(லங்கா ஈ நியூஸ் - 2020 , நவம்பர் 22 பிற்பகல் 09.50) ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் போன்ற மற்றுமொரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை கண்டி தலதா மாளிகையை இலக்கு வைத்து அல்லது அவ்வாறு பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த நிலையத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்று உள்ளதென சர்வதேச புலனாய்வு பிரிவினர் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பிடம் அறிவித்ததாக லங்கா ஈ நியூஸ் உள்ளக சேவைக்கு தகவல் வந்துள்ளது.
தெற்கு ஆசியாவில் செயற்படும் ISIS அடிப்படைக் கொள்கைக் கொண்ட தீவிரவாதிகளால் பெரும்பாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி பிரமாண ஒரு வருட பூர்த்தியை இதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்துள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் கிடைத்த உடனேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று அல்லாமல் விரைந்து செயற்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன்படி இராணுவம் பொலிஸார் உள்ளிட்ட உயர்மட்ட பிரதானிகளுக்கு தாக்குதல் முயற்சி தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிரதான மத்திய நிலையத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதும் அடிப்படைவாத கொள்கை கொண்டவர்களின் நோக்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கத்திற்கு இணையானதாகும். பௌத்த மத்திய நிலையத்திற்கு இலக்கு வைத்து அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்திய பின் ஆத்திரமடையும் சிங்கள இளைஞர்கள் உடனே நாட்டில் உள்ள முஸ்லிகள் மீது இன ரீதியான தாக்குதல்களை நடத்துவர். அதன்பின்னர் ஒன்றும் செய்ய முடியாமல் தமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை தாங்கிக் கொள்ள முடியாது முஸ்லிம் இளைஞர்கள் ISIS அமைப்பின் அடிப்படைவாத கொள்கையை ஏற்று அந்த அமைப்புடன் இணைந்து கொள்வர் என்பது தாக்குதல் நடத்துபவர்களின் எதிர்பார்ப்பு. இந்த சந்தர்ப்பத்தை வைத்து பல இளைஞர்களை தமது அமைப்புக்குள் வளைத்துப் போட்டுவிடலாம் என்பது அடிப்படைவாதிகளின் பிரதான இலக்காக இருக்கின்றது.
தமழிழ விடுதலைப் புலிகள் அமைப்பும் இவ்வாறே செயற்பட்டனர். ஆரம்பத்தில் 30, 40 உறுப்பினர்களைக் கொண்ட தமிழிழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமழ் மக்களை இலக்காகக் கொண்டு 1983ம் ஆண்டு ஜுலை மாதத்தில் தெற்கு பகுதியில் நடத்திய கொடூர தாக்குதலின் பின்னர் குறித்த அமைப்பு ஒருசில மாதங்களில் பாரிய இயக்கமாக மாற்றம் பெற்றது. புலிகள் அமைப்பிற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பாரிய அளவு நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன. அத்துடன் சர்வதேச அனுதாபமும் கிடைத்தது.
இவ்வாறான நோக்கம் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கும் இதே வகையான நோக்கம் இருந்ததாக விசாரணை நடத்திய பாதுகாப்பு தரப்பினர் கண்டு பிடித்துள்ளனர். சஹரான் உள்ளிட்ட குழுவினர் தமது அடுத்த இலக்காக தலதா மாளிகை பெரஹராவின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் திட்டம் தெரிய வந்தது. தீவிரவாதிகள் வைத்திருந்த பெண்களுக்கான வௌ்ளை உடை, சில் உடை போன்றவற்றின் ஊடாகவும் இவர்களின் திட்டம் அம்பலமானது. இதன் ஊடாக பௌத்தர்களை ஆத்திரப்படுத்தி முஸ்லிம் மக்கள் மீது இனவாத தாக்குதல் நடத்த வைத்து அதனை அடிப்படைவாத தீவிரவாத நோக்கங்களை முன்னோக்கிக் கொண்டு செல்லவென பயன்படுத்த திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் இத்திட்டம் அன்று சாத்தியப்படவில்லை.
