(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 23 , பிற்பகல் 11.50) கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு என பயன்படுத்தப்படும் ரெபிட் அன்டிஜன் தொகையை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை மற்றும் அந்த அன்டிஜன் குப்பிகளை அதிக விலைக்கு அரசாங்கத்திடம் விற்பனை செய்வது தொடர்பிலான விபரங்களை சிரச ஊடக வலையமைப்பின் ஊடாக அம்பலப்படுத்தி வந்த செய்திகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் இவ்விடயத்தில் எதிர்ப்பு வௌியிட்டு வரும் மெடில்லே பஞ்சலோக்க தேரருக்கு லஞ்சம் வழங்கும் முயற்சி வௌியில் வராமல் இருப்பதற்கும் தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளர் திலீத் ஜயவீர இடைக்கால தடை உத்தரவு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் நோக்கம் ரெபிட் அன்டிஜன் குப்பிகள் இறக்குமதி செய்த ஜோர்ஜ் ஸ்டுவாட் ஹெல்த் நிறுவனத்தின் தலைவர் திலீத் ஜயவீரவிற்கும் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் வௌியிடப்படும் செய்திகளை தடுத்து நிறுத்துவதாகும். அது மாத்திரமன்றி குறித்த நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தி செய்தி வௌியிட்டதால் 2 பில்லியன் நட்ட ஈடும் கோரப்பட்டுள்ளது. அதன்படி ஜோர்ஜ் ஸ்டுவார்ட் ஹெல்த் நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வௌியிட சிரச ஊடக வலையமைப்பிற்கு நீதிமன்றம் 23ம் திகதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
லங்கா ஈ நியூஸ் ஆகிய நாம் சிரச ஊடக வலையமைப்பின் பக்கச்சார்பான செய்தி அறிக்கையிடல் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து அவர்கள் முன்னெடுத்த மற்றும் முன்னெடுக்க இருந்த வியாபாரங்கள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைத்து செய்திகளை வௌியிட்டோம். அதே போன்று நாட்டு மக்களுக்கு உண்மைகளை செய்தி அறிக்கையிடாமல் அரசியல் வாதிகளின் பாதணிகளை நக்கி உண்ணும் வகையில் செயற்பட்டதையும் நாம் விமர்சித்து செய்தி வௌியிட்டோம்.
எவ்வாறாயினும் நாட்டு மக்கள் அபாயமான வைரஸ் தொற்று காரணமாக பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் தருணத்தில் தமது வியாபார நடவடிக்கைகளில் வசந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் திலீத் ஜயவீர சிரச ஊடக வலையமைப்புக்கு எதிராக தடை உத்தரவு பெற்றுள்ளதை நாம் ஒன்றிணைந்து எதிர்ப்போம்.
தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளர் திலீத் ஜயவீரவின் ரெபிட் அன்டிஜன் குப்பிகள் வியாபாரம் குறித்து செய்தி வௌியிட்ட ஒரே ஒரு தேசிய இலத்திரனியல் ஊடகம் சிரச வலையமைப்பாகும். அதேபோன்று இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் இடம்பெற்ற வாத விவாதங்கள் மற்றும் மெடில்லே பஞ்சலோக்க தேரருக்கு லஞ்சம் வழங்க முயற்சித்தமை போன்ற விடயங்களை சிரச ஊடக வலையமைப்பே வௌியிட்டது. எனவே திலீத் ஜயவீர இவ்விடயங்களை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
திலித் ஜயவீர சார்பில் இடைக்காலத் தடை உத்தரவு பெற கொழும்பு மாட்ட நீதிமன்றுக்குச் சென்ற சட்டத்தரணி யார்? ஊடக சுதந்திரத்திற்காக உயிரையும் கொடுத்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிய சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவே இவ்வாறு சென்றுள்ளார். அந்த காலத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் குரலை நசுக்குவதற்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தின் உதவியை நாடிய போது, லசந்த விக்ரமதுங்கவிற்கு ஆதரவாகவும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகி செயற்பட்டவர் இந்த சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போதே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க நடு வீதியில் வைத்து கொடூரமாகக் கொள்ளப்பட்டார். அதேபோல அதி நவீன ஆயுதங்கள் மற்றும் கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்களைப் பயன்படுத்தி சிரச ஊடக வலையமைப்பின் பன்னிபிட்டிய ஔிபரப்பு நிலையத்தின் மீது மிலேச்சத்தனமான கொமான்டோ தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் கருத்து வௌியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ குறித்த தாக்குதல் சிரச ஊடக வலையமைப்பால் தாமாகவே தயார் செய்து நடத்தப்பட்ட ஒன்று எனவும் அதன் செய்தி பணிப்பாளர் செவான் டேனியல் தீவிரவாதி என்றும் கூறினார்.
