~

இந்த தமிழர்களின் குரலுக்கு செவிமெடுப்பதா? இல்லையேல் எதிர்கால தமிழ் இளைஞர்களின் துப்பாக்கிச்சூட்டு சத்தங்களுக்கு செவிமெடுப்பதா..? தெரிவு தெற்கு வசம்..!

-எழுதுவது அனுபாவனந்த

(லங்கா ஈ நியூஸ் - 2020 , டிசம்பர் 21 , பிற்பகல் 02.10) நடந்து முடிந்த ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 515963 ஆகும். ( 4.62% ). இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 327168 வாக்குகளை மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றது. ( 2.82%). கடந்த தேர்தலை விட இம்முறை தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை கூட்டமைப்பு இழந்துள்ளது. 16ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை 10ஆக குறைந்துள்ளது. தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வியடைந்த பின்னர் கடந்த 10 வருடங்களில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெற்கில் உள்ள சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேசி தீர்வினைப் பெற முயற்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் நம்ப முடியாது என்ற தகவலை நடந்து முடிந்த தேர்தலின் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர். இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்களுக்கு மேல் சென்று போராட்ட வடிவம் கொண்ட கட்சிகளுக்கு வாக்களித்து புதிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழர்களின் அரசியலில் மீண்டும் தோன்றியுள்ள நட்சத்திரமாக (come back kid) தமிழ் தேசிய மக்கள் முன்னண்யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திகழ்கிறார். 2010 மற்றும் 2015ம் ஆண்டு காலப் பகுதியில் துடைத்து எறியப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது இனவாத அரசியல் அணி மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது. இன்று தமிழ் தேசியவாத கொடி அவர்கள் கைகளில் உள்ளது.

தனது தந்தை கொலை செய்யப்பட்டதன் பின் அரசியலில் பிரவேசித்த சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது பாட்டன் மற்றும் தந்தையை போல் அல்லாது மாற்று திசையில் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார். சிங்கள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தெற்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் முன்னிலையாகி செயற்படுவதற்கு மாறாக அவர் தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டார். 2001ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுவில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 29641 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றியடைந்து பாராளுமன்றம் சென்றார். 2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தனது ஆதிக்கத்தை அதிகரித்து 60770 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப செயற்பட்டது. இதனை செயற்படுத்தும் பிரபல நபராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திகழ்ந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தோல்வியின் பின் தமிழர் அரசியல்..

எனினும் 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தோல்வியின் பின் தமிழ் போராட்ட அரசியல் வாதிகளின் ஒரு பாகம் முடிவுக்கு வந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலிகளின் செயற்பாட்டுப் பிடியில் இருந்து விடுபட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்டத் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன் போன்றோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளின் பிடியில் இருந்து அகற்றி ஜனநாயக நீரோட்டம் நோக்கி பயணிக்க முயற்சித்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்து அமையான வழியில் பிரச்சினைகளை தீத்துக் கொள்ள முயற்சித்தனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அடிப்படைவாத கொள்கையாளர்களுக்கு அடிப்படைவாத அரசியலை முன்னெடுக்கும் தேவையே இருந்தது. அதற்கென அவர்களுக்கு புலிகள் ஆதரவு புலம்பெயர் டயஸ்போராக்களில் ஆதரவு கிடைத்தது.  

2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலி அடைப்படைவாதிகளுக்கு வேட்பு மனு வழங்க வேண்டும் என்ற விடாபிடியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்தார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலி அடிப்படைவாதிகளுக்கு வேட்பு மனு வழங்காதிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் முடிவு செய்தனர். எனினும் இந்த தீர்மானத்தை மாற்றி அமைத்து புலிகளின் அடிப்படைவாத கொள்கை கொண்டவர்களுக்கு வேட்பு மனு பெற்றுக் கொடுக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட புலிகளின் ஆதரவாளர்கள் இணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) என்ற கூட்டணியை உருவாக்கினர்.

