சந்திரபிரதீப் எழுதுவது
(லங்கா ஈ நியூஸ் - 2020 , டிசம்பர் 25, பிற்பகல் 05.45) ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அதன் பின்னணியில் இருந்த சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை மறைப்பதற்காக அப்போதைய நாட்டுத் தலைவராக செயற்பட்ட பல்லேவத்த கமராலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்பவர் வௌிநாட்டு சக்தி ஒன்றின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் என்ற 19 கோடி ரூபாவை பெற்றுக் கொண்டதாக லங்கா ஈ நியூஸ் உள்ளக செய்தி சேவைக்கு தகவல் வந்துள்ளது.
இந்த பணத்தின் இறுதி கொடுக்கல் வாங்கல் முழு தொகையுடன் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற தினத்தில் சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளதுடன் அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு நாடு திரும்ப கால தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் சிங்கப்பூரில் கொடுக்கல் வாங்கல் முடிவடையாமல் இருந்ததனால் ஆகும். இந்த கொடுக்கல் வாங்கலை மைத்திரிபால சிறிசேனவின் மருமகனான மகள் சத்துரிக்கா சிறிசேனவின் கணவரான திலின சுரஞ்சித் என தெரிய வந்துள்ளதுடன் சிங்கப்பூர் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குரூஸ் என்ற சொகுசு கப்பலில் இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களின் உண்மையான தகவல்களை திரட்டுவதை விடுத்து 'குற்றத்தை திரிபு படுத்தும் ஆணைக்குழு' ஊடாக அவற்றை மூடி மறைப்பதால் உண்மை தெரிந்த நபர்கள் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு வழங்கியுள்ளனர். அதனால் மிளேச்சத்தனமான தற்கொலை தாக்குதல்களுக்கு காரணமாகவர்கள் தொடர்பான உண்மை தகவல்களை வௌிப்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும்.
நாம் வௌியிடும் தகவல்களின் உண்மை பொய் தன்மை குறித்து ராஜபக்ஷ அரசாங்கம் ஆராய விரும்பினால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் நாம் தயாராக உள்ளோம். மைத்திரிபால சிறிசேன இந்த பணத் தொகையை யார் மூலம் மறைத்து வைத்தார் என்ற தகவலை நாம் வௌியிடுவோம்.
ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தமை மற்றும் சம்பவத்தின் கோர்ட் பாதர்களை பாதுகாக்கும் வகையில் மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்ட லஞ்ச பணம் மற்றும் மேலும் சில ஊழல்களை ஒழித்து வைத்திருக்கும் பிரதான நபர்களில் ஒருவராக 'இந்திக்க சமரசிங்க' என்ற 'ஜப்பன் இந்திக்க' நபரின் வங்கிக் கணக்கு திகழ்கிறது. ஜப்பான் இந்திக்க என்பவர் ஜப்பான் பெண் ஒருவரை திருமணம் முடித்துள்ளதுடன் மைத்திரிபால சிறிசேனவின் கருப்பு பணங்களை ஒழிப்பதற்கு ஏதுவான காரணியாக அமைந்துள்ளது. அவருக்கு ஜப்பானிலும் வங்கிக் கணக்கு உள்ளது. டுபாய் நாட்டிலும் ஜப்பான் இந்திக்கவிற்கு வங்கிக் கணக்கு உள்ளது.
மேற்கூறிய இந்திக்க சமரசிங்க என்ற ஜப்பான் இந்திக்க இலங்கையில் அதி சொகுசு ரோயல் பார்க் வீட்டு குடியிருப்பில் ஆகும்.
மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜப்பான் இந்திக்க ஆகியோருக்கு இடையில் இந்த அளவு உறவு வலுவடைய காரணம் மைத்திரிபால சிறிசேன தனது கள்ளத் தொடர்புடன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜப்பான் இந்திக்கவின் ரோயல் பார்க் வீட்டுக் குடியிருப்பில் பாதுகாப்பான வீட்டில் (Safe House) வசதி அளித்தமையாகும். சிறிசேனவின் கள்ளத் தொடர்பான பிரபல அநுராதா ஜயவிக்ரம எத்தனை தடவை ரோயல் பார்க் வந்து சென்றார் என்பதை அதி சொகுசு வீட்டில் உள்ள மெத்தை சாட்சி சொல்லும். அத்துடன் ஜப்பான் பெண்களை கூட்டிக் கொடுக்கும் வேலையையும் ஜப்பான் இந்திக்க செய்துள்ளார்.
