கு மிகவும் நம்பிக்கையான மகனை பணியாற் தொகுதி பிரதானியாக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் இன்று இலங்கையில் பிரதமர் பதவியில் உத்தியோகபூர்வமற்ற பதில் பிரதமராக யோசித்த ராஜபக்ஷ கடமை புரிகிறார் என்றே கூற வேண்டும். சீன தூதரகம் அந்த அளவு அவசரமாக யோசித்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவிக்க காரணமும் பதில் பிரதமராக யோசித்த செயற்படுவார் என்ற நம்பிக்கையில் ஆகும். 

இதேவேளை, யோசித்த ராஜபக்ஷ உரிய தகுதிகள் இன்றியே கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் யோசித்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஒரே தடவையில் ஆறு பாடங்கள் கூட சித்தியடையாதவர் எனவும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நலின் ஜயதிஸ்ஸ கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாராளுமன்றில் ஆதாரபூர்வமாக நிரூபித்தார். அப்படி இருந்தபோதும் தகுதி அற்ற யோசித்த ராஜபக்ஷ வௌிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கடற்படை பயிற்சி பெறவென மக்களின் வரிப் பணம் இரண்டரை கோடி செலவிடப்பட்டதாக  நலின் ஜயதிஸ்ஸ பாராளுமன்றில் கூறியிருந்தார். 

---------------------------
by     (2020-10-17 16:58:34)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links