(லங்கா ஈ நியூஸ் - 2020, டிசம்பர் 08 பிற்பகல் 04.05) புராண சித்தாந்தங்கள் ஊடாக ஒருவர் ஆட்சிக்கு வந்தால் அவரது அரச கொள்கையும் புராண சித்தாந்தமாகவே காணப்படும். ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரோயில் மருத்துவம், ரோயல் போலி வைத்தியர்கள், ரோயல் பூசாரிகள், ரோயல் சாஸ்திர காரர்கள் போன்றவர்களும் ஆட்சியாளர்களாக மாறி விடுவர். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்த பின் ரோயல் பூசாரி இடத்திற்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பூசாரி என்பதற்கு பெண் பால் பெயர் ஒன்று இல்லை என்பதால் நாம் அவரை ரோயல் பூசாரி அக்கா என அழைப்போம். நாம் கூறும் இந்த பூசாரி அக்கா வேறு யாருமல்ல அநுராதபுரம் ஞானா அக்கா ஆவார்.
ஞானா அக்கா என்பவர் 88 - 89 வன்முறை காலத்தில் இந்தியாவின் சமாதான படைகளை நாட்டில் இருந்து விரட்டுவதற்காக எனக் கூறி இலங்கை அரச சொத்துக்களை நெருப்பு வைத்து அழித்த சம்பவத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் திஸ்ஸ வாவி உயர் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவரின் மனைவி ஆவார். கணவன் கொலை செய்யப்பட்ட பின் கொலையாளியின் கள்ளத் தொடர்பு மனைவியாகிய ஞானா அக்கா அதன் ஊடாக இராணுவத் தளபதியுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். அந்த தொடர்புகளை அரசியல் உயர் மட்ட நபர்கள் வரை வளர்த்துக் கொண்டுள்ள ஞானா பூசாரி அக்கா தேவாலயம் ஒன்றை அமைத்து அதன் ஊடாக இராணுவத்தினர் அரசியல் வாதிகள் போன்றவர்களை முட்டாள் தனமான விடயங்கள் ஊடாக ஏமாற்றி வருகிறார். இந்த பயணம் தற்போது நாட்டில் யாப்புத் திருத்தத்தின் ஊடாக சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மாறி இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதங்கள் வரை சென்றடைந்துள்ளது.
இந்த ரோயல் பூசாரி ஞானா அக்கா தற்போது அநுராதபுரத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை அமைத்து வருகிறார். இதில் உள்ள புதுமையான விடயம் என்னவென்றால் குறித்த ஹோட்டல் நிர்மாண பணிகளை இலங்கை இராணுவ வீரர்களே மேற்கொண்டு வருகின்றனர். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலில் இரண்டு இராணுவ பிரிவினர் ஞானா பூசாரி அக்காவின் ஹோட்டல் நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வளங்கள் மற்றும் உழைப்புகளை இராணுவத்தினர் முதலீடு செய்துள்ளனர். அப்படி இன்றேல் நாட்டு மக்களின் வரிப் பணம் என்றும் கூறலாம். இந்த ஹோட்டல் நிர்மாண பணிகள் தாமதம் அடைந்துள்ளதால் ஹோட்டல் உரிமையாளரான ஞானா பூசாரி அக்கா தனது மருமகன் சவேந்திர சில்வாவிற்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். அதன்போது ஹோட்டல் நிர்மாண பணிகளுக்கு பொறுப்பாக இருக்கும் இராணுவ வீரர்களை சவேந்திர சில்வா அடுக்கடுக்கான கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்.
சவேந்திர சில்வா தனது மனைவிக்கு சாரி தெரிவு செய்வதில் காட்டும் அக்கறையை விட அதிகளவான அக்கறையை ஞானா அக்காவின் ஹோட்டல் கட்டுமாண பணியில் காட்டுவதற்கு முக்கிய காரணம் உள்ளது. சவேந்திர சில்வா இந்த நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என்று ஞானா அக்கா அருள் வாக்கு கொடுத்திருப்பதால் அதனை முழுமையாக நம்பி சவேந்திர சில்வாவும் செயற்பட்டு வருகிறார். அதன்படி ஞானா பூசாரி அக்காவும் தற்போது சவேந்திர சில்வாவை 'எமது எதிர்கால பிரதமர்' என்றே அழைக்கிறார்.
ஞானா அக்கா தமது செலவில் ஹோட்டல் அல்ல மாளிகை அமைத்துக் கொண்டாலும் எமக்கு அதில் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த வேலைகளுக்கு நாட்டு மக்களின் வரிப் பணமும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்கும் இராணுவ வீரர்களையும் பயன்படுத்துவது தொடர்பில் ஆட்சியாளர்கள் மீது எமக்கு அதிருப்தியுடனான கடும் எதிர்ப்பாகும்.
நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரோயல் பூசாரி ஞானா அக்கா இருவரும் உள்ள கீழ்க்காணும் புகைப்படம் குறித்து சில வார்த்தைகளை கூறியே ஆக வேண்டும். அண்மையில் தனது முதலாவது வருட பதவி பிரமாண பூர்த்தியை கொண்டாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக ஞானா அக்கா இரகசியமாக அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த விசேட ஆசீர்வாத பூஜையின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதிகளவு கட்டுக்கடங்காத அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி பதவியை வைத்துக் கொண்டு சட்டையில் வீர பதக்கங்களையும் குத்திக் கொண்டு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த ரோயல் பூசாரி பெண்ணின் 'கொட்டோருவா' உதவியாளர் (பூசாரிக்கு இணையாக வேலைகளை செய்பவரை கொட்டோருவா என பெயர் கொண்டு அழைப்பர்) வேலை செய்வதை பார்க்கும் போது 69 லட்சம் பேருக்கு மாத்திரமல்ல எமக்கும் மன வருத்தம் ஏற்படுகிறது. காரணம் பாரிய அளவு அபிவிருத்தி அடைந்த அமெரிக்காவில் இருந்து எமது நாட்டுக்கு இந்த அளவு அபிவிருத்தி அடையாத சாஸ்திரக்காரர் போன்றவர் வந்திருப்பதை நினைத்தாகும்.
---------------------------
by (2020-12-08 12:18:24)
Leave a Reply