(லங்கா ஈ நியூஸ் - 2020 ஜனவரி 03, பிற்பகல் 11.00) கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த என்ற போர்வையில் நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதான வைத்திய அதிகாரிகள் ஆகியோருக்கு மேல் சிவில் நிர்வாகம் அல்லது வைத்திய துறை நிபுணத்துவம் தொடர்பில் இவ்வித கல்வி, அனுவபம், தகுதி இல்லாத இராணுவ அதிகாரிகள் 25 பேர் 'மாவட்ட இணைப்பு அதிகாரிகள்' என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இராணுவத்தில் கேனல் என்று அழைக்கப்படும் கீழ் நிலை பதவி கொண்ட கேனல்கள் மூவரும் அடங்குவர்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது தொடக்கம் நாட்டின் பல நிர்வாாகத் துறை சார்ந்த பதவிகளுக்கு இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை நியமித்து வந்துள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாகவும் நாட்டை இராணுவ மயமாக்கும் திருப்பு முனையாகவும் இந்த மாவட்ட இணைப்பு அதிகாரிகள் நியமனம் காணப்படுகிறது. காரணம் எந்த ஒரு இராணுவ ஆட்சியின் சொரூபம் இதுவாகவே இருக்கும். சிவில் நிர்வாகத்திற்கு இராணுவம் அழைக்கப்படுவது இராணுவ ஆட்சியின் அறிகுறியாகும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள 25 இராணுவ அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள சிவில் நிர்வாக பிரதானியான மாவட்ட செயலாளருக்கு மேல் சென்று தீர்மானங்களை எடுக்கக் கூடிய அதிகாரம் கொண்டது. இராணுவ கேனல் பதவி நிலை கொண்டவரையும் மாவட்ட செயலாளர் 'சேர்' என அழைக்க வேண்டும்.
தற்போதைக்கு கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு மாத்திரம் இந்த நியமனம் என கூறுகின்ற போதும் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் அந்தந்த மாவட்டங்களில் பொருளாதார புனரமைப்பு, வறுமை ஒழிப்பு, அனர்த்த முகாமைத்துவம் போன்ற விடயங்களும் இந்த இராணுவ இணைப்பு அதிகாரிகளுக்கு கீழ் வருகிறது. அதாவது இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாகத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமற்ற தகவல் படி ஒவ்வொரு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களும் மேற் கூறிய இராணுவ அதிகாரிகளின் உத்தரவுக்கு தலை சாய்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி என்றால் பொலிஸ் துறையும் இராணுவத்திற்கு அடி பணிய வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சில அரச நிறுவனங்களை கண்காணிக்க தான்னால் நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் வழங்கிய வருடாந்த செயற்திட்ட அறிக்கையை வாசித்த பின்னரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு 25 மாவட்டங்களுக்கும் இராணுவ இணைப்பு அதிகாரிகளை நியமிக்கும் தீர்மானத்தை எடுத்ததாக தெரிய வருகிறது. அரச நிறுவனங்களுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் போது பொது மக்கள் அதனை பெருமையாக பேசுகின்ற போதும் ஒரு வருடம் சென்ற பின்னர் இராணுவ அதிகாரிகள் முற்றிலும் சாத்தியம் அற்றவர்கள் என திட்டுவர். அதற்கு சிறந்த உதாரணம் அரிசி விலையை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்டட இராணுவ அதிகாரி அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேனவிடம் தோல்வி கண்ட விடயமாகும். மற்றுமொரு பெரிய உதாரணம் துறைமுக அதிகார சபையின் தலைவரா முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டு துறைமுக நடவடிக்கைகள் முற்றிலுமாக வீழ்ச்சியை கண்ட விடயமாகும். அதனால் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் மூன்றில் இரண்டு பங்கு வீழ்ச்சியை சந்தித்தது.
இவ்வாறான பின்னணியில் நாட்டின் சிவில் நிர்வாகத்திற்கு மேல் சென்று தீர்மானங்கள் முடிவுகளை எடுப்பதற்கு இராணுவ அதிகாரிகளை நியமிப்பது நாட்டை மேலும் படு பாதாளத்தில் தள்ளும் செயல் என்பது மாத்திரம் உறுதியாகக் கூறக் கூடியது.
உண்மையில் இந்த நியமனங்களின் பின்னர் நாட்டில் தொடர்ந்து ஆரோக்கியமான சிவில் நிர்வாகம் இல்லை. இப்போது இருப்பது முழுமையான இராணுவ ஆட்சி. இதனை மக்கள் விளங்கிக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இது விரைவில் புரியும். 20ம் திருத்தச் சட்டத்திற்கு கை உயர்த்தியதன்பிரதிபலன்களை அவர்கள் அன்று உணர்வர்.
வட மாகாணம்
மேஜர் ஜெனரல் டபிள்யு.ஜி.எச்.ஏ.எஸ். பண்டார- யாழ்ப்பாணம், மேஜர் ஜெனரல் கே.என்.எஸ் கொட்டுவேகோடா - கிளிநொச்சி, மேஜர் ஜெனரல் ஆர்.எம்.பி.ஜி ரத்நாயக்க - முல்லைதீவு, மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.பி.டபிள்யூ பெரேரா - வவுனியா, மேஜர் ஜெனரல் டபிள்யு. பண்டார - மன்னார்
வட மத்திய மாகாணம்
மேஜர் ஜெனரல் ஜே.சி. கமகே என்.டி.சி பி.எஸ்.சி - பொலன்னறுவை, மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியானகே ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு - அனுராதபுரம்,
வட மேல் மாகாணம்
மேஜர் ஜெனரல் ஏ.பி.ஐ பெர்னாண்டோ - புத்தளம்,
பிரிகேடியர் பி.எம்.ஆர்.எச்.எஸ்.கே ஹெராத் - குருநாகல்
மேல் மாகாணம்
மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ.ஆர் டி அப்ரூ - கொழும்பு,
மேஜர் ஜெனரல் என்.ஆர்.லமாஹேவா - கம்பாஹா, பிரிகேடியர் கே.என்.டி கருணபால - களுத்துறை
மத்திய மாகாணம்
மேஜர் ஜெனரல் ஹெச்.பி.என்.கே.ஜெயபதிரண - நுவரெலியா, மேஜர் ஜெனரல் எஸ்.எம்.எஸ்.பி சமரகோன் - கண்டி, மேஜர் ஜெனரல் எம்.என். மானகே - மாத்தளை
சபரகமுவ மாகாணம்
பிரிகேடியர் ஜே.எம்.ஆர்.என்.கே ஜெயமன்னே - இரத்தினபுரி, பிரிகேடியர் எல் எ ஜே எல் பி உதோவிய - கேகாலை
கிழக்கு மாகாணம்
மேஜர் ஜெனரல் சி.டி வீரசூரிய - திருகோணமலை,
மேஜர் ஜெனரல் டி.டி. வீரகோன் - அம்பாறை, மேஜர் ஜெனரல் சி.டி ரணசிங்க - மட்டக்களப்பு
ஊவா மாகாணம்
பிரிகேடியர் ஈ.ஏ.பி எதிரிவீர - பதுளை, கர்னல் டி.யூ.என்.சரசிங்க - மொனராகலை
தென் மாகாணம்
மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டாரா - ஹம்பாந்தோட்ட,
மேஜர் ஜெனரல் எஸ்.எஸ். வனசிங்க - காலி,
கர்னல் கே.ஏ கொடிதுவக்கு - மாத்தறை
---------------------------
by (2021-01-03 20:52:21)
Leave a Reply