~

வரலாற்றில் முதல் தடவையாக நாடு 'திவால்நலை' சீரழிவு..! வௌிநாட்டு வங்கியால் இலங்கை வியாபாரிகளின் கடன் பெறுகை கடிதங்கள் (LC) நிராகரிப்பு..!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 20 , பிற்பகல் 01.15) சவுபாக்கியமான நாட்டை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த 'வேலை செய்யும் வீரர்' கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்து ஒரு வருடத்தின் பின் வரலாற்றில் முதல் தடவை இலங்கை உத்தியோகபூரவமாக 'திலால்நிலை-சீரழிந்த' நாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை கவலையுடன் வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஒரு இலங்கை வர்த்தகரின் அனுபவம்..

ஒரு வியாபாரியின் வௌிநாட்டு இறக்குமதி செயற்பாட்டின் போது இலங்கையில் உள்ள வங்கி ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் பெறுகை கடிதம் என்ற (LC - Letter of Credit) பத்திரத்தை வௌிநாட்டு வங்கி ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ளது. லங்கா ஈ நியூஸ் இணையத்துடன் தனது அனுபவத்தை பகிந்து கொண்ட இலங்கையின் பிரபல முதல் தர வியாபாரி ஒருவர், கடந்த வாரத்தில் தன்னால் முன்வைக்கப்பட்ட இலங்கையில் உள்ள வங்கியில் பெறப்பட்ட கடன் பெறுகை கடிதத்தை நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதான வங்கிகள் நிராகரித்துள்ளதாகக் கூறினார். இலங்கை நாடானது கடந்த 11ம் திகதி வௌ்ளிக்கிழமை கடன் செலுத்த முடியாத சர்வதேச நாடுகள் தர வரிசையில் தரம் குறைக்கப்பட்டுள்ளதால் இந்த கடன் பெறுகை கடிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என குறித்த வங்கிகள் பதில் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தனது வியாபார அனுவபத்தில் இவ்வாறு நடந்திருப்பது இதுவே முதல் தடவை என அவர் கூறினார். அதனால் இலங்கையின் உள்நாட்டு வங்கிகள் வழங்கும் கடன் பெறுகை கடிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் நேரடியாக பணம் செலுத்தி அல்லது வௌிநாட்டு வங்கிகளில் சிபாரிசு கடிதம் பெற்று வருமாறு குறித்த வங்கிகள் தனக்கு ஆலோசனை வழங்கியதாக குறித்த வியாபாரி கூறினார்.  

வௌிநாட்டு வங்கிகளில் சிபாரிசு பெறச் சென்றால் அவர்களும் இந்த உள்நாட்டு கடன் பெறுகை கடிதத்தின் பெறுமதிக்கு கட்டுப்பணம் செலுத்துமாறு கோருவதாக குறித்த இலங்கை வியாபாரி மேலும் கூறினார். அதனால் பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஞானா பூசாரி அக்காவின் எதிர்வு கூறலா?

இது தொடர்பில் குறித்த வியாபாரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்த போது அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர், தற்போதைக்கு இலங்கையில் உள்ள வௌிநாட்டு வங்கி ஒன்றில் கடன் பெறுகை கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தில் வியாபாரி இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள அங்குள்ள அதிகாரி ஜனவரி 16ம் திகதி வரை காத்திருக்குமாறு கூறியுள்ளார். ஜனவரி 16ம் திகதி என்ன நடக்கும் என குறித்த வியாபாரி கேட்ட கேள்விக்கு அதிகாரி பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து எமது இணையத்திடம் கருத்து வௌியிட்ட குறித்த வியாபாரி ஜனவரி 16ம் திகதி பாரிய புதையல் கிடைக்கும் என அநுராதபுரம் ஞானா பூசாரி அக்கா எதிர்வு கூறினாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றார்.

அவதானம் நிறைந்த நாட்டுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதில் உள்ள அச்சம்..

