- எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 19 பிற்பகல் 12.25) இலங்கையில் இடம்பெறும் எதிர்கால தேர்தல்களில் பொது மக்களின் பணத்தை செலவு செய்து வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குவதில் எவ்வித குற்றமும் இல்லை என தீர்ப்பு வழங்கி எதிர்காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்று நடத்தப்படுவதற்கான வாய்ப்பை முற்றாக ஒழிக்கும் வகையிலான வழக்குத் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.
குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகிய இருவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
இந்த வழக்கு முழு உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த சில் உடை மோசடியின் மேன்முறையீட்டு தீர்ப்பே அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றில் இந்த சில் உடை மோசடி வழக்கு விசாரணை செய்யப்பட்டு ஜனாதிபதி முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டப் பணமும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் மேற்கொண்ட மேன்முறையீட்டில் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த இருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிரபராதிகள் எனக் கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 60 கோடி ரூபா பொது மக்கள் பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தி 11,000 பௌத்த விகாரைகள் ஊடாக 7,73,000 நபர்களுக்கு தலா 5 மீட்டர் அளவில் சில் உடை லஞ்சமாக விநியோகிக்க லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தி இருவருக்கும் தலா மூன்று வருடங்கள் சிறை தண்டனையும் 100 லட்சம் நட்டஈடும் செலுத்த மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தீர்ப்பு அளித்திருந்தார்.
இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகியோர் லலித் மற்றும் அனுஷ இருவரும் நிரபராதிகள் என அறிவித்து எவ்வித தண்டனைக்கும் உரியவர்கள் அல்ல என தீர்ப்பளித்துள்ளதன் மூலம் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களின் பொது மக்கள் பணத்தை பயன்படுத்தி வாக்கு பெறும் நோக்கில் லஞ்சமாக எதனையும் விநியோகிக்கலாம் அது குற்றம் இல்லை என்ற முன்னுதாரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது கேகில்லே மன்னரும் வெட்கத்திற்கு உள்ளான வழக்கு தீர்ப்பாகும். காரணம் இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூட சந்தேகநபர்களுக்கு எதிராக சாட்சி அளித்திருந்தார்.
குமுதினி விக்ரமசிங்கவை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்த நிலையில் அவர் பதவி ஏற்காமல் காலம் கடத்திவிட்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்து இந்த சில் உடை வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ளார். வேலை முடிந்து விட்டதால் இனி அவர் உயர் நீதிமன்றம் செல்வார்.
எனினும் இலங்கையில் உயர் அரச அதிகாரிக்கு எதிராக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கில் ஆரம்பம் தொட்டே லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு சட்டம் சமமாக செயற்படவில்லை. தவறான நிதி புலக்க விடயத்தில் நீதவான் நீதிமன்றில் அடிப்படை வழக்கு விசாரணை இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில் இதற்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் இவர்கள் கைது செய்யப்பட வில்லை என்பது மாத்திரமன்றி நேரடியாக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அங்கு முதல் சந்தர்ப்பத்திலேயே அவர்களுக்கு பிணை கிடைத்தது. அதன்பின் வரலாற்றில் முதல் தடவையாக நீதிபதி கிஹான் குலதுங்க வழங்கி தீர்ப்பின் பின்னரும் இரண்டு மாதங்களே இவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். பின்னர் வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களுக்கு உடன் பிணை கிடைத்தது.
இலங்கையின் நீதிமன்ற நடைமுறைகள் குறித்து வெளியில் இருந்து கண்காணிக்கும் நபருக்கு அரசாங்கத்திற்கு அரசாங்கம் இலங்கை நீதிமன்றில் தீர்ப்பு மாற்றப்படும் என்ற முடிவே கிடைக்கும். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நீதிமன்றில் லலித் மற்றும் அனுஷ ஆகியோர் குற்றவாளிகள். ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் நீதிமன்றில் லலித் மற்றும் அனுஷ நிரபராதிகள். இந்த கெடுகெட்ட நிலை குறித்து நீதிபதிகள் வெட்கப்பட வேண்டும். தமது நிறுவனத்தின் கௌரவத்தை தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நீதித்துறை கௌரவத்தை அந்த துறையில் உள்ளவர்களே பாதுகாக்க வேண்டும்.
எமக்கு கிடைக்கும் தகவல்படி மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்ல சட்டமா அதிபருக்கு சந்தர்ப்பம் உள்ள போதும் அது நடக்க வாய்ப்பில்லை.
குற்றவாளியாக இருந்து நிரபராதி என தீர்ப்பு அளிக்கப்பட்ட லலித் வீரதுங்க அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் எந்த ஒரு நீதிபதிக்கும் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு இல்லை என்பதால் ஆட்சியாளர்களை குளிர்மைப்படுத்தும் வழக்குத் தீர்ப்புக்கள் எதிர்காலத்தில் அதிகம் வரக்கூடும்.
இந்த வழக்குத் தீர்ப்பு நாட்டில் தேல்தல் மீது நேரடி தாக்கத்தைச் செலுத்தும். அதன்படி எதிர்காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை எதிர்பார்ப்பது வெறும் கனவாகும். அதற்கு இனையான தீர்மானம் ஒன்றை அண்மையில் ஜனாதிபதி எடுத்திருந்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் புஞ்சிஹேவாவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். நிமல் புஞ்சிஹேவா என்பவர் ராஜபக்ஷக்களின் நட்சத்திர விசுவாசி. மஹிந்த ராஜபக்ஷ யுகத்தில் இவர் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டதுடன் அப்போது ராஜபக்ஷக்களின் கைக்கூலிகள் அனைவருக்கும் அரச காணிகளை தாரைவார்த்துக் கொடுத்தார். அதில் பிரபலமான சம்பவம் ராஜபக்ஷ வீட்டில் சமயல் வேலை செய்த நபருக்கு 40 ஏக்கர் அரச காணி தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.
அப்படியானால் எதிர்வரும் கால தேர்தல் விளையாட்டுக்கள் தொடர்பில் சொல்லத்தான் வேண்டுமா?
---------------------------
by (2020-11-19 20:45:14)
Leave a Reply