(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 18 பிற்பகல் 02.30) இலக்கம் 32 வலகம்பா மாவத்தை பொறுப்பன வீதி இரத்மலானை என்ற முகவரியில் வசிக்கும் அகமட் ஜூனைதீன் பாத்திமா நீலூசா என்ற 83 வயதுடைய பெண் ஒருவர் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை திடீரென உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பில் அறிந்து கொண்ட பிரதேச வாசிகள் பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளனர்.
இந்தத் தகவலை அறிந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக குறித்த வலகம்பா மாவத்தை வீட்டிற்கு சென்றுள்ளனர். பாத்திமா நிலூஷாவின் சடலத்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல உறவினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். அரசாங்கத்தின் உயர் இடங்களில் இருந்து கிடைத்த உதவிகள் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்களின் செயல்பாட்டிற்கு உறவினர்கள் இடையூறு ஏற்படுத்தினர்.
எனினும் இந்த எதிர்ப்புக்களை சிறிதும் பொருட்படுத்தாது செயல்பட்ட ரத்மலானை பொது சுகாதார பரிசோதகர்கள் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த பரிசோதனையின் போது குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிசிஆர் பரிசோதனை முடிவுகள் அச்சிடப் படுவதற்கு தயார் நிலையில் இருந்த போது கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து கிடைக்கப் பெற்ற உத்தரவை அடுத்து பிசிஆர் முடிவு அச்சிடுவது கைவிடப்பட்டது. முதலாவதாக செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொழில்நுட்ப முரண்பாடு காணப்படுவதாக தெரிவித்து அதனை ரத்து செய்து இரண்டாவது பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதனை அடுத்து முதலாவது பிசிஆர் பரிசோதனை முன்னெடுத்த சுகாதார அதிகாரிகள் விளக்கப்பட்டு புதிய அதிகாரிகள் குழுவினால் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. திட்டமிட்ட படி இரண்டாவது பிசிஆர் பரிசோதனையில் பாத்திமா என்ற பெண்ணுக்கு கொரோனா இல்லை என முடிவு செய்யப்பட்டது.
பிசிஆர் பரிசோதனை முடிவு அறிக்கையை புறந்தள்ள முடியாத சுகாதார அதிகாரிகள் பாத்திமாவின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் இஸ்லாமிய ஆகம செயற்பாடுகளின் முடிவில் களுபோவில ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் பாத்திமாவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இலக்க 32 வலகம்பா மாவத்தையில் வசிக்கும் பாத்திமா என்ற பெண்ணுக்கு முதல் பிசிஆர் பரிசோதனையில் பொஸிட்டிவாக காணப்பட்ட கொரோனா இரண்டாவது பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவாக மாறியது எப்படி? அஹமத் ஜுனைதீன் பாத்திமா நிலூஷா என்ற 83 வயது பெண் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அலி சபரியின் சிறிய தாய் ஆவர். அலி சப்ரியின் தாயினது கூடப் பிறந்த சகோதரி ஆவர்.
கொரோனா வைரஸ் காரணமாக உயிர் இழக்கும் ஒரு முஸ்லிமின் சடலத்தையேனும் அடக்கம் செய்தால் 20 மில்லியன் மக்களுடன் வீதிக்கு இறங்கி போராடுவதாக அறிவிப்பு விடுத்த பெனி சுமனே இப்போது என்ன சொல்கிறார்?
"நான் துட்டகை முனு மன்னனது சிலைக்கு முன்பாக இருந்து சத்திய பிரமாணம் செய்தேன். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மரணிக்கும் ஒரு சடலத்தை ஏனும் நிலத்தில் புதைக்க அனுமதிக்க மாட்டேன்" என பிக்குகளிடம் சத்தியம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இப்போது என்ன சொல்லப் போகிறார்?
நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்..!
முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி
---------------------------
by (2020-11-19 20:36:49)
Leave a Reply