1977ம் ஆண்டு தமிழர் ஐக்கிய  விடுதலை முன்னணி முன்வைத்த தமிழ் இனவாத வேலைத் திட்டங்கள் போன்ற வேலைத் திட்டங்களை முன்வைத்து புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் வடக்கு கிழக்கில் 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறுவதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாக இருந்தது. ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அடிப்படைவாத கருத்துக்களை கொண்ட அணியினரை புறந்தள்ளி நடுநிலை கருத்துக்களைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோ பெற்றி பெறச் செய்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு குறித்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெறும் 6392 வாக்குகளே கிடைத்தன. திருகோணமலை மாவட்டத்தில் 1182 வாக்குகள் கிடைத்தன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைத்த பலத்த தோல்வியானது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இலங்கை நாட்டுக்குள் நடுநிலையாக சாதாரண தீர்வொன்றை எதிர்பார்த்து உள்ளதன் வௌிப்பாடாக அமைந்தது.

தொடர் புரட்சி மற்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு..

அதன்பின்னர் ஜனவரி 8ம் திகதி புதிய புரட்சி ஏற்பட்டது. 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்யும் முன்னிலை அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்பட்டது. தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததால் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்ய தலைமை வகித்த சரத் பொன்சேகாவையும் வெற்றி பெறச் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாடுபட்டனர். 2015ம் ஆண்டுத் தேர்தலில் இவர்களின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காகியது. மஹிந்த ராஜபக்ஷவின் சிங்கள இனவாத கோட்பாடுகளை தோற்கடித்து நாட்டுக்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முன்வந்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பொது வேட்பாளர் என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அணிகள் ஆதரவு வழங்கினர்.
 
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாகவும் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதாகவும் மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் டயஸ்போராக்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தேர்தல் புறக்கணிப்பு என்ற போர்வையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க திரைமறைவில் செயற்ட்டனர். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு என்ற திட்டத்தை முற்றாகப் புறக்கணித்தனர். அவர்கள் நூற்றுக்கு எழுபத்து ஐந்து வீத வாக்குகளை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கினர்.  

ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் 2015 பொதுத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக புதிய தோற்றத்தில் போட்டியிட்டனர். ஆனாலும் அவர்களுக்கு வடக்கு கிழக்கில் 0.17 வீத வாக்குகளே கிடைத்தன. 2010ம் ஆண்டு பொதுத் தேர்தல் போலவே 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்தின் தோல்வி..

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நல்லாட்சி மீது பாரிய நம்பிக்கை கொண்டிருந்த போதும் தெற்கு அரசியல் வாதிகள் அவர்களை மீண்டும் ஏமாற்றினர். புதிய அரசியல் யாப்பின் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கும் எண்ணம் ஈடேறவில்லை. கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக வந்த மைத்திரிபால சிறிசேன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக பதவியேற்று சிங்கள பௌத்த இனவாத கொடியை கையில் எடுத்த பின் தமிழ் மக்களின் யாப்பு ரீதியிலான அரசியல் தீர்வு கனவு கலைந்து போனது. யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தில் எவ்வித நியாயங்களும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஒரு வருடத்திற்கு மேலாக சத்தியாக்கிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசாங்க காலத்திலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அடக்குமுறை நிறுத்தப்படவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் முன்வரவில்லை. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பொருளாதார பிரச்சினை தீர்வின்றி நீடித்துச் சென்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையும் பொருளாதார பிரத்தினையும் தீரவில்லை. இதன் விரக்தி மற்றும் ஏமாற்றம் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களால் கொட்டித் தீர்க்கப்பட்டுள்ளது. அதன் முதல் அங்கம் 2018ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வௌிப்பட்டது. அதன்போது வடக்கு கிழக்கு அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாரிய வெற்றியை பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது.

விசேடமாக வடக்கு மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு ஈடேறாமை மற்றும் விரக்தி என்பவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றும் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் பிரச்சாரங்களை முன்னெடுத்து அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டனர். வடக்கு மக்களின் கோபம் மற்றும் விரக்தி என்பவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி வாக்குகளாக மாறின. உள்ளூராட்சி தேர்தலில் 63246 வாக்குகளைப் பெற்று 81 உறுப்பினர்களை உள்ளூராட்சி சபைகளுக்கு அனுப்பி வைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முடிந்தது. அவர்கள் நூற்றுக்கு 20 சதவீத வாக்குகள் பெற்றனர். யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபைகள் 17இல் 2 சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணிக்கு முடிந்தது. 2010ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் 6362 வாக்குகளை மாத்திரம் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாரிய அளவு வாக்குகளைப் பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் தோல்வியை சந்தித்தது. யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளில் 13 சபைகளின் ஆட்சியை பிடித்தாலும் பெரும்பான்மை பலத்தை பெற தமிழித் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாத்திரம்..

