~

நந்தசேன ஜனாதிபதி ஆசனத்தில் சிறுநீர் கழித்த விதம்..! (Video)

எழுதுவது விமல் தீரசேகர

(லங்கா ஈ நியூஸ் - 2020 ஜனவரி, 10 முற்பகல் 10.15) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ பாராளுமன்றில் வைத்து தனது செயற்பாடுகளை விமர்சனம் செய்ததால் ஆத்திரம் அடைந்த ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ தான் ஒரு பலியெடுக்கும் கொலைகாரன் எனவும் பிரபாகரனை கொன்றது போல நாயை கொல்வது போல் ஹரேன் பெனாண்டோவையும் கொலை செய்ய தன்னால் முடியும் என அறிவித்து பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உலகத்தில் ஜனநாயக வழியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த எந்த ஒரு தலைவரையும் ஜனாதிபதியையும் ஒழுக்கத்தை விரும்பும் மக்கள் எதிர் பார்க்காத கேடுகெட்ட சம்பவமாக பதியப்பட்டுள்ளதுடன் 9ம் திகதி அம்பாறையில் உலக மக்கள் அனைவரும் அதனை கண்டு கொண்டனர்.

உண்மையில் நந்தசேன செய்து கொண்டது அதி உன்னத கௌரமிக்க ஜனாதிபதி ஆசனத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டமையாகும்.

ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அந்த அளவு ஆத்திரமடையும் விதமாக ஹரேன் பெனாண்டோ ஆற்றிய உரையின் சில பகுதிகள் கிழுள்ள வீடியோவில் காணப்படுகிறது. அதனால் அவற்றை மீண்டும் இங்கு எழுதி பதிவு செய்வதற்கு காலத்தை வீணடிக்க விரும்பவில்லை.

நந்தசேனவின் 'ஹிப்னாசிஸ்வாதம்'..

ஜனாதிபதி முதலில் ஆத்தரம் அடைந்தது ஹரேன் பெனாண்டோ தன்னை 'நந்தசேன' என்ற பெயர் கொண்டு அழைத்தமையால் ஆகும். ஹரேன் பெனாண்டோ அந்த பெயர் கொண்டு தொடர்ந்து அழைக்கவில்லை. வார்த்தை பிரயோக சந்தர்ப்பத்திற்காக இரண்டு தடவைகள் அந்த பெயர் கொண்டு அழைத்தார். ஆனால் தனது பெற்றோர் தனக்கு வைத்த பெயர் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ என்றால் நந்தசேன என்று அழைத்தமைக்காக கோட்டாபய ஆத்திரப்பட வேண்டியது ஹரேன் பெனாண்டோ மீது அல்ல. மாறான தனக்கு அந்த பெயரை சூட்டிய, அரசாங்கத்தின் 8 கோடி ரூபா பணத்தை பயன்படுத்தி சொகுசு கல்லறை அமைத்த தனது தந்தையான தொன் அல்விஸ் ராஜபக்ஷவுடனும் தனது தாயாரான நந்தினா சமரசிங்க திஸாநாயக்கவுடனும் முதலில் ஆத்திரமடைய வேண்டும். பெற்றோர் வைத்த பெயரில் ஒரு அங்கத்தை கூறி தன்னை அழைக்கும் நபர்களை கொலை செய்யும் அளவுக்கு கோபம் வருகிறதென்றால் நிச்சயமாக அந்த நபருக்கு 'ஹிப்நாசிஸ்' என்ற ஒரு வகை மன நோய் இருப்பதன் அறிகுறியாகும். எனவே அவ்வாறான மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இருக்க வேண்டியது ஜனாதிபதி ஆசனத்தில் அல்ல. மனநல சிகிச்சை நிலையமான பைத்தியக்காரர்கள் கூடத்திலாகும்.

ஜுனியஸ் ரிச்சர் என்பவரை இலங்கையில் 'ஜே ஆர்' என அழைப்பர். பர்சி மஹேந்திர ராஜபக்ஷவை அவரது எதிராளிகள் 'மரா' என அழைப்பர். முதல் நபரின் பெயரில் உள்ள ஆங்கில முதல் எழுத்துக்களையும் இரண்டாம் நபரின் பெயரில் உள்ள சிங்கள முதல் எழுத்துக்களையும் கொண்டு சுருக்கப் பெயரால் அழைப்பர். ஆனால் இவர்கள் இருவரும் தனது பெயரை சுருக்கி அழைத்து விட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்களையோ ஏனையவர்களையோ நாயை போல் கொன்று விடுவேன் என அச்சுறுத்தல் விடுக்கவில்லை. அது மட்டுமல்லாது அரசியல் வாதிகளை அவர்களுது எதிராளிகள் எவ்வளவோ பட்டப் பெயர் கொண்டு அழைத்த வரலாறும் நிகழ்கால சம்பவங்களும் எண்ணிக்கையில் அடங்காதவை. ஆனால் எவரும் நந்தசேன போன்று ஆத்திரம் அடையவில்லை. எனவே உடனடியாக நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியை மனநல வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்ல அவரது நெருங்கிய உறவினர்கள் அல்லது நெருங்கி பழகும் நண்பர்கள் நடவடிக்கை எடுக்கா விட்டால் நந்தசேன பாரிய ஆபத்துக்கு முகங்கொடுப்பார் என்பது நிச்சயமே.

நந்தசேனவிற்கு 'இரு முகங்கள்' உள்ளதா. ? உண்மை முகமே அதுவா.. ?

