(லங்கா ஈ நியூஸ் 2020 டிசம்பர் 29 பிற்பகல் 12.10 ) தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகளவு விற்பனை செய்யப்படும் தமிழ் மக்களின் அதிக நம்பிக்கைக்கு பாத்திரம் ஆகியுள்ள உதயன் பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை பத்திரிகையில் பிரசுரித்ததாக கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கை யாழ் நீதவான் அடுத்த வருடம் மார்ச் மாதம் 21ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ள போதிலும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் பொலிஸாரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதயன் பத்திரிகையின் உரிமையாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஈ. சரவணபவன் தமிழ் கார்டியன் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார். ஊடகங்கள் தொடர்பான சட்ட திட்டங்கள் நாட்டு பொது மக்களின் நன்மைக்காக தயாரிக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. ஆனால் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நாட்டின் ஒரு பகுதி மக்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் சிந்தனைகள் அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை சிந்தனைகள் பாதிக்கப்படுகிறதா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அனைத்து மக்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்பக் கூடிய விடயங்கள் மிகவும் குறைவு என்ற போதிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் எண்ணங்கள் சிந்தனைகள் போன்றவை ஒரு பிரிவு மற்றும் வர்க்கத்தை அடிப்படையாக வைத்து மேல் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு சமூக கட்டமைப்பிற்கும் பொருத்தமான சமூக கலாசார பண்பாடுகள் ஒவ்வொரு மக்கள் பிரிவுக்கும் பொருத்தமான சமூக பொருளாதார கலாசார பிரச்சினைகள் போன்று அவர்களின் வாழ்க்கை மற்றும் அதனோடு தொடர்புடைய விழுமியங்கள் எதிர்பார்ப்புகள் போன்றனவும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடியன.
அந்த வரிசையில் பிரபாகரன் என்பவர் தசாப்த காலங்களாக மக்களின் பிரச்சினைகளோடு பின்னிப் பிணைந்து ஒரு மக்கள் குழுவினரின் குரலாக அவர்களுடைய பிரச்சனைகளுக்காக முன்னிற்கும் நபராக பிரபலம் பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வரும் உதயன் பத்திரிகையின் செய்தியாளர்கள் அந்தப் பகுதி மக்களின் மனோ நிலையை அறிந்து இந்த பத்திரிகையின் அதிகளவான விற்பனைக்கு ஒரு யுக்தியாக இந்த புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கலாம். 19வது நூற்றாண்டில் இங்கிலாந்தில் பத்திரிக்கை ஒன்றின் மூலமாக பிரசுரிக்கப்பட்ட உரிமைக் குரல் விடயத்தை சட்டத்தை பயன்படுத்தி முடக்க முனைந்த போதும் அந்த பத்திரிகை ஊடகவியலாளர்கள் அவ்விடத்தை சமூகப் பிரச்சனையாக வெளிப்படுத்தி அதனை சட்ட ரீதியாக அனுகியமை நினைவுபடுத்தக் கூடியது. இது தொடர்பில் தெளிவுபடுத்திய இங்கிலாந்து நீதிபதி ஒருவர் 1832 ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்து வருமாறு.
"நாம் அடிமைப்படுத்தும் அளவிற்கு அவர்கள் மேல் எழுந்து வருவார்கள். காரணம் மக்கள் இருப்பது அவர்களின் பக்கமே"
அதனால் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பகுதியும் உள்ளது. அப்படியானால் பிரபாகரனின் புகைப்படத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு வடக்கில் ஊடகவியலாளர்களை நீதிமன்றம் அழைத்துச் செல்வதன் மூலம் வட பகுதி தமிழ் மக்களின் மனங்களில் விரக்தியை ஏற்படுத்தி அதனை அடிப்படையாக வைத்து அவர்களுடைய கோபம் வலுவடைந்து அது சமூகப் பிரச்சினையாக மாறுவதற்கு இடமளிக்காமல் வடக்கில் தமிழ் மக்களின் எண்ணங்கள் சிந்தனைகள் எதிர்பார்ப்புகள் அபிலாசைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அந்த மக்களின் மன நிலையை அறிய முயற்சி செய்ய வேண்டும்.
"பிரபலமான பொது மலசல கூடத்தின் சாவியை மறைத்து வைத்திருக்கும் அளவிற்கு அதன் சுற்றுப்பகுதி மாசடைவது அதிகரிக்கும்".
---------------------------
by (2020-12-30 01:01:56)
Leave a Reply