திருட்டு வேலைகள் மூலமாக நட்பை பலப்படுத்திக் கொண்ட மைத்திரிபால சிறிசேன, இந்திக்க சமரசிங்க என்ற ஜப்பான் இந்திக்கவிற்கு கோடிக் கணக்கு பெறுமதி வாய்ந்த பொது மக்கள் சொத்தான மின்னணு அதிர்வெண்களை (Electronic frequencies) தனது அப்பா அம்மாவின் சொத்து போல இலவசமாக வழங்கியுள்ளார். சிறிசேன பதவி இழந்த பின் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷக்களை தமது கைக்குள் போட்டுக் கொள்ளும் நோக்கில் தனக்கு கிடைத்த Electronic frequencies ஒன்றை ராஜபக்ஷவின் மகன்களிடம் 20 கோடி ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்துள்ளார். இன்று சுப்ரிம் ரிவி என்று அழைக்கப்படும் அலைவரிசை அதுதான்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணைக்கு அமைச்சரவையில் இருந்து கொண்டே ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை உடன் பதவி விலக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கோரிக்கை முன்வைத்த போது ஆத்திரமடைந்த மைத்திரிபால சிறிசேன கூறிய வார்த்தைகளை இங்கு நினைவுபடுத்துவது பொறுத்தமானதாகும். "எனக்கு செல்ல நேரிட்டால் அனைத்தையும் எரித்துவிட்டே செல்வேன்" என அன்று மைத்திரிபால சிறிசேன கூறினார். அவர் சொன்னது போலவே செய்யவில்லையா?
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறவில்லை என மைத்திரிபால சிறிசேன கூறினால் இந்திக்க சமரசிங்க என்ற ஜப்பான் இந்திகவின் வங்கிக் கணக்கை சோதனை செய்து அந்த நாட்களில் வைப்பிலடப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க வேண்டும். பணம் பெற்றது யார் என்பதை விட பணம் கொடுத்தது யார் என்பது தான் நாளைய தினத்திற்கு தேவையான ஒன்றாகும்.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஒழிந்திருக்கும் பிரதான சூத்திரதாரிகள் யார் என கண்டுபிடிக்க உண்மையாக செயற்படும் நபர்களுக்கு உதவி புரியும் நோக்கிலேயே நாம் இந்த தகவல்கள் வௌிப்படுத்தி உள்ளோம். அண்மையில் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சி அளித்த தேசிய புலனாய்வு சேவை முன்னாள் பிரதானி ஏ.என்.சிசிர முக்கியமான விடயங்களை வௌிப்படுத்தியுள்ளார். "ஞாயிறு குண்டுத் தாக்குதல் பின்னணியில் இருந்து செயற்பட்ட பிரதான சூத்திரதாரிகள் யார் என கண்டுபிடிக்கும் வரை நாடு ஆபத்தில்" என அவர் சாட்சி அளித்திருந்தார். உண்மையில் இன்று கண்டுபிடிக்கப்பட வேண்டியது சஹரான் அல்ல. அவருக்கு பின்னால் இருந்து இயக்கிய பிரதான சூத்திரதாரி யார் என்பதாகும். காரணம் நாளைய தினம் அவ்வாறான தாக்குதல்களை நடத்துவதற்கு அவர்களுக்கு சிறிய காரியமாகும்.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் பின்னணியில் இருந்து செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் குறித்த தகவல்கள் லங்கா ஈ நியூஸ் உள்ளக செய்தி சேவைக்கு வந்துள்ளன. நாங்கள் குறித்த நபர்கள் தொடர்பில் எமது புலனாய்வு செய்திக் குழுக்களை வைத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். உத்தியோகபூர்வ விசாரணை சரியாக முன்னெடுக்கப்பட்டால் தேடப்பட வேண்டி தகவல்கள் மற்றும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை வௌியிட நாம் தயார்.
யாருக்கு இல்லை என்றாலும் எமது பிள்ளைகளுக்கு அமைதியான நாடு அவசியம்.
---------------------------
by (2020-12-24 23:52:06)
Leave a Reply