கடந்த 11ம் திகதி வௌ்ளிக்கிழமை சர்வதேச பிட்ச் தரப்படுத்தல் நிறுவனத்தால் இலங்கை சர்வதேச கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் B- தரத்தில் இருந்து CCC தரத்திற்கு கீழ் இறக்கியுள்ளது. அதற்கு முன்னர் மூடீஸ் சர்வதேச தரப்படுத்தலில் B3 தரத்தில் இருந்த இலங்கை Caa1 நிலைக்கு தரம் குறைக்கப்பட்டது. இந்த இரண்டு தரப்படுத்தல்களிலும் இலங்கைக்கு பாரிய அடி வீழ்ந்துள்ளது. அதனால் இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் போது குறிப்பிடத்தக்க அளவு அவதானம் என்ற substantial risk நிலையுடைய நாடு என பெயரிடுதல் மிகவும் அவதானம் மிக்கது. இவ்வாறான அவதானம் கொண்ட நாட்டுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய அச்சப்பட்டே இலங்கை உள்நாட்டு வங்கிகளின் கடன் பெறுகை கடிதத்தை ஏற்றுக் கொள்ளாது சர்வதேச வங்கிகள் நிராகரித்துள்ளன.

கள நிலவரம் இவ்வாறு இருக்கையில் கல்விப் பொதுத் தரா தர சாதாரண தர பரீட்சையில் கூட பொருளாதாரம் குறித்து கற்றிராத தன்னை பெரிய 'பொருளாதார அபிவிருத்தி வேலைக்காரன்' என்று காட்டிக் கொள்ளும் பசில் ராஜகக்ஷ, அரசாங்கத்திற்கு கடன் செலுத்துவதில் இயலாமை கிடையாது எனக் கூறியுள்ளார். ஆனால் நாடு திவாலான சீரழிவு நிலையில் இருப்பதற்கு ஆதாரம் வேறு நாடு கடன் வழங்க மறுக்கின்றமையே தவிர வேறு காரணங்கள் கிடையாது. உள்நாட்டு வங்கிகளின் கடன் பெறுகை கடிடத்தை வௌிநாட்டு வங்கிகள் நிராகரிப்பதில் இருந்து இதனை விளங்கிக் கொள்ள முடியும்.

தரம் குறைக்க பொய்யான வரவு செலவுத் திட்டமும் காரணம்..

இவ்வாறு இலங்கை வியாபாரிகளுக்கு நேரடியாக பணம் கொடுத்து பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டி ஏற்பட்டால் அவர்கள் குறைந்த அளவிலான பொருட்களையே இறக்குமதி செய்வர் என்பதுடன் இதன் மூலம் நாட்டில் பாரிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். அது அத்தியாவசியப் பொருட்களில் இருந்து அதி சொகுசு பொருட்கள் வரை மாறக் கூடும்.

பிட்ச் சர்வதேச நிறுவனம் அண்மையில் இலங்கையை தரம் குறைத்து பட்டியலிட பிரதான காரணம் ராஜபக்ஷ அரசாங்கம் தமது வரவு செலவுத் திட்டத்தில் காட்டிய எண்கணித விளையாட்டாகும். இதனை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரும் பிரபல பொருளாதார நிபுணருமாகிய ஏ.விஜேவர்த்தன டெய்லி எப்ரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கடந்த 14ம் திகதி மிகத் தௌிவாக வௌியிட்டுள்ளார். (வாசிக்கவும் Child’s guide to credit rating downgrade: A warning not to be ignored)

வரலாற்றில் பாரிய வீழ்ச்சி எதிர்மறை - 16.3% ஆக பதிவு..

இதேவேளை, பொதுசன மற்றும் கணக்காய்வு திணைக்களம் அண்மையில் வௌியிட்ட ஆய்வு தரவுகள் படி 2020ம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி நிலையில் உள்ளது. அது எதிர்மறையில் 16.3% என்ற பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. முதல் காலாண்டில் 1.6% எதிர்மறையாக பொருளாதார வளர்ச்சி பதிவாகியது. தற்போது எதிர்மறை 5.3% ஆக காணப்படுவதாக பொதுசன மற்றும் கணக்காய்வு திணைக்கள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரசாங்கத்தின் அரசியல் வாதிகள் கூறுவது போல 'அபிவிருத்தி சவுபாக்கியம்' என்பது பச்சை பொய்யாகும்.  

கஞ்சா திலித், குடு ரேனோ, நெத் நிஹால், டிரான் அலஸ் போன்றவர்கள் தங்களது பொய்களால் 'நாட்டு மக்களுக்கு 'பாம்பு காட்டி' ஏமாற்றி மோசடியான ராஜபக்ஷக்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்துள்ள சவுபாக்கியம் இதுதான். வரலாற்றில் முதல் தடவையாக நாடு 'திவால் நிலை சீரழிவை' சந்தித்து உள்ளது.

சந்திரபிரதீப்

---------------------------
by     (2020-12-20 20:54:41)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links