எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 22 , பிற்பகல் 05.00) 1999 ஆம் ஆண்டு கண்டி மஹவெல பிரதேசத்தில் வைத்து இடம்பெற்ற மனித கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கண்டி மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிகையை பூச்சியமாக்கி தற்போதைய இலங்கையில் நாளாந்தம் வழக்கு முடிக்கும் சப்ரி - நவாஸ் கூட்டணி மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 20ம் திகதி ரீட் கட்டளை ஒன்றை பிறப்பித்தது.
இந்த அபூர்வ தீர்ப்பை வழங்கியது மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள திருட்டு நீதிபதி ஏ.எச்.எச். திலீப் நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் ஆவர்.
ஜனக்க பண்டார தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை சூனியமாக்க காரணமாக கூறப்பட்டுள்ள விடயம், ஒரு நாள் சந்தேகநபர் இல்லாமல் பதிவு அற்ற நீதவான் விசாரணை நடத்தியது தவறு என்பதுடன் அந்த விசாரணையை அடிப்படையாக வைத்து மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது தவறு என்பதாகும். அத்துடன் 2015 ஆம் ஆண்டு இந்த வழக்கு அரசியல் பழிவாங்கலை நோக்கமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒன்று என பிரதான சந்தேகநபரான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் கூறியுள்ளார்.
முதலாவதாக கேட்க வேண்டிய கேள்வி 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக 2015ம் ஆண்டு வரை 16 வருடங்கள் வழக்குத் தொடராமல் இருந்தது யாரினது அதிகாரத்தால் என்பதாகும். ஜனக்க பண்டார தென்னகோனுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போதும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போதும் சட்ட மா அதிபர் திணைக்களத்தை வழக்குத் தொடர விடாமல் தடுத்து வைக்க அரசியல் அதிகாரம் இருந்தது. 16 வருடங்கள் மூடி மறைக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்து சந்தேகநபருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது அரசியல் பழிவங்கலா? சட்டத்தை சரியாக செயற்படுத்திய விதமா? கோட்டாபய ராஜபக்ஷவினது வரவின் பின்னர் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி ஜனக்க பண்டார தென்னகோன் தனக்கு எதிரான வழக்கை இரத்து செய்துள்ளார். உண்மையாக அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வழக்குத் தாக்கல் செய்வதற்கு அல்லாமல் வழக்கை மூடி மறைக்கவும் வழக்கை இரத்து செய்வதற்கும் செயற்பட்டுள்ளார்.
அடுத்தது மேற்கூறிய வழக்கில் நீதிபதி நவாஸின் வழக்குத் தீர்ப்பில் உள்ள விடயங்களாகும். பதிவு செய்யப்படாத நீதவான் விசாரணை நடத்தியது சட்டத்திற்கு முரணானது என்பதால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையும் சட்ட விரோதமானது என்ற தீர்ப்பாகும். இது முற்றிலுமாக நீதியை அநீதியாக்கும் தீர்ப்பாகும். காரணம் பாலியல் குற்றவாளிகள், கொலையாளிகள் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக பதிவு செய்யாத நீதவான் விசாரணை இல்லாமல் நேரடியாக மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது. நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபருக்கு இந்த அதிகாரம் உள்ளது. அவ்வாறு சட்ட மா அதிபர்கள் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்குகள் பல உள்ளன. அதனால் இந்த ரீட் கட்டளை முற்றிலுமாக சட்டவிரோத தீர்ப்பாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த பெப்ரவரி மாதம் இந்த திலீப் நவாஸ் திருட்டு நீதிபதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவி வழங்கும் போதே திலீப் நவாஸ் மீது 260 மில்லியன் ரூபா லஞ்ச ஊழல் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்படும் வழக்கின் பிரதான சந்தேகநபராக காணப்படுவதாகவும் அதனால் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு இவர் பொறுத்தமற்றவர் எனவும் இந்த எழுத்தாளர் லங்கா ஈ நியூஸ் ஊடாக முன்கூட்டியே அம்பலப்படுத்தியுள்ளார். அன்று நாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை எவரும் இன்று வரை நிராகரிக்கவில்லை. (2020ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி நாம் வெளியிட்ட " கோட்டா மலர்களால் நிறைந்த மரங்கள் ஊழல்வாதிகள் அழகு..! லஞ்ச ஊழல் வழக்கின் சூத்திரதாரி மற்றும் 80 வழக்கு கோவைகளை காணாமல் ஆக்கிய திருடன் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவியில்..! " என்ற தலைப்பிலான செய்தியை வாசிக்கவும்.)
மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிகளுக்கு பாராளுமன்றில் அமர்வதற்கு இடமளிக்கும் அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக உள்ள ஒருவருக்கு எதிராக கொலை வழக்கு தாக்கல் செய்யுமா என நாட்டு மக்களே முணுமுணுக்கின்றனர். இதன் மூலம் நீதிமன்றம் மற்றும் சட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலுமாக இல்லாது போயுள்ளது அல்லது கைவிட்டுள்ளனர். இதன் போது மக்கள் சட்டத்தை கையிலெடுப்பதே நடக்கும். இந்த நிலையானது மிக மோசமான விளைவுகளில் சென்று முடியும்.
சில் உடை வழக்கில் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட விடுதலை செய்யப்பட்டமை, ஜனக்க பண்டார தென்னகோனுக்கு எதிரான கொலை குற்றச்சாட்டை சூனியமாக்கியமை போன்ற சம்பவங்களின் பின்னர் நாட்டில் இன்று இருப்பது மேன்முறையீட்டு நீதிமன்றமா ? அல்லது கூட்டிணைந்த நீதிமன்றமா ? என நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சப்ரி - நவாஸ் ஆகிய இரட்டையர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஊடாக இன்று நாட்டில் செயற்படுத்திக் கொண்டிருப்பது குறைந்தது 'ஷரியா' சட்டமாகக் கூட அல்லாத - 'சரி சரி சேர்' என்ற சட்டம் என்பதை புத்தியுள்ள இலங்கை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு எதிராக வேண்டும்.
---------------------------
by (2020-11-23 13:10:23)
Leave a Reply