இந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் நிலைமை மேலும் மோசமடைந்து 2015ம் ஆண்டு 16 பாராளுமன்ற ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 ஆசனங்களே கிடைத்தன. இவ்வாறு தோல்வி அடைந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் அல்ல. தெற்கில் சிங்கள மக்களும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு பெற்றுக் கொள்ள முயற்சித்த எண்ணமும் தோல்வி அடைந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இரண்டு பாராளுமன்ற ஆசனங்களும் முன்னாள் வடக்கு முதலமைச்சர் தலைமையிலான கூட்டணிக்கு ஒரு பாராளுமன்ற ஆசனமும் கிடைத்தது. இந்த இரண்டு அரசியல் அணிகளும் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் இனவாத அடிப்படையில் செயற்படுவதுடன் தெங்கு சிங்கள மக்களுடன் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை எட்ட முடியாது என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். நடுநிலை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட இனவாத அடிப்படைவாத கருத்து கொண்ட கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் அணியுடன் வடக்கு மக்கள் கைகோர்த்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கில் மத்திய அரசாங்க சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து தீர்வு பெற முடியாது என்ற கருத்து வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுகிறது. விசேடமாக தெற்கு சிங்கள அரசாங்கத்தின் ஏமாற்ற நாடகங்களுக்கு தொடர்ந்து ஏமாந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டிற்கு வடக்கு தமிழ் இளைஞர்கள் இழுத்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

2010ம் ஆண்டு தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு வடக்கு கிழக்கில் பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த அவர்கள் 'கட்சிசார்பற்ற' பொது வேட்பாளர் மைத்திபால சிறிசேனவிற்கும் அமோக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லை. அப்படி இருக்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பு செலுத்தினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க மக்கள் இந்த ஆதரவை தெரிவித்தனர். நல்லாட்சி அரசாங்கத்திற்கு பாராளுமன்றுக்கு உள்ளேயும் வெளியிலும் ஆதரவு வழங்கியதால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கோபம் மற்றும் விரக்தி, எதிர்ப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகங் கொடுத்தது. தமிழ் மக்கள் மீண்டும் விடுதலைப் புலி ஆதரவு டயஸ்போராக்கள் மற்றும் புலிகள் அடிப்படைவாத கொள்கை கொண்ட இனவாத கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி நோக்கி நகர்ந்து சென்றுள்ளமை புதிமை அளிப்பதாக இல்லை.  

இன்று பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரக்தி அடைந்த மக்களின் குரலாகவே விளங்குகிறார். அவர் தனி யானை போல அச்சமின்றி பாராளுமன்றில் ஏனைய அரசியல்வாதிகளுடன் முட்டி மோதுகிறார். இவரது குரலை நசுக்க அரசாங்க தரப்பில் இருந்து சில உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவர் துணிந்த தலைவராக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் குரலாக அவர்களது பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கின்றார். தனி சிங்கள அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைக்கும் வாதங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுகின்றனர். விவாதத்தில் பதில் அளிக்க முடியாமல் ஹூ சத்தமிட்டு இடையூறு ஏற்டுத்த முனைகின்றனர். அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர் தான் பல வருடங்கள் இந்த பாராளுமன்றில் உரையாற்றி உள்ளதாகவும் ஆனால் இவ்வாறான இடையூறுகளுக்கு முகங் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். அப்போது பாராளுமன்றில் தனது கருத்தை முன்வைக்க சந்தர்ப்பம் இருந்ததாக தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று ஆளும் கட்சி குண்டர்கள் சிலர் ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்டு ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தினார்.  

