சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 16 , பிற்பகல் 02.15) தற்போதைய மூன்றில் இரண்டு முட்டாள் அரசாங்கம் இலங்கையின் தங்க முட்டை என கருதப்படும் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளை தான்தோன்றித் தனமாக வீழ்ச்சி அடையச் செய்து மீண்டும் துறைமுகத்தை கட்டி எழுப்புவதற்கு சவால் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக ஊழியர்கள் லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு பொருட்கள் கொண்டு வந்துள்ள 34 கப்பல்கள் துறைமுகத்திற்குள் நுழையாது வௌியில் தரித்து நின்று பார்த்துக் கொண்டிருப்பதாகவும் 40 கப்பல்கள் தரித்து நிற்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளதாகவும் அது மாத்திரமன்றி கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட 40,000 கன்டேனர்கள் உரிமையாளர்கள் எடுத்துச் செல்லாமல் தரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைக்கு காரணம் கொரோனா வைரஸ் காரணமாக ஊழியர்கள் சேவைக்கு திரும்பாமை என கூறப்பட்ட போதும் இந்த நிலைமைக்கு திட்டமிட்ட சில செயல்களும் காரணம் என லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரிய வந்துள்ளது.
9400 பேர் வரை பணிபுரியும் கொழும்பு துறைமுகத்தில் 150 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகமான ஊழியர்கள் ஜேசிடி பிரிவில் பணியாற்றுகின்றனர்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று நோய் அறிகுறிகளுடன் காணப்பட்ட மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய 104 ஊழியர்கள் பலாத்காரமாக துறைமுகத்திற்கு உள்ளேயே தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட துறைமுக அதிகார சபையின் தலைவர் தயா ரத்நாயக்க துறைமுக ஊழியர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பொய் கூறினார். முக்கிய சேவை பிரிவில் உள்ள 104 ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டு அவர்களுக்கு பீசிஆர் பரிசோதனை செய்ய சுமார் 15 நாட்கள் கடத்தப்பட்டது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மை அதுதான். குறித்த 104 ஊழியர்களும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 15 நாட்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் 104 ஊழியர்களில் 9 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. குறித்த 9 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ஏனைய ஊழியர்களை 14 நாட்கள் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டது.
இதேவேளை, ஏனைய துறைமுக ஊழியர்களுக்கு பீசிஆர் பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் ஆனால் தனியார் பிரிவில் பீசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 150 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக துறைமுக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பணத்தில் பீசிஆர் இயந்திரம் 40 லட்சம் ரூபாவாகும். நாளாந்தம் பில்லியன் கணக்கில் வருமானம் பெறும் துறைமுகத்திற்கு ஒன்றல்ல பத்து பீசிஆர் இயந்திரங்கள் கொள்வனவு செய்ய முடியும். துறைமுகத்திற்குள் மிகவும் வளர்ச்சி பெற்ற சுகாதார நிலையம் உள்ளது. துறைமுக அதிகார சபைக்கு நாடு முழுவதும் விடுமுறை விடுதிகள் காணப்படுகின்ற நிலையில் ஊழியர்களை தனிமைப்படுத்தும் திட்டத்திற்கு அவர்களயே தங்குமிடம் பார்த்துக் கொள்ள பணித்தது முட்டாள் செயலாகும். இவ்வாறு இருக்கையில் கோட்டாபயவின் அம்மாவினது தியரி அடிப்படையில் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி தயா ரத்நாயக்க துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் எவ்வத பயனளிக்கும் திட்டங்களும் இல்லை. ஊழியர்களை நாய் போல நடத்துவதை தவிர அவருக்கு தெரிந்த நிர்வாகம் வேறு எதுவுமில்லை. (தயா ரத்நாயக்க செயற்திறன் அற்றவர் என்பதை அறிந்தே இறுதி யுத்த காலத்தில் சரத் பொன்சேகா இவரை இராணுவ தங்குமிட உத்தியோகபூர்வ இல்லங்களை சுத்தப்படுத்தி பூ வைத்து நிறப்பூச்சு அடித்து சுத்தமாக அழகாக வைத்துக் கொள்ளும் பொறுப்பில் அமர்த்தினர். யுத்த களத்திற்கு இவரை அனுப்பவில்லை. சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது ஆதரவு அளித்த சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் கோட்டாபயவினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கோட்டாபயவை 'செயலாளர் சேர்' என அழைத்த தகுதிக்காக பிற்காலத்தில் தயா ரத்நாயக்க இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்).
