~

கிறிஸ்துமஸ் வரும் நிலையில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி..! மில்லியன் கணக்கான தடுப்பூசி குப்பிகளை உருவாக்குவது எப்படி என்பது தெரியவருகிறது..! ராஜபக்சர்கள் கொரோனாவையும் காரணமாக பயன்படுத்துகிறார்கள்.. !!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 19 பிற்பகல் 03.20) கோவிட் 19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கிறிஸ்மஸுக்குப் பிறகு பொது மக்களுக்கு கிடைக்கும் என்று ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ( NHS-UK ) துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் அறிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி குப்பிகள் தயாரிக்கும் முறைகள் தொடர்பான வீடியோ காட்சிகளை அவர் வௌியிட்டுள்ளார். 

கிறிஸ்மஸ் முடிவுக்கு வருவதுடன் கோவிட் 19 க்கு எதிரான தடுப்பூசி பொது மக்களுக்குக் கிடைக்கக் கூடும் என்றும் அதற்காக ஆயிரக்கணக்கான  NHS  ஊழியர்களுக்கு தற்போது வைரஸிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்ற ஒரு "வலுவான விரிவான திட்டத்தை" தொடங்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் பேராசிரியர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.   

கிறிஸ்துமஸ்ஸுடன் நோய் தடுப்பு குப்பி...

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட மூன்றாம் கட்ட தடுப்பூசி பொது மக்களுக்கு டிசம்பர் மாதம் அளவில் கிடைக்கக் கூடும் என்று பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் பிரிட்டிஸ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். ( AstraZeneca என்பது பிரிட்டிஷ்-ஸ்வீடின் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமாகும், இது தடுப்பூசிகளை தயாரிக்கிறது.)

பெரிய பிரித்தானியா கடந்த வார இறுதியில் தனது சுகாதார சட்டங்களை மாற்றி அமைத்தது. அதன்மூலம் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கக்கூடிய பயிற்சி பெற்ற சுகாதார அதிகாரிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியது. புதிய விதிமுறைகளின் கீழ், புதிய மருந்தாளுநர்கள், பல் மருத்துவர்கள், மருத்துவச்சிகள் மற்றும் துணை மருத்துவர்களும் பொது மக்களுக்கு ஊசி போடுவதற்கு புதிய சட்டம் அனுமதி அளித்துள்ளது. 

முதலாம் சுற்று தடுப்பூசிகள் முதியோருக்கும், சமூகத்தில் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கும் வழங்கப்படும்.  ஆபத்தில் உள்ளவர்களுக்கு பின்னர் தடுப்பூசி வழங்கப்படும். பின்னர் தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படும். பிரித்தானிய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, முக கவசங்களை அணிந்து கொள்வதும், அவற்றிலிருந்து விலகி இருப்பதும் 2021 ஜூலை வரை மட்டுமே சாத்தியமாகும்.

மில்லியன் கணக்கான தடுப்பூசி குப்பிகளை தயாரிக்கும் காணொளி, புகைப்படம்...

பெரிய பிரித்தானியாவின் NHS துணைத் தலைமைப் பணிப்பாளர் அறிவிப்பு விடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, உலகில் பாரிய அளவு வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான ப்பைசெர்  (Pfizer) பெல்ஜியத்தின் ஃபைசரில் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில்  மில்லியன் கணக்கான பெரிய அளவிலான கோவிட் -19 தடுப்பு ஊசி குப்பிகளை தயாரிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை சர்வதேச ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியுள்ளது. 

"தொழிற்சாலையிலிருந்து முதல் கோவிட் -19 குப்பியை வெளியே வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது பெரிய பிரித்தானியாவிற்கு 40 மில்லியன் குப்பிகளை வழங்கும். (இந்தஅறிக்கைக்கும் NHS   துணைத் தலைவரின் கூற்றுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறது.) பைசர் தடுப்பூசிக்கு ஒரு நபருக்கு இரண்டு டோஸ் இரண்டு டோஸ் தேவைப்படுகிறது" என்று ஃபைசரின் தலைமை நிர்வாகி பென் ஆஸ்போர்ன் தெரிவித்துள்ளார். 

கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்க ஃபைசர் என்ற மருந்து நிறுவனம் ஜெர்மனியில் பயோஎன்டெக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது, இதுவரை 44,000 மருத்துவ பரிசோதனைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகமே கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கையில் இலங்கையின் அண்ணன் தம்பி ஆட்சியாளர்கள் கொரோனாவை சாட்டாக பயன்படுத்தும் விதம்..