நாம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அனைத்து கருத்துக்களுடனும் இணங்கவில்லை. ஆனால் கருத்து வெளியிட அவருக்கு உள்ள உரிமைக்காக நாம் நிபந்தனை இன்றி ஆதரவு குரல் கொடுப்போம். மக்கள் பிரதிநிதி ஒருவர் தனது கருத்தை பாராளுமன்ற சபையில் வெளியிட முடியாது என்றால் ஜனநாயக பிரதிநிதித்துவம் சூனியமாகிவிடும். இந்த நிலைமையை அன்று ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலும் காண முடிந்தது. அன்று பிரதான எதிர்கட்சியாக செயற்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறான இடையூறுகளுக்கு முகங் கொடுக்க நேர்ந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தினர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உறுப்பினர்களை பாராளுமன்றில் இருந்து விரட்டியடித்த பின்னரே இந்நிலை முடிவுக்கு வந்தது.  

தமிழ் மக்களின் பிரநிதிநிதிகளை பாராளுமன்றில் இருந்து விரட்டியதன் அச்சுறுத்தல்..

அந்த வரலாறு மீண்டும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் பதவி ஏற்ற பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சபையில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என தெரிவித்தார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை புகழ்பாடி பாராளுமன்றில் உரையாற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். சரத் வீரசேகர என்பவர் மாகாண சபை அதிகாரம் என்ற குறைந்தளவு அதிகாரத்தை பிரிக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கும் பச்சை சிங்கள பௌத்த இனவாதி ஆவார். ஜெனீவா ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு யுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் நியாயம் கேட்டு நிற்கும் நபர்களை தேசத் துரோகிகளாக இனங்காணும் சரத் வீரசேகர அவ்வாறான நபர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பல தடவைகள் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என அச்சுறுத்தும், அந்த பிரதிநிதிகளுக்கு சபையில் கருத்து வெளியிட இடமளிக்காமல் இடையூறு ஏற்படுத்துவதன் மூலம் தனி சிங்கள பௌத்த அரசாங்கம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு விடுக்கும் செய்தி தெளிவானது. அதுதான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை சல்லிக் காசுக்கேனும் கணக்கிலெடுப்பதில்லை என்பதாகும். 2018ம் ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி பாராளுமன்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில் "வடக்கு கிழக்கு 'ஈழம்' உருவாக்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல எனவும் மஹிந்த ராஜபக்ஷவின் தாமரை மொட்டு கட்சி" எனவும் தெரிவித்தார். தற்போது அது நடந்து கொண்டு இருக்கிறது. அரசாங்கம் உண்மையான சிங்கள பௌத்தம் என்றால் பௌத்தர்கள் என்ற அடிப்படையில் மாற்றுக் கொள்கைகளுக்கு செவிமெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.ராசமாணிக்கம் பாராளுமன்ற உரையில் தெரிவித்தார். தனது உரைக்கு இடையூறுகளை ஏற்படுத்திய நபர்களைப் பார்த்தே அவர் இவ்வாறு கூறினார். அவர் சிங்கள தலைவர்களின் ஆழமான கவனத்திற்கு கொண்டு வந்ததாவது, நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு தங்களது குறைந்தபட்ச உரிமைகளை கூட அனுபவிக்க, அதாவது மரணமடைந்த உடல்களின் இறுதி சடங்குகளைக் சம்பிரதாயபூர்வதாக செய்யவும் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவும் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டினார். (அவரது உரையின் பகுதி கட்டுரை முடிவில் உள்ளது.) கடந்த மாதத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் முன்வைத்த 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது அவர்கள் எங்கு செல்வர்?