எனினும் நிர்வாக பொறுப்பில் உள்ள அதிகாரி எவ்வித பிரயோசனமான நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தால் ஊழியர்கள் பலர் பணிக்குத் திரும்பாமல் வீட்டில் இருக்கின்றனர். அதனால் துறைமுக பணிகளில் பாரிய தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக ஊழியர்களை பலாத்காரமாக சேவையில் அமர்த்துவதும் ஓய்வு பெற்ற ஊழியர்களை சேவைக்கு அழைப்பதுவுமே நிர்வாக அதிகாரியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். 70 வயதிற்கும் அதிகமான ஓய்வு பெற்ற ஊழியர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதனால் துறைமுக ஊழியர்கள் மேலும் வலுவிழந்தனர். இந்த நிலையின் காரணமாக 34 கப்பல்கள் வேறு துறைமுகங்கள் நோக்கி சென்றதுடன் 40 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதுடன் கன்டேனர்களும் தரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் 10 கப்பல்களே வேறு துறைமுகங்களுக்குச் சென்றுள்ளதாகவும் 5 கப்பல்களே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவான தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால் எம்மிடம் உள்ள முழுமையில்லா வீடியோ காட்சி மூலம் துறைமுகத்திற்கு வௌியே 16 கப்பல்களை காண முடிகிறது. இந்த கப்பல்களுக்கு காலதாமத கட்டணத்தையும் துறைமுகமே செலுத்த வேண்டியள்ளது.
இதேவேளை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் அநாவசிய வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதியாளர்களால் கொண்டுவரப்பட்ட 40,000 கன்டேனர்கள் துறைமுகத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதனால் தாமரை மொட்டு கட்சி ஆதரவு தொழிற்சங்கமும் அரசாங்கம் குறித்து அதிருப்தியாக உள்ளது. இவர்கள் துறைமுக பாஷையில் அபூர்வ கதை சொல்கின்றனர்.
"நல்லாட்சியில் குறைந்தது எச்சில் துப்பியாவது குத்தினர் ஆனால் இவர்கள் வெறுமையுடன் குத்துகின்றனர்" என தாமரை மொட்டு கட்சியின் ஆதரவு தொழிற்சங்க தலைவர்களே கூறுகின்றனர்.
இதேவேளை, துறைமுக வீழ்ச்சி விடயத்தை கோட்டாபய மற்றும் பசில் இடையே காணப்படும் பனிப்போரின் விளைவு எனக் காட்டுவதற்கு தாமரை மொட்டு கட்சிக்கு எதிரான மாற்று இணையத்தளங்கள் முயற்சித்துள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விநியோக வியத்திற்கு பொறுப்பாளராக செயற்படும் பசில் ராஜபக்ஷவை திறமையற்றவர் என காண்பிக்கும் நோக்கில் கோட்டாபய ராஜபக்ஷவின் தரப்பினர் இந்த சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிலர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வேலை செய்ய இடமளிக்காது கடந்த ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த சிலர் சூழ்ச்சி வேலைகளை செய்வதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் விடயம் அறிந்த துறைமுக ஊழியர்கள், ராஜபக்ஷக்கள் தான்தோன்றித் தனமாக செயற்பட்டு வேண்டுமென்றே துறைமுக நடவடிக்கைகளை வீழ்ச்சி அடையச் செய்வதாகக் கூறுகின்றனர். தற்போது சர்ச்சையில் உள்ள துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனம் ஒன்றிக்கு விற்பனை செய்வதன் நோக்கமாக துறைமுக ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்களின் மனநிலையை மாற்றி அமைப்பதற்கு துறைமுக வீழ்ச்சி சூழ்ச்சியை செய்வதாக தெரிவிக்கின்றனர். துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க தற்போது அமைச்சரவை பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அது இன்னும் உடன்படிக்கை மட்டத்திற்குச் செல்லவில்லை. அதனால் எதிர்காலத்தில் வரும் எதிர்ப்புக்களை சமாளிக்கும் நோக்கில் விளையாட்டு காட்டவே இந்த சூழ்ச்சி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. துறைமுக ஊழியர்களை வலுவிழக்கச் செய்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பட்டை ஏற்படுத்தி மக்கள் வெறுப்பில் 'துறைமுகத்தை யாருக்காவது கொடுத்தால் பரவாயில்லை' என்ற நிலைக்கு கொண்டு வருவதே இவர்களது சூழ்ச்சியின் நோக்கமாகும்.
அதிகளவு கொரோனா பாதிப்பு கொண்ட நாடுகள் கூட துறைமுக சேவையை இடைநிறுத்தாது முன்னெடுத்து வரும் நிலையில் ராஜபக்ஷக்கள் மாத்திரம் துறைமுக நடவடிக்கைகளை குழப்பமான சூழலில் தள்ளி உள்ளமை அவர்களது சூழ்ச்சிக்கு சாட்சியாகும்.
வருடத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் லாபம் பெறக்கூடிய துறைமுக கிழக்கு முனையம் 750 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற குறைந்த விலைக்கு வௌிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயற்சிக்கின்றமை எமக்கு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை பின்னர் விளக்கமாக கூறுகிறோம்.
(துறைமுகத்தை நோக்கி வர உள்ள கப்பல்கள் சில அடங்கிய புகைபப்படம் இங்கே உள்ளது. வீடியோவில் 16 கப்பல்கள் உள்ளன.)
---------------------------
by (2020-11-16 09:26:23)
Leave a Reply