தற்போது தகவல் கிடைத்துள்ள தாக்குதல் நோக்கமும் அதுவே.
இந்த தாக்குதல் முயற்சி தகவல் கிடைத்த உடனேயே கோட்டாபய மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் ஒரு பக்கம் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாத தீவிரவாத நிலைகளுக்குச் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் எதிர்ப்பு இல்லாத காரணத்தால் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி அளிப்பது என்ற முடிவை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் எடுத்தது. தங்களால் உருவாக்கப்பட்ட தவஹித் ஜமாத் அடிப்படைவாத அமைப்பின் கோட்டா - சாலி ஆகியோருடன் எஞ்சியுள்ள ஒரு பிரிவான இலங்கை தவஹித் ஜமாத் அமைப்பின் (SLTJ) தலைவர் அப்துல் ராசிக் ஊடாக முஸ்லிம்களின் சடலத்தை புதைக்க அனுமதி அளித்த அரசாங்கத்திற்கு நன்றி கூறி ஊடக அறிக்கை ஒன்றை விடுத்த போதும் தங்களால் மறுபக்கம் போசித்து உருவாக்கப்பட்ட பௌத்த அடிப்படைவாத பிக்குகள் குழு முன்வைத்த கடுமையான எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் சடலம் குறித்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கி அமைதியாகியது.
அதன்படி கோட்டாபய அரசாங்கம் ஆட்சியை பிடிக்கவென எப்படியாவது ஆட்சியை நடத்திச் செல்லவென அடிப்படைவாதத்தை குறைத்துக் கொள்ள செயற்படுமாயின் குறுகிய நோக்கத்திற்கு முடிவு எடுக்காமல் அதற்கு ஒத்துழைப்பு வழங்க அடிப்படைவாத பிக்குகள் குழுவும் வேறு குழுக்களும் செயற்படுமானால் அது நாட்டுக்கு நல்லதே.
கொரோனா வைரஸ் தொற்றை பயன்படுத்தி 'ட்ரோன் கமரா திட்டம்' செயற்படுத்தி மக்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ISIS தாக்குதல் முயற்சி தகவலை அடுத்தே இந்த திட்டத்தை சூட்சமமாக செயற்படுத்தி உள்ளதென தெரிய வருகிறது.
எப்படி இருப்பினும் தாக்குதல் முயற்சி குறித்து வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்கிய பின் சில முட்டாள்கள் கோட்டாபய - சாலி தொடர்பினால் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இல்லாது செய்யவென இந்த தாக்குதல் இடம்பெற அனுமதிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் பெரும்பாலனவர்கள் மாற்றுக் கருத்தை கொண்டிருந்தனர். இவ்வாறான நோக்கம் இருந்திருந்தால் கோட்டாபயவை ஜனாதிபதியாக்க ஒருபோதும் செயற்பட்டிருக்க மாட்டோம் எனவும் இவ்வாறான தாக்குதல் நடைபெற்றால் அது கோட்டாபய ராஜபக்ஷவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் எனவும் அது மாத்திரமன்றி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் குறித்த நம்பிக்கை குறைந்து, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து நாட்டின் அழிவுக்கு அது காரணமாக அமைந்து விடும் என்பதால் உடனடியாக இரண்டாவது தாக்குதல் முயற்சியை முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இறுதியில் தெரிவிக்க வேண்டியது, யாராவது எங்காவது அடிப்படைவாதத்தை உருவாக்கி போசித்து வந்தால் சிறிது காலம் செல்லும் போது அடிப்படைவாதிகள் தமது சுயரூபத்தை காட்டி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்வர். அதில் அவர்கள் முதலில் அழிக்க முயற்சிப்பது தம்மை உருவாக்கியவர்களையே ஆகும். அமெரிக்காவில் இந்தியாவில் மாத்திரமன்றி இலங்கையிலும் வரலாறு இதனையே கற்பிக்கிறது.
---------------------------
by (2020-11-23 12:44:46)
Leave a Reply