(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 25 முற்பகல் 11.40) இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றுக்கு அச்சம் அடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது ஏகாதிபதித்துவ அரசாங்கம் நாட்டில் செயற்படும் சமூக ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவும் வௌிநாட்டில் இருந்து செயற்படும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு எதிராக பாரிய அளவு சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் திட்டங்களைத் தீட்டியுள்ளது. இந்த அடக்குமுறை மற்றும் சேறு பூசும் திட்டங்களை இராஜா வீரரத்னவிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 21ம் திகதி சனிக்கிழமை இராஜ் வீரரத்னவை அழைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தற்போது குறைந்து வரும் பிரபல்யத்தை மீள் கட்டியெழுப்பி அதிகரிக்கவென திட்டத்தை செயற்படுத்துமாறு இராஜ் வீரரத்னவிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ முகநூல் தளத்தை விரும்பி தொடர்ந்து வந்த ஒரு லட்சம் பேர் வரை தமது விருப்பத்தை இரத்து செய்து விலகிச் செல்லும் நிலைக்கு அவரது பிரபல்யம் முகநூலில் குறைந்துள்ளது. கோட்டாபயவின் பதிவுகளுக்கு எதிர்மாறான கருத்துக்களை வௌியிடுவதால் குறித்த நபர்கள் நீக்கம் செய்யப்படுகின்றனர். இதில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கை பிரஜைகள் ஆவர்.
இரண்டாவதாக கட்டுப்படுத்த முடியாத லங்கா ஈ நியூஸ் போன்ற வௌிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது தொடரிபில் இரண்டு திட்டங்களைத் தீட்டி செயற்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று குறித்த இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மீது வாசகர்கள் வைத்துள்ள நம்பிக்கையை உடைக்கும் வகையில் சேறு பூசுதல் மற்றும் பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்தல். இதற்கென அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இத்திட்டத்தை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டில் இருந்து இயங்கும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் செய்திகளை வௌியிட பணம் பெற்றுக் கொள்வதாக தொடர்ச்சியான சேறு பூசும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதற்கு போலி சாட்சிகளை உருவாக்கி, பெண்களை பயன்படுத்தி போலி முகநூல் கணக்குகள் மூலம் குரல் பதிவுகளை செய்து குறித்த ஊடகங்களை செயற்படுத்தும் தலைமை ஊடகவியலாளர்களின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரங்களை செய்து செயற்படுவது திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன் குறித்த ஊடக பிரதானிகளுக்கு இலங்கையில் உள்ள சொத்துக்கள் மீது சேதம் ஏற்படுத்துவது திட்டத்தின் அடுத்த நோக்கமாகும். குறித்த இணையங்களின் முகநூல் பக்கங்களுக்கு எதிராக நபர்களை வைத்து ரிப்போட் செய்வது இவர்களின் மற்றுமொரு திட்டமாகும்.
வௌிநாட்டில் இருந்து செயற்படும் இவ்வாறான 30 இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் கோட்டாபய அரசாங்கததால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி இராஜ் வீரரத்ன கடந்த 23ம் திகதி தொடக்கம் தனது சேறு பூசும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையில் இருந்து செயற்படும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தவென அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் சிஐடி அடங்கிய குழுவினருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராஜின் அணியும் அரச புலனாய்வு சேவை மற்றும் சிஐடி குழுவினருடன் இணைந்து செயற்பட உள்ளனர்.
இந்த திட்டங்களை செயற்படுத்தவென அக்குருகொட பிரதேசத்தில் உள்ள இராணுவ தலைமையக கட்டிடத்தில் விசேட பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கு அரச புலனாய்வு சேவை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலிக்கு நெருக்கமான அதிகாரி ஒருவரின் கீழ் செயற்படுத்தப்படுகிறது. இந்த விசேட பிரிவில் சீன பிரஜைகளான தொழிநுட்ப நிபுணர்கள் இருவர் பணி புரிவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
லங்கா ஈ நியூஸ் இணையம் இலங்கையில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதால் வாசகர்கள் முகநூல் வழியாகவே செய்திகளை பார்வையிடுகின்றனர். ஆனால் கடந்த 22ம் திகதி ஞாயிற்குக் கிழமை தொடக்கம் எமது முகநூல் பக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 10 லட்சம் வரை 'என்கேஜ்மென்ட்' என்று கூறப்படும் இணைந்திருக்கும் வாசகர்களின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவு 7 தொடக்கம் 8 ஆயிரம் வரை குநைத்துள்ளது. லங்கா ஈ நியூஸ் செய்திகளை முகநூலில் பகிர்ந்து கொள்ளும் நபர்களின் முகநூல் உள் பெட்டிக்கு மிரட்டல் செய்திகள் வருவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
'பெக்ட் செக்கர்கள்' என்று கூறிக் கொண்டு இலங்கையில் செயற்படும் சிலர் உண்மை செய்திகளை பொய் செய்திகள் என குறிப்பிட்டு பதிவுகள் இடுவதை காண முடிகிறது. ஊடக துறையில் 50 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர்கள் வௌியிடும் செய்திகளைக் கூட இந்த பெக்ட் செக்கர்கள் பொய் செய்தி என முத்திரை குத்துகின்றனர். சிறப்பான திட்டங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இணைய ஊடகங்கள் கூட ராஜபக்ஷக்களின் இந்த ஊழல் மறைப்பு திட்டத்தில் சிக்கி உள்ளமை கவலை அளிக்கிறது.
இதேவேளை, முழு இணையத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் சீனாவில் செயற்படுத்தப்படும் திட்டத்தை இலங்கையிலும் செயற்படுத்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவு பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் நேரடியாக கூகுல் பக்கத்திற்குச் செல்ல முடியாது. அவ்வாறு செல்வதாயின் சீன சேர்ச் என்ஜின் ஊடாகவே செல்ல முடியும். சீனாவில் ஆட்சியில் உள்ள கம்யூனிச ஆட்சியாளர்கள் இணையக் கட்டுப்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானியில் தொழிநுட்ப அமைச்சு என புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கி உள்ளமை இந்த இணைய அடக்குமுறையை வெற்றிகரமாக செயற்படுத்தவே.
இதேவேளை, தமது தனிப்பட்ட முகநூல் ஊடாக செய்திகளை வௌியிட்டதாகவும் பிற செய்திகளை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்து தற்போது வரை பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் உண்மையான எண்ணிக்கையை கூறாவிட்டாலும் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல் படி 40 பேர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் சமூக வலைத்தள ஊடக கட்டுப்பாட்டிற்கு சிங்கப்பூர் நாட்டில் செயற்படுத்தப்பட்டுள்ளது போன்ற சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். சிங்கப்பூரில் உள்ள குறித்த சட்டம் உலக அளவில் கடும் எதிர்ப்பு உள்ளான ஒன்றாகும். அண்மையில் சிங்கப்பூர் நாட்டில் ரொய்டர் ஊடக சேவையின் ஊடகவியலாளர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதும் இந்த மோசமான சட்டத்தை வைத்தே ஆகும். இந்த சட்டத்தின் பயன்கள் குறித்து வர்ணிக்க அரசாங்கத்தின் அமைச்சர்கள் மாத்திரமன்றி தாமரை மொட்டு கட்சியின் செயலாளரும் மேடைக்கு வந்துள்ளார்.
---------------------------
by (2020-11-26 00:44:02)
Leave a Reply