~

மேசன் பாஸ் ஒருவரிடம் ஏமாந்தது இலங்கை, பிரித்தானியா உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை வழங்க ஆரம்பம்..! மாக்ரட், மே மற்றும் வில்லியம் சேக்ஸ்பியர் ஆகியோர் உலக சாதனை..!

(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 08 , பிற்பகல் 04.00) கொரோனா வைரஸை அழிப்பதில் இலங்கையில் சாத்திரங்களை கடைபிடித்து ராஜபக்ஷ அரசாங்கம் ஹெலிகொப்டர் மூலம் மந்திரிக்கப்பட்ட நீர் தௌிப்பதும், மந்திரிக்கப்பட்ட புனித நீரை பானைக்குள் அடைத்து கங்கையில் போடுவதும், மேசன் பாஸ் ஒருவரின் போலி மருந்துக்கு அரச அனுசரணை வழங்கியும் நாட்டு மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த தற்போது உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வரிசையில் முன்னிலை வகிக்கும் பிரித்தானியா கொரோனா ஒழிப்புக்காக கண்டுபிடித்த பைசர் தடுப்பூசியை முதல் முறையாக அந்நாட்டு நோயாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. அவர்கள் இன்றைய தினத்தை  V-Day என்று வெற்றி தினமாக அறிவித்துள்ளனர்.

முதலாவது தடுப்பூசி பிரித்தானிய நேரப்படி அதிகாலை 6.31 மணிக்கு கொவென்டரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் 90 வயதுடைய 'மாக்ரட் கீனன்' என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கிய தாதியின் பெயர் 'மே பாரிசன்ஸ்' ஆகும். இவ்விரண்டு பெண்களின் பெயரும் வலராற்றில் பதியப்படும். மாக்ரட் கீனன் என் வயது முதிர்ந்த பெண் இன்னும் சில வாரங்களில் தனது 91வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். தடுப்பூசி பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின் தனக்கு அச்சம் இன்றி குடும்ப உறவுகளுடன் இணைந்து பிறந்த தினத்தை கொண்டாட முடியும் என குறித்த வயது முதிர்ந்த பெண் தெரிவித்துள்ளார்.  

இரண்டாவது தடுப்பூசி அதே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் 81 வயதுடைய வில்லியம் சேக்ஸ்பியர் (பில்) என்ற முதியவருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இவருக்கும் மேற்கூறிய தாதியே தடுப்பூசி வழங்கியுள்ளார். இந்த வரலாற்று நிகழ்வில் எந்தவொரு அரசியல் வாதியும் அதிகாரிகளும் பங்குபெறவில்லை என்பது விசேட அம்சமாகும். அது அந்த நாட்டின் சுகாதார துறையினது  NHS பணியாகவே இடம்பெற்றது.
 
பிரித்தானிய நாட்டு மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் பிரித்தானியா ஆரம்பித்துள்ள பாரிய திட்டமாக இது கருதப்படுகிறது.

பிரித்தானியா PfizerBioNTech என்ற தடுப்பூசிக்கு கடந்த வாரமே அனுமதி அளித்திருந்தது. அதன்போது தடுப்பூசியை நாடு முழுவதும் வழங்குவதற்குத் தேவையான சட்டத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளை வலுப்படுத்தி தடுப்பூசி வழங்கும் மத்திய நிலையங்களை புதிதாக உருவாக்கி முறையான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் தடவையாக 8 லட்சம் PfizerBioNTech தடுப்பூசி குப்பிகள் பிரித்தானியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இது 4 லட்சம் நோயாளர்களுக்கு போதுமானதாகும். இந்த குப்பிகள் இரண்டு முறை தடுப்பூசியில் ஏற்றப்பட வேண்டும். முதலாவது தடுப்பூசி வழங்கி 21 நாளில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

பிரித்தானிய தடுப்பூசி ஆயத்தம்..

பிரித்தானியா 350 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்துள்ளது. அதில் 7 வர்க்கங்களைக் கொண்ட தடுப்பூசிகள் காணப்படுகின்றன. பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்ட்ரசெனகா நிறுவனம் ஆகிய இணைந்து கண்டு பிடித்த 100 மில்லியன் தடுப்பூசிகள், Valneva என்ற நிறுவனம் தயாரித்த 60 மில்லியன் தடுப்பூசிகள், Novavax என்ற நிறுவனம் தயாரித்த 60 மில்லியன் தடுப்பூசிகள், Glaxo என்ற நிறுவனம் தயாரித்த 60 மில்லியன் தடுப்பூசிகள், , Pfizer என்ற நிறுவனம் தயாரித்த 40 மில்லியன் தடுப்பூசிகள்,  Janssen என்ற நிறுவனம் தயாரித்த 30 மில்லியன் தடுப்பூசிகள் மற்றும் Moderna என்ற நிறுவனம் தயாரித்த 5 மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாறு தருவிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளில் சீனா அல்லது ரஸ்யா தயாரித்த தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சீன மற்றும் ரஸ்ய தடுப்பூசிகள் தரமானவை என பிரித்தானிய விஞ்ஞானிகள் அறிவிக்கவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.

இந்த தடுப்பூசி 10 - 12 பவுன் விலை மதிப்புடையது என்ற போதும் பிரித்தானிய தமது மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது

தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதற்கு முறையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் தற்போது நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் நோயாளர்களுக்கு அதிலும் உயிரிழப்புக்களை சந்திக்கக் கூடிய 80 வயதிற்கு அதிகமானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் 10 கட்டங்களாக வயது அடிப்படையில் இந்த தடுப்பூசியை வழங்க பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது. 16 வயதுக்கு குறைந்தவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படாது.

இலங்கைக்கு என்ன செய்ய முடியும் ?

இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு இலங்கையிடம் பணம் இல்லை என தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் பொய் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்காக கோட்டாபய அரசாங்கம் மேசன் பாஸ் ஒருவரின் பொய் மருந்தை நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களின் உயிரை காக்கும் தடுப்பூசியை கொள்வனவு செய்ய பணம் இல்லாத அரசாங்கத்திற்கு ஹோமாகம பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆயிரம் கோடி கணக்கில் செலவு செய்ய தயார் நிலையில் உள்ளது.  

இலங்கை பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடாகும். பிரித்தானியாவின் வௌிநாட்டு கொள்கைகளுக்கு அமைய பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கு அவர்கள் விசேட சலுகை வழங்குவர். அந்த வழியை பயன்படுத்தி பிரித்தானியா தயாரிக்கும் தடுப்பு ஊசியை இலவசமாக அல்லது கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது. ஆனால் அதற்காக பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவ தலைமை கொண்ட கொரோனா ஒழிப்பு மத்திய நிலையத்திற்கோ போலி பேராசியர் பதவி கொண்ட சன்ன ஜயசுமனவிற்கோ கொரோனா தொற்று ஏற்பட்ட சிறை கைதிகளை கொலை செய்யும் கொலைகார தலைவர்களுக்கோ தகுதி கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்கள் குழு மற்றும் ஒழுக்கமான தலைவர்களுக்கு அதற்கான தகுதி உள்ளது.

சந்திரபிரதீப்

---------------------------
by     (2020-12-08 15:21:06)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links