எதிர்கட்சித் தலைவரின் "நான் மல்யுத்த வீரர்"

எதிர்கட்சித் தலைவரும் பிரதான எதிர்கட்சியின் (ஐக்கிய மக்கள் சக்தி) தலைவருமான சஜித் பிரேமதாஸவிற்கு இந்த சந்தர்ப்பத்தில் விசேட பொறுப்பு உள்ளது. எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைவருக்கும் பாராளுமன்றில் சுதந்திரமாக கருத்து வெளியிட உள்ள உரிமையை பாதுகாப்பதாகும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பாராளுமன்றில் இருந்து விரட்ட வேண்டும் என கூறப்பட்ட கருத்திற்கு ஆளும் தரப்பிற்கு சரியான பதிலை அவர் வழங்க வேண்டும். அச்சுறுத்தும் அரசாங்கத்திற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் இதற்கு நம்பிக்கை தரும் பதில் அளிக்காவிட்டால் அது தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற சங்கத்திற்கு (lPU) முறையிட முடியும். விசேடமாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கப் பட வேண்டிய தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பு சஜித் பிரேமதாஸவிற்கு உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவிற்கே அதிக வாக்குகளை அளித்துள்ளனர். அந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சஜித் பிரேமதாஸவிற்கு உள்ளது.

ஆனால் இந்த பொறுப்புக்கள் அனைத்தையும் மறந்துவிட்ட சஜித் பிரேமதாஸ இறுதியில் "நான் மல்யுத்த வீரர்" என்ற பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எதிர்கட்சித் தலைவர் பதவியில் ஜொலிக்க வேண்டுமே தவிர பொறுப்புகளை உணர்ந்து சஜித் செயற்படுவதாகத் தெரியவில்லை. பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் போது ஆளும் கட்சியை நோக்கி சில கேள்விகளை எழுப்பி எதிர்கட்சியின் நேரத்தை வீணடிப்பதை அவர் பழக்கமாகக் கொண்டுள்ளார்.  

அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்கட்சித் தலைவரின் பொறுப்பு மாத்திரமே என அவர் சஜித் நினைத்துக் கொண்டிருக்கிறார். எதிர்கட்சித் தலைவர் இருப்பது அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் எதிர்கட்சியின் கருத்தை முன்வைக்கவே தவிர அனைத்து சில்லறை கேள்விகளையும் கேட்பதற்கு அல்ல. அவ்வாறு கேள்விகளைக் கேட்க எதிர்கட்சியில் உள்ள ஏனைய உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு சுயாதீனமாக செயற்பட சந்தர்ப்பம் வழங்க வேண்டும். ஆனால் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனைத்து கேள்விகளையும் அவரே எழுப்புகிறார். அது மாத்திரமன்றி தனது அனுமதி இன்றி பாராளுமன்றில் கேள்வி எழுப்ப வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு கட்டளையும் பிறப்பித்துள்ளார். இந்த கட்டுப்பாடானது முன்னர் அரசாங்கத்திற்கு எதிராக திறமையான கேள்விகளை எழுப்பும் உறுப்பினர்களை மௌனமாக்கி உள்ளது. அதனால் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் விரக்தி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை கூறி வைக்க வேண்டும். அது வெடித்து சிதறும் காலம் பிரச்சினைக்கு உரியதே.

இன்று நாம் நாடு என்ற அடிப்படையில் மீண்டும் 1970ம் ஆண்டு வடக்கு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட இனவாத தமிழ் அரசியல் பின்னணி யுகத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். அன்று அந்த நிலைமை முடிவுக்கு வந்தது பற்றி மறுபடியும் கூற வேண்டியதில்லை. எனவே குறித்த எதிர்கால அழிவை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் பாராளுன்றில் வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு செவிமெடுக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். ஹூ சத்தமிட்டு கெட்ட வார்த்தைகள் கூறி அவர்களது கருத்துகளை மூடிமறைக்க முனையக் கூடாது. இது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இரா.ராசமாணிக்கம், சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் குரல்களுக்கு செவிமெடுக்க வேண்டிய காலமாகும். அவ்வாறு இல்லையேல் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களின் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை எதிர்காலத்தில் செவிமெடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதனை தெரிவு செய்வது தெற்கின் வசமுள்ளது.

கார்ல் மாஸ்க் ஒரு தருணத்தில் கூறுகையில், "எதிர்காலம் புனர்வாழ்வு பெறும். முதலில் அது அழிவாக. இரண்டாவது அது  நகைச்சுவையாக." என்றார். துரதிஸ்டவசமாக நாம் இன்று அழிவு கட்டத்தில் உள்ளோம்.

அனுபாவனந்த

[email protected]

Watch the video 

---------------------------
by     (2020-12-21 20:27:22)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links