இந்த செய்தி அறிக்கையை முடிப்பதற்கு முன், இலங்கை வாசகர்களுக்கு வலியுறுத்த வேண்டி ஒரு முக்கியமான விடயம் உள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில் கோவிட் -19 தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி ஒன்றைக் கொண்டு வருவதற்கு அனைத்து நாகரிக உலக சக்திகளும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கையில், இலங்கையில் பழங்குடி அண்ணன் தம்பி இணைந்த அரசாங்கம் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இது தொற்று நோய்க்குப் பின்னர் சர்வாதிகார ஆட்சியை குடும்பமயமாக்கிக் கொள்ளும் முயற்சியாகும். 

ராஜபக்ஷ குடும்பம் சுனாமி பேரழிவின் போது பணம் சம்பாதித்தது போல கொரோனா தொற்று நோய் காலத்திலும் ஒரு நன்மையை பெற முயற்சிக்கிறது. முழு உலகமும் தங்கள் நாடுகளில் கொரோனா சிகிச்சை மையங்களை விரிவுபடுத்தின. ஆனால் 'தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள்' என்ற நிலையத்தை உருவாக்கவில்லை. கொரோனா முதன்முதலில் பரவியபோது, பல மருத்துவ மனைகளைக் கொண்ட பிரித்தானியா இரண்டு நாட்களில் இராணுவ வீரர்களை பயன்படுத்தி ஒரு பெரிய உட்புற மைதானத்தில் வென்டிலேட்டர்களுடன் 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனையை கட்டியது. தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கவில்லை. ஆயிரக்கணக்கில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற எந்தவொரு நாடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்படவில்லை. மக்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தை கடைபிடித்தனர். அத்தகைய நபரின் நிலை மோசமடைந்து விட்டால், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். இருப்பினும், சிகிச்சை மையங்களை மேம்படுத்துவதற்கும் அவற்றை ஒரே மட்டத்தில் வைத்திருப்பதற்கும் இலங்கை முயற்சிக்கவில்லை. (இலங்கையில் அம்மை நோய் வந்தால் மக்கள் வீட்டிலேயே தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவில்லையா? அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்குச் சென்றார்களா?)

உதாரணமாக, ஒரு வெளிநாட்டவர் பி.சி.ஆர் அறிக்கையை 72 மணி நேரத்திற்கு முன்பே பெற வேண்டும். விமான நிலையத்திற்கு வந்ததும், மற்றொரு பி.சி.ஆர் அறிக்கை பெறப்படுகிறது. இரண்டும் எதிர்மறையாக இருக்கும்போது கூட, அவர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்படுகிறார். பி.சி.ஆர் 2 எதிர்மறையாக இருந்தால், அவரை ஏன் வீட்டிற்கு அனுப்பி, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளச் சொல்லக்கூடாது? ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டால் அங்கு அவருக்கு 14 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ .17,500 ரூபா வீதம் 2,45,000 ரூபா அறவிடப்படுகிறது. மற்றுமொரு இடத்தில் நாள் ஒன்றுக்கு 12500 ரூபா வீதம் 175000 ரூபா அறவிடப்படுகிறது. இந்த அறவீடுகள் மூலம் வரும் கமிஷன்கள் ராஜபக்ஷ உதவியாளர்களிடம் செல்கின்றன. இலங்கையில் 70 ஹோட்டல்கள் கொரோனா முதலாளி சவேந்திராவுக்கு கமிஷன் செலுத்துகின்றன. சில ஹோட்டல்கள் திலித் ஜெயவீரவுக்கு சொந்தமானவை. சில ஹோட்டல்கள் கிளப் வசந்தவுக்கு சொந்தமானவை. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் ஐ.டி.எச் மருத்துவமனையில் இன்னும் ஐநூறு பழைய படுக்கைகளே உள்ளன.

