(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 13 முற்பகல் 07.00) இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் நாட்டு மக்களின் குறிப்பாக வாக்களித்த மக்களின் அதிருப்திக்கு உள்ளான அரசாங்கமாக மாறியுள்ள, இதுவரையில் உருவாகி இல்லாத முட்டாள் அரசாங்கமாக காணப்படும் ராஜபக்ஷக்களின் அதிகாரத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகள் மூன்றின் வரவு - செலவுத் திட்டம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதில் பதுளை மாவட்டத்தில் உள்ள ஹல்துமுல்ல பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் மிகவும் கடுமையான படுதோல்வியை சந்தித்துள்ளது. தோல்வியை சந்தித்த மூன்று உள்ளூராட்சி சபைகள் வருமாறு,
அம்பாறை நகர சபை
ஜாஎல பிரதேச சபை
ஹல்துமுல்ல பிரதேச சபை
வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக 12 வாக்குகள்
வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 6 வாக்குகள்
6 மேலதிக வாக்குகளால் தோல்வி
அம்பாறை நகர சபையின் உறுப்பினர்கள் விபரம் - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 9, ஐக்கிய தேசியக் கட்சி 4, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 3, மக்கள் விடுதலை முன்னணி 1, சுயாதீன குழு 1.
வரவு - செலவுத் திட்ட வாக்களிப்பின் மீது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 6 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 3 பேரும் ஆதரவாக வாக்களித்தனர். அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 3 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன் மக்கள் விடுதலை முன்னணி, சுயாதீன குழு உறுப்பினர்கள் இருவரும் எதிராக வாக்களித்தனர்.
வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக 20 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஆதரவாக 3 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்படடன.
அதன்படி 17 மேலதிக வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஹல்துமுல்ல பிரதேச சபையின் உறுப்பினர்கள் விபரம் வருமாறு - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 7, ஐக்கிய தேசியக் கட்சி 6, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 2, மக்கள் விடுதலை முன்னணி 1, சுயாதீன குழு 1.
வரவு - செலவுத் திட்ட வாக்களிப்பின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு உறுப்பினர்கள் எதிர்கட்சியுடன் இணைந்து எதிராக வாக்களித்தனர். மொட்டு கட்சியின் பெரும்பான்மை பலத்தினர் எதிர்கட்சியுன் இணைந்தனர்.
வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக 24 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஆதரவாக 19 வாக்குகள் அளிக்கப்பட்டன.
5 மேலதிக வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் தோல்வியை சந்தித்தது.
ஜாஎல பிரதேச சபையின் உறுப்பினர்கள் விபரம் வருமாறு - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23, ஐக்கிய தேசியக் கட்சி 9, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 5, மக்கள் விடுதலை முன்னணி 4, தேசிய மக்கள் கட்சி 1, சுயாதீன குழு 1.
வரவு - செலவுத் திட்ட வாக்களிப்பின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் 4 பேர் எதிராக எதிர்கட்சியுடன் இணைந்து வாக்களித்தனர்.
இந்த மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் அரசாங்கத்துடன் பங்காளி கட்சியாக இருந்து ஆட்சி அமைத்துள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிராக வாக்களித்துள்ளமை விசேட அம்சமாகும். இதனை சிறிசேன ராஜபக்ஷக்களுக்கு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையாக கருதினால் அதில் தவறு இல்லை.
---------------------------
by (2020-11-13 23:24:45)
Leave a Reply