~

வரலாற்றில் முதல் தடவையாக கோட்டா பாராளுமன்றுக்கு இராணுவத்தை கொண்டு வந்த உடனே பாராளுமன்றின் மீது இடி விழுந்தது., ஊழியர்களுடன் பஸ் குளத்தில் கவிழ்ந்தது..!

(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 21, பிற்பகல் 04.45) வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு உள்ளே இராணுவத்தினரை அழைத்து வந்ததன் பின்னர் வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்றத்தின் மீது இடி விழுந்துள்ள அபசகுண செய்தி பதிவாகியுள்ளது. அத்துடன் பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ் ஒன்று ஊழியர்களுடன் பாராளுமன்ற வாளகத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்துள்ளது.  

நேற்று 20ம் திகதியே இந்த இடி விழுந்த சம்பவமும் பஸ் குளத்தில் கவிழ்ந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இந்த அபசகுணமான இரண்டு சம்பவங்கள் வரவு செலவுத் திட்ட உரை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதல் முறையாக பாராளுமன்றுக்கு வருகை தந்த பின்னர் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

18ம் திகதி வரவு செலவுத் திட்ட உரை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றுக்கு வருகை தந்திருந்தார். அதற்கு முன்பதாக ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே விசேட சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் சமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய சகோதரர்கள் கலந்து கொண்டனர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் காணப்படும் இடைவெளியை தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதிக்கு ராஜபக்ஷ குடும்பத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்புகளை பேணி வருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதி என்ற வகையில் பாராளுமன்றுக்கு விஜயம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நட்புடன் பழகுமாறும் சமல், மஹிந்த, பசில் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார். அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்ற விருந்து அறையில் தேநீர் அருந்தியுள்ளார்.  

கோட்டாபயவின் இராணுவ மனநிலை செயற்பாடுகள் பின்னரே தெரிய வந்தது. அதன் பின்னர் 19ம் திகதியில் இருந்து பாராளுமன்றில் ஜனாதிபதியின் விசேட அறைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் உள்ள இரண்டு இராணுவ வீரர்கள் ஜனாதிபதி பாராளுமன்றம் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்து அவரது அறைக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இது பாராளுமன்ற வரலாற்றில் ஒருபோதும் இடம்பெற்றிராத செயற்பாடாகும். ஜனாதிபதி பாராளுமன்றுக்கு வருவதற்கு முன்னர் பாதுகாப்பு நடைமுறைகள் செயற்படுத்தப்படுவதற்கு மேலதிகமாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகளுக்கு பாதுகாப்பு தரப்பினர் செல்ல மனுமதி இல்லை. குறைந்தது யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இராணுவ மனநிலையில் செயற்படவில்லை. பாராளுமன்றுக்கு உள்ளே இராணுவ வீரர்களை அழைத்து வருவது ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் பாரிய அபசகுண நிலையாகும்.  

இந்த ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அபசகுண நிலையின் வெளிப்பாடாக அதே தினம் பாராளுமன்றின் நேரடி ஒளிபரப்பு கட்டமைப்பில் தடங்கல் ஏற்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடம்பெற்ற இந்த தடங்கலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பதிவு செய்யும் கட்டமைப்பில் குழறுபடி ஏற்படாததால் ஒளிபரப்பு சமாளிக்கப்பட்டது.

கடுமையான அபசகுண சம்பவங்கள் நேற்று 20ம் திகதி பதிவாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் வானத்தை பிளந்து கோடிக் கணக்கில் இடி விழுந்த போதும் பாராளுமன்றுக்கு எவ்வித பாதிப்பும் வரவில்லை. ஆனால் நேற்றைய தினம் பாராளுமன்றில் இடி விழுந்து மின்சாரம் தடை ஏற்பட்டது. முக்கிய பகுதிகளுக்கு மின்சார தடை ஏற்பட்டது. லிபட் இடைநடுவில் இயங்கவில்லை. சபை நடவடிக்கைகளுக்கு வேறு விதமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  

அதன் பின்னர் அபசகுணத்தை இரட்டிப்பு செய்யும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் ஊழியர்களுடன் பாராளுமன்றத்தை சுற்றி உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில் ஊழியர்கள் எவருக்கும் காயமோ பாதிப்போ ஏற்படவில்லை என்றபோதும் பாராளுமன்ற ஊழியர்கள் சம்பவத்தால் கடும் மன உலைச்சல் அடைந்துள்ளனர்.  

யாதார்த்தத்திலும் இவ்வாறான சம்பவங்கள் மூலம் இலங்கை ஜனநாயகத்தில் கெட்ட காலத்தை நோக்கி பயணிப்பதை சுட்டிக்காட்டி நிற்கிறது. 

---------------------------
by     (2020-11-21 21:52:04)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links