எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2020, டிசம்பர் 18, பிற்பகல் 08.45) முழு நாட்டுக்கும் சட்டத்தை கற்பிக்கும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டமையால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும், நீதி அமைச்சரும், சட்ட மா அதிபர், சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்ட நீதித் துறையின் உயர் அதிகாரிகள் அனைவரும் கொரோனா தொற்று ஏற்படக் கூடிய அபாயத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் பொறுப்பு மீறி செயற்படுவதால் இலங்கை அடுத்த கொரோனா கொத்தணி நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளிடம் இருந்து ஆரம்பிக்க உள்ளது.
சட்ட மா அதிபர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மதிக்காது வவுனியாவில் விடுமுறை பங்களா திறப்பு நிகழ்விற்கு தமது குழுவினருடன் படையெடுத்து சென்றதால் இந்த கொரோனா தொற்று அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தூர இடத்தில் உள்ள விடுமுறை பங்களா திறப்பு விழாவிற்கு நிறுவன பிரதானி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விசேடமாக நாட்டில் தொற்று நோய் நிலைமை காணப்படும் போது இது அவசியம் அற்ற செயலாகும். ஆனால் கடந்த 10 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற விடுமுறை பங்களா திறப்பு நிகழ்விற்கு சட்ட மா அதிபர் மாத்திரமன்றி இரண்டாம் நிலை நபரான பதில் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரட்ன, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்த்தன ஆகிய மூவரும் கொழும்பில் இருந்து தமது குழுவினருடன் வவுனியா சென்றுள்ளனர். இந்த நிகழ்வுக்குச் சென்றவர்கள் உணவு உட்கொண்டு தேனீர் அருந்து பல மணி நேரம் தங்கி இருந்துள்ளனர். இறுதியில் குறித்த திறப்பு விழா நிகழ்வை முன் நின்று ஏற்பாடு செய்து நடத்திய வவுனியா சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரியான லபீர் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் பீ சி ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என காட்டிய நிலையில் இரண்டாவது பி சீ ஆர் பரிசோதனையில் பொசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 17ம் திகதி அவர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த 10ம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லபீர் என்பவரின் முதலாவது பி சீ ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தவுடன் கொரோனா நோய்க்கான அறிகுறியான இருமல், காய்ச்சல் போன்றவை காணப்பட்ட போதும் அவர் பணிக்குச் சென்றுள்ளார். அப்படியானால் 10ம் திகதி நிகழ்வு நடக்கும் போதும் அவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. அதன்படி தப்புல, சஞ்சய மற்றும் சுமதி ஆகிய சட்ட மா அதிபர் திணைக்கள உயர் அதிகாரிகள் தற்போது தனிமைப்படுத்தலில் அல்லது சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
இங்கு உள்ள மற்றுமொரு மிக ஆபத்தான விடயம் என்னவென்றால் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேர இந்த நிகழ்வு முழுவதும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. அண்மையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதனை பார்வையிட வந்த போதும் சட்ட மா அதிபர் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. ஏனைய அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்த நிலையில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா மாத்திரம் சண்டியர் போன்று முகக் கசவம் அணியாமல் இருந்தார். அதுவே அவரது ஒழுக்க செயற்பாடாக இருந்தது. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் போன்றே இடைவௌியும் முக்கிய அம்சமாகும். ஆனால் இலங்கையில் இடைவௌி பேணி சுகாதார பாதுகாப்புடன் அரச நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை. வவுனியா திறப்பு விழா நிகழ்வில் தப்புல மாத்திரம் அன்றி மற்றைய இருவரும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.
வவுனியா லபீர் என்பவருக்கு 14ம் திகதியாகும் போதும் கொரோனா தொற்று இருப்பதை அறியாத சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா திங்கட்கிழமை 15ம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் நீதி அமைச்சர் அலி சப்ரி, அமைச்சு செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற அனைத்து நீதிபதிகள், சட்ட மா அதிபர் திணைக்கள அனைத்து உயர் அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 200ற்கும் அதிகமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் புகைப்படம் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்திலும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா முகக் கவசம் அணியாது இருந்துள்ளார். அவரை பின்பற்றி அவரது அன்புக் காதலி நிராஷா ஜயரட்னவும் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார். 15ம் திகதி திறப்பு விழா நிகழ்வும் தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் கொரோனா சுகாதார பாதுகாப்புக்கு அமைய இடைவௌி பேணி நடைபெறவில்லை.
அதன்படி மேற்கூறிய நீதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தொற்றாளரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொடர்புகள் என்ற வரிசையில் தனிமைப்படுத்தல் நிலையம் அல்லது சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அனைவரும் சம்பவத்தை மூடி மறைத்து உள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பது அதிகாரம் படைத்தவர்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தை முறையாக செயற்படுத்தாமல் இருப்பதன் காரணமாகவே. அதனால் நாட்டில் அடுத்த கொரோனா கொத்தணி நீதிமன்றம் மற்றும் சட்ட மா அதிபரிடம் இருந்து தொடங்கிலாம் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனினும் இது தொடர்பில் அஜித் ரோஹன ஏதேனும் கதை விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
நாட்டின் முழு நீதிமன்றம் மற்றும் நீதி கட்டமைப்பு கொரோனா தொற்று காரணமாக குழியில் விழுந்த சட்டமும் பாரபட்சமான நீதிமன்றமும் சுத்தமாகும் என்றால் பரவாயில்லை. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் அவ்வாறானதொரு 'சுத்தப்படுத்தல்' இடம்பெறாது.
---------------------------
by (2020-12-18 13:59:00)
Leave a Reply