எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 13 , பிற்பகல் 04.40) கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் ஏற்பட்ட நாள் தொடக்கம் அதனை தேர்தல் வெற்றிக்கான ஆயுதமாகவும், தேர்தல் முடிந்து வெற்றியின் பின் பணம் சுருட்டும் வழியாகவும் பயன்படுத்தி உண்மை நிலையை மூடி மறைத்து முட்டாள் பைத்திய ஆட்சி நடத்தும் ராஜபக்ஷ அணி மற்றும் இராணுவ குழுவினர் தொற்று நோயை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாட்டு மக்கள் நடு வீதியில் விழுந்து செத்து மடிவதை கவலையுடன் தெரிவிக்கி வேண்டியுள்ளது. வீட்டிற்குள் காரணமே தெரியாமல் செத்து மடியும் வீதியில் விழுந்து செத்து மடியும் நிலைமைக்கான காரணத்தை மேலே உள்ள கடவுள் மட்டும் தான் அறிவார்.
நாட்டு மக்கள் வைரஸ் காரணமாக நடு வீதியில் விழுந்து செத்து மடிவதாக லங்கா ஈ நியூஸ் இதற்கு முன்னர் செய்தி வௌியிட்ட போது அதனை பொய் என்றார்கள். ஆனால் அதனை நிரூபிக்கக் கூடிய புகைப்படங்கள் எம்மிடம் உள்ளன. நாட்டில் தற்போது காணப்படும் லொக் டவுன் நிலை, இராணுவத்தின் மீதான அச்சம் போன்ற காரணங்களால் பல உண்மை தகவல்களை வௌியில் கொண்டுவர முடியாமல் உள்ளது. எனினும் சில ஆதாரத்துடன் கூடிய புகைப்படங்களை நாம் தருகிறோம்.
இவர்கள் நடு வீதியில் விழுந்து செத்து மடிய காரணம் வைரஸ் தொற்று மற்றும் பட்டினியாக இருக்கக் கூடும். காரணம் ஏழை எளிய மக்களுக்கு உணவு தேடிக் கொள்ள வழி இல்லை.
இங்கு காணப்படும் புகைப்படங்களில் புத்தளம், கம்பஹா, கண்டி பேராதெனிய, மஹவெல போன்ற பகுதிகளில் நடு வீதியில் விழுந்து செத்து மடிந்த நபர்கள் இருக்கின்றனர். அது மாத்திரமன்றி பலர் சிகிச்சை இன்றி வீடுகளில் செத்து மடிவதாக தெரிய வந்துள்ளது. சிலர் கொரோனா தொற்று அல்லாமல் வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உயிரிழக்கின்றனர். உதாரணமாக அத்துருகிரிய பகுதியில் பெண் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் இரத்த மாற்றம் செய்ய வழியின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா நோயாளர்களை தங்க வைப்பதன் நோக்கில் குறித்த பெண் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வாரத்திற்கு ஒரு முறை இரத்தம் மாற்ற முடியாமல் போனதால் குறித்த பெண் வீட்டிற்குள் உயிரிழந்துள்ளார். சிலர் வைரஸ் தொற்றுடன் இராணுவ கெடுபிடிகளால் ஏற்பட்ட மன உலைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலை நாட்டில் காணப்படும் போது தன்னை ஒரு விசேட தொற்று நோய் வைத்திய நிபுணர் போல காட்டிக் கொள்ளும் முட்டாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அண்மையில் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் இதுவரை உயிரிழந்தவர்களில் 5 பேர் மாத்திரமே நேரடியாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்ததாக கூறியுள்ளார். இவருக்கு சிறிதளவேனும் மூளை இல்லை என்பது இந்த கருத்தின் மூலம் புலப்படுகிறது.
தம்புள்ளை சந்தையில் 20 ரூபாவிற்கு கூட விற்பனை செய்ய முடியாத மரக்கரிகளை 150 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கொழும்பிற்கு கொண்டு வந்து 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியாது. தம்புள்ளை சந்தையில் விற்பனை செய்ய முடியாத மரக்கரிகள் நாள் ஒன்றுக்கு கிலோ லட்சம் கணக்கில் குவிகின்றன.நுவரெலியா மரக்கறிக்கும் அதே நிலைதான். ஏனைய பகுதி மக்கள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். தேர்தல் காலத்தில் கொரோனா நிவாரணம் வழங்கிய அரசாங்கம், எதிர்கட்சி என ஒரு நாயை கூட தற்போதைய கொரோனா காலத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போது பொருட்கள் விநியோகித்து சிறை செல்லத் தயாரான 'விலங்குகள்' பல இருந்தன. உணவு விநியோகத்திற்கு சதோச லொறி இல்லை என்றால் இராணுவ டிரக் வண்டிகளை 150 கிலோ மீற்றருக்கு அனுப்பி உணவு விநியோகம் செய்யத் தெரியாத வேலை செய்யும் வீரர் என பிதட்டிக் கொள்ளும் ஜனாதிபதியும் அவருக்கு ஜால்ரா போடும் இராணுவத் தளபதியும் வாயை மூடிக் கொண்டு அமைதியாக உள்ளனர். அதனால் நடு வீதியில் விழுந்து மக்கள் உயிரிழக்க வைரஸ் தொற்று மாத்திரமல்ல பட்டினியும் ஒரு காரணமாக அமைகிறது.
நாட்டு மக்கள் நடு வீதியில் வழுந்து செத்து மடிவது குறித்து பேசுவதற்கு அத தெரண ஊடகமோ குடு ஊடகமோ முன்வருவதில்லை. அதற்கு பதிலாக மக்களின் மனநிலையை மாற்றி அமைக்கும் நோக்கில் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா புதைப்பதா என்பது தொடர்பில் முன்னுரிமை செய்திகளை வழங்கி வருகின்றனர். பல விளையாட்டுக்கள் மூலம் உண்மை நிலையை மறைத்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது ராஜபக்ஷக்களின் எதிர்பார்ப்பாக உள்ள போதும் நாட்டு மக்கள் நடு வீதியில் விழுந்து செத்து மடிகின்றனர். இது ஒரு பாரிய அவலமாகும்.
ராஜபக்ஷக்கள் வைரஸ் மற்றும் பட்டினியை ஒழிக்க முடியாமல் பைத்தியம் ஆடுகின்றனர். 'எனக்கு யுத்தம் என்றால் முடியும் ஏனையவை முடியாது' என நாட்டின் ஜனாதிபதி கைவிரித்துள்ளார். அப்படியானால் யுத்த காலத்தில் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றது யுத்தம் முடியும் என்பதாலா? என மக்கள் கேள்வி கேட்காவிட்டாலும் மரண பயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள மக்கள் சொல்ல வேண்டியது ஒன்றுதான்,
'இயலாது என்றால் இயலுமான ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு செல்லவும்'
(புகைப்படங்கள் அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி)
---------------------------
by (2020-11-13 23:59:17)
Leave a Reply