தேர்தல் ஒன்று அவசியம் என்பதால் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸை மறக்கடிக்கச் செய்தனர்.  "கொரோனாவை இல்லாதொழித்த சிறந்த நாடு" என்று சொல்லிக் கொண்டார்களே தவிர பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. சோதனை இல்லாமல் 'வைரஸ் முடிந்துவிட்டது' என்று கூறி அதிகாரப்பூர்வமற்ற முறையில் நாட்டைத் திறந்தார்கள். ஆனால் விமான நிலையம் திறக்கப்படவில்லை. ஏனென்றால், வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடமிருந்து இந்த பணத்தை அறவிட முடியாது. பிரித்தானியா வாரத்தின் கடைசி இரண்டு நாட்களில் 2 மில்லியன் பி.சி.ஆர் சோதனைகளை நடத்தி முடித்துள்ளது. ஒரு நாட்டைத் திறப்பதற்கு முன்னர் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றாலும், எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் ராஜபக்சர்கள் தேர்தலின் ஆரம்பத்தில் இலங்கையைத் திறந்தனர். அப்போதும் கூட, தலைவர்கள் கொரோனா என்ற தொற்றுநோய் இல்லை என்பது போல் நடந்து கொண்டனர். குழந்தைகள் முகமூடி அணிந்தபோது எதுவும் அணியாமல் ஜனாதிபதி சிறு குழந்தைகளுடன் ஒரு பள்ளிக்குச் சென்றார். கொரோனா சட்டங்கள் மற்ற சட்டங்களைப் போலவே மதிக்கப்படாமல் இருந்தன. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு உதவியவர்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை. இன்று, பிராண்டிக்ஸை விரும்பியபடி செயல்பட அரசாங்கம் அனுமதித்ததன் விளைவாகவே முழு நாடும் கொரோனா தொற்றை அனுபவித்து வருகிறது.

தடுப்பூசியிலும் ராஜபக்சக்கள் சுருட்டிக் கொள்வர்..

ராஜபக்சக்கள் கொரோனாவை தங்களது நலனுக்காக பயன்படுத்தியதால் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.   அரசாங்கம் என்ன சொன்னாலும், இலங்கையில் தொற்றுநோய் இன்று கட்டுப்பாட்டில் இல்லை. இது தொடர்பாக அரசாங்கம் வழங்கிய புள்ளிவிவரங்கள் எதுவும் ஏற்கத்தக்கவை அல்ல. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 1 சதவிகிதத்தினர் இறந்து விடுகிறார்கள், அதே நேரத்தில் இலங்கையில் கோவிட் தொற்று நோய்களின் எண்ணிக்கை 5,000 க்கும் அதிகமாக உள்ளது, ஆனால் இறப்பு எண்ணிக்கை 13 ஆகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இலங்கையில் குறைந்தபட்ச இறப்பு எண்ணிக்கை 50 ஆக இருக்க வேண்டும். ஆனால் ராஜபக்சக்கள் 13 மட்டுமே சொல்கிறார்கள். ஆனால் இலங்கைக்கு வெளியே சுமார் 75 இலங்கையர்கள் இறந்துள்ளனர். ராஜபக்சக்கள் அந்த இறப்புகளைக் கூட எண்ணுவதில்லை. ஒன்று ராஜபக்ஷர்கள் பொய் சொல்கிறார்கள். அல்லது உலகின் பிற பகுதிகளில் காணப்படும் கோவிட் -19 தவிர வேறு ஒரு வைரஸ் இலங்கையில் பரவி உள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று நோய் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள புதிய அரசாங்கம் வர வேண்டும். ஆனால் அதற்குள் உண்மைகள் அழிக்கப்பட்டிருக்கலாம். இதுபோன்ற தவறான தகவல்களை உலகுக்குச் சொல்வது இலங்கைக்கு கடுமையான தீங்குகளை விளைவிக்கும் என்பது உறுதி. இந்த தொற்று நோய்க்கான இழப்பீடுகளை சில நேரங்களில் அப்போது திருப்பிச் செலுத்த நேரிடும்.

என்றும் ராஜபக்சக்கள் மக்களுக்கு பச்சை பொய்களை சொல்லியிருக்கிறார்கள். கெபரா விளையாடுகிறார், கொரோனா காரணமாக வைத்து சர்வாதிகார நிலையை ஏற்படுத்த பல விளையாட்டுக்களை காட்டுகின்றனர். தொற்று நோய்க்கு எதிராக உலகம் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ள போதிலும், இலங்கை மக்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்கும் போது அதிலும் ராஜபக்ஷக்கள் தங்களது பங்கினை சுருட்டிக் கொள்வார்கள் என்பது மாத்திரம் உறுதி.

சந்திரபிரதீப்

---------------------------
by     (2020-10-20 18:38:17)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links