காலம் ஏற்படுத்திய மாற்றத்தின் அருமை என்பதை உறுதிப்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, கோட்டாபய ராஜபக்ஷவை கொலையாளி என குற்றம் சுமத்திவிட்டு இன்று அவரது நெருங்கிய நண்பர் திலீத் ஜயவீர சார்பில் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
சிரச ஊடகத்தை அமைதியாக்கி நீதிமன்ற தடை உத்தரவு பெற்ற பின் அடுத்த இலக்கு யார் என்று நாம் கேட்க விரும்புகிறோம். எதிர்கட்சி சிரச ஊடக வலையமைப்பிற்கு ஆதரவாக முன்னிற்குமா? எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் திலீத் ஜயவீரவிற்கு பயமா? திலீத் ஜயவீர போன்ற ஊடக பிழைப்பாளியை அரச சேவை ஆணைக்குழுவிற்கு நியமிக்கும் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க எவரும் இல்லையா? அப்படி இல்லையேல் தனது நண்பர் திலீன் ஜயவீரவை திருப்திபடுத்தவென சஜித்தை அவர்கள் மௌனிக்க வைத்திருப்பார்களா?
ட்ரை எட் என்ற விளம்பர நிறுவனத்தை ஆரம்பித்த திலீத் ஜயவீர குறித்த விளம்பர துறையில் உள்ள ஒழுக்கக் கோட்பாடுகளை குப்பையில் போட்டு ஏனைய விளம்பர நிறுவனங்களை குழியில் தள்ளி செயற்பட்டுள்ளார். ஏனைய ஊடக மற்றும் விளம்பர நிறுவனங்களை துடைத்து எறிந்துவிட்டு ஊடக ஏகாதிபத்தியம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுகிறார். இன்று சிரச ஊடக வலையமைப்பும் இந்த சதிக்குள் சிக்கியுள்ளது. எனவே எதிர்காலத்தில் தமக்கும் இவ்வாறு நடக்கும் என்பதை உணர்ந்து ஏனைய ஊடக நிறுவனங்களும் சிரச ஊடக வலையமைப்பு சார்பில் முன்வர வேண்டும். ஆனால் அதற்கு சிரசவின் நடவடிக்கைகளே தடையாக உள்ளது. சிரச தனக்கு பிழைக்கும் போது மாத்திரம் ஆதரவுக்காக ஊடக அமைப்புக்களை நாடும். ஆனால் பின்னர் குறித்த அமைப்புக்களுக்கு பிரச்சினை வரும் போது அல்லமு அந்த அமைப்புகள் விடுக்கும் ஊடக அறிக்கைகளை ஔிபரப்பும் போது இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கும் பல சந்தர்ப்பங்களை கண்டுள்ளோம். சிரச ஊடக வலையமைப்பில் தொழில் புரியும் ஊடகவியலாளர்கள் எவருக்கும் ஊடக சுதந்திரத்திற்கான உருவாக்கப்படும் அமைப்புகளின் அங்கத்துவம் பெற அனுமதி கிடையாது.
இறுதியில் சிரச ஊடக வலையமைப்பு மற்றும் திலீத் ஜயவீர இரண்டு தரப்பிற்கும் நாம் ஒன்றை கூற வேண்டி உள்ளது. அதுதான் புகழ்பெற்ற ஊடக செயற்பாட்டாளர் பீ.ஏ.சிறிவர்த்தன கூறிய கூற்றாகும்.
"நாய்கள் நாய் இறைச்சி உண்ணாது"
---------------------------
by (2020-11-24 11:04:27)
Leave a Reply