(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 08 முற்பகல் 08.10) இலங்கையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகின்றமை மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக எவ்வித நோய் அறிகுறிகளும் இன்றி வீட்டிற்கு உள்ளேயே சிலர் உயிரிழந்துள்ளமை போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு சரியான நிலைப்பாட்டிற்கு வராமல் மன்னர் குடும்பம் மற்றும் அவர்களை நெருங்கி பழகும் நபர்களுக்கு மாத்திரம் சீனாவில் இருந்து கிடைத்த வைரஸ் தடுப்பு வெக்சின் ஊசி ஒன்றை உடலில் ஏற்றிக் கொண்டு, கொரோனா ஒழிய வேண்டுமென கங்கைகளில் புனித நீர் அடங்கிய மண் பானைகளை வீசி சுமார் 11 நாட்களின் பின்னர் ஊரடங்கில் இருந்த நாட்டை நாளை 9 ஆம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்று ஒரு வருடம் பூர்த்தி அடைவதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு 75 வது பிறந்த தினமும் வருகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் விசேடமாக கொண்டாடுவதன் நோக்கமாகவே நாடு திறக்கப்படுவதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாம் ஆண்டு நிறைவு எதிர்வரும் 18 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அதே தினத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமும் கொண்டாடப்பட உள்ளது.
அது மாத்திரமன்றி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று பெரும்பாலும் அதே தினத்தில் பிரபல அமைச்சுப் பதவி ஒன்றிலும் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் தூர பிரதேசங்களில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கருத்திற் கொள்ளாமல் இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து அழைக்கப்பட்டுள்ளமையால் சிறிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முழு பொரளை பொலிஸ் நிலையமும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. பொரளை பொலிஸ் நிலையத்தில் உள்ள 43 உத்தியோகத்தர்களில் 36 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை காணப்படும் போது தூர பிரதேசங்களில் உள்ள பொலிஸார் கொழும்புக்கு வர அச்சம் கொண்டுள்ள போதிலும் கடமையை புறந்தள்ளி விட முடியாது என்ற காரணத்தால் கொரோனாவிற்கு உயிரையும் கொடுத்து கடமைக்கு செல்ல தலைபட்டுள்ளனர்.
கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் நாட்டை மூடி வைத்திருந்த ராஜபக்ஷக்கள் அப்போது தேர்தல் ஒன்று வந்த காரணத்தால் நாட்டு மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கி உலர் உணவுப் பொருட்களையும் வீடுகளுக்கே அனுப்பி நாடகம் ஆடிய நிலையில் தற்போதைய கொரோனா வைரஸ் சூழலில் நாட்டை மூடினாலும் நிவாரண விடயங்களை சரியாக முன்னெடுக்கவில்லை. வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு 14 தொடக்கம் 28 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை கட்டாயம் முன்னெடுக்க வேண்டிய போதும் அதனை செய்யாது 11 நாட்களில் நாட்டை திறப்பதன் நோக்கமாக ஊரடங்கு உத்தரவை நீக்கத் தீர்மானித்துள்ளனர். எனினும் நாளாந்தம் உழைக்கும் மக்களின் கஸ்டத்தை கருதியே நாட்டை திறப்பதாக பொய் காரணம் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி காலத்தில் பொய் கூறிய உலகின் பிரபல தலைவர் ஒருவருக்கு நேற்று வீடு செல்ல நேரிட்டது. அவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் ஆவார். கொரோனா வைரஸ் காலத்தில் நாட்டு மக்களுக்கு டொனால்ட் டிரம்ப் பொய் கூறியதாக தேர்தல் பிரச்சார மேடைகளில் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது. இவ்வாறான பிரச்சாரத்தை கொண்டு சென்ற சுயாதீன நிறுவனங்களில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புகழ்பெற்ற ஏப்ரஹாம் லிங்கன் பெயரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'லிங்கன் நிதியம்' பாரிய பங்கு வகிக்கின்றது. இந்த லிங்கன் நிதியத்தின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பிரபல சினிமா நட்சத்திரம் பயன்படுத்தப்பட்டது. அதில் முக்கியமான நபர் ஹெரிசன் போர்ட் ஆவார். ஹெரிசன் போர்ட் தயாரித்த டொனால்ட் டிரம்பிற்கு எதிரான பிரச்சார விளம்பரத்திற்கு 'president lied - people died' 'ஜனாதிபதி பொய் கூறினார் மக்கள் செத்து மடிந்தனர்' என்று பெயர் வைத்திருந்தார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வீட்டுக்கு அனுப்பும் வரை பிரபலமான ஒன்றாக காணப்பட்டது.
விரைவில் இந்த தொனிப்பொருள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பொறுத்தமானதாக மாறக் கூடும்.
Gota lied - people died - கோட்டா பொய் கூறினார் மக்கள் செத்து மடிந்தனர்
---------------------------
by (2020-11-08 15:20:04)
Leave a Reply