அடுத்தது நந்தசேன கோட்டாபயவிற்கு உள்ள மற்றுமொரு பாரிய மன நோயானது அவரது வார்த்தைகளால் அவரே கூறுவது போன்று தனக்குள் இரண்டு உருவங்கள் வசிப்பதாகக் கூறியுள்ளார். வைத்திய துறையில் அதனை Bilateral என அழைப்பர். அதாவது ஒருவர் இருவராக மாறும் மன நோய். தமிழ் சினிமாவில் அந்நியன், சந்திரமுகி போன்ற படங்களில் இதனை நன்கு பார்த்திருப்பீர்கள். நந்தசேனவே கூறுவதால் இதுவும் பாரிய மன நோய் ஆகும். ஆனால் அரசியல் விமர்சகர்கள் என்ற அடிப்படையில் எங்களது கருத்து நந்தசேனவிற்கு இரண்டு உருவங்கள் இல்லை. இருப்பது ஒரே ஒரு கொலைக்கார காட்டுமிராண்டித்தன உருவமாகும். இதனை பாதுகாப்பு செயலாளராக இருந்த போது நந்தசேன நன்கு வௌிப்படுத்தி உள்ளார். சர்வதேச அளவிலும் அவர் அதனை படம் போட்டுக் காட்டியுள்ளார். அதற்கு சிறந்த உதாரணம், பிபிசி சர்வதேச ஊடக சேவை ஊடகவியலாளர் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவை நேர்காணல் செய்யும் போது யுத்தத்தை வென்ற சரத் பொன்சேகா தொடர்பில் கூறுகையில் 'ஐ வில் ஹெங் ஹிம்' 'நான் அவரை தூக்கில் போடுவேன்' என்று கடும் ஆத்திரத்துடன் முகம் சிவக்க கமராவிற்கு முன்னாள் சத்தமிட்டு பேசினார். சாதாரண மன நிலையில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு நடத்து கொள்ள மாட்டார்.    

ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நந்தசேன தன்து உண்மையான சுயரூபத்தை மறைத்துக் கொண்டு சீன இராணுவ அரசியல் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய தேவையான சந்தர்ப்பத்திலும் தேவையற்ற சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரியாக ஹீ ஹீ.. என்று சிரித்துக் கொண்டு மாற்று சுயரூபம் ஒன்றை காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ நந்தசேனவின் அந்த போலி முகத் திரையை கடந்த 6ம் திகதி பாராளுமன்றில் வைத்து கழட்டி எறிந்துள்ளார். எனவே அம்பாறையில் வைத்து நந்தசேன கோட்டாபய தனது உண்மையான சுயரூபத்தை வௌிப்படுத்தி உள்ளாரே தவிர அவருக்கு இன்னொரு சுயரூபம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை.

'என் மீது குண்டு வைத்ததால் நான் பிரபாகரனை நாய் போன்று கொன்றேன்'

மற்றுமொரு பக்கம் நந்தசேன கோட்டாபய தெரிவித்துள்ளதாவது, பித்தளை சந்தியில் வைத்து தன் மீது பிரபாகரன் குண்டு தாக்குதல் நடத்தியதால் பிரபாகரனை தான் ஒரு நாய் போல கொன்றதாகக் கூறியுள்ளார். இந்த கருத்தும் நந்தசேனவால் அவரே மனதில் உருவாக்கிக் கொண்ட ஒன்றாகும். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் இணைந்து நடத்தி ஊடக சந்திப்பில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ யுத்தத்திற்கு தலைமை வகித்தது தானோ அல்லது தனது சகோதரனோ கிடையாது எனவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே தலைமை வகித்ததாகவும் கூறினார். அன்று அவ்வாறு கூறிய நந்தசேன கோட்டாபய இன்று பிரபாகரனை தானே நாய் போல கொன்றதாகக் கூறுகிறார். அதுவும் தனத்து குண்டு வைத்த காரணத்தால் பலிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.    

ஆனால் நான்காவதும் மற்றும் இறுதியானதுமான ஈழ யுத்தம் ஆரம்பமானது பிரபாகரன் ஒஸ்லோ அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியதும் அத்துடன் மாவில்லாறு அணையை மூடியதன் காரணமாக என்பதை இந்த நாட்டில் அறியாதவர்கள் யார்? 2006ம் ஆண்டு ஜுலை மாதம் 21ம் திகதி மாவில்லாறு அணை மூடப்பட்டது. இராணுவ தலைமையகத்தில் வைத்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு அதில் உயிர் தப்பிய அவர் தாக்குதல் நடத்தப்பட்டு 5 நாட்களில் அதாவது ஜூலை 26ம் திகதி கடமைக்குத் திரும்பினார். அன்றைய தினமே நான்காம் கட்ட ஈழ யுத்தம் மீள ஆரம்பிக்கப்பட்டு மாவில்லாறுவை மீட்டு எடுக்கும் நோக்கில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் தந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பித்தல சந்தியில் வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை நான்காம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு சரியா 5 மாதங்களின் பின்னராகும். அதாவது 2006ம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதியாகும். (அந்த குண்டுத் தாக்குதல் புலிகள் நடத்தியது அல்ல எனவும் நந்தசேன தன்னை பிரபல்யப்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்து கொண்டது என்பதற்கான வாத விவாதங்கள் தர்க்கங்கள் பல உள்ளன.)  

உண்மை அவ்வாறி இருக்கையில் 'தன் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதால் பிரபாகரனை நாய் போல் கொன்றேன்' என ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார் என்றால் அவருக்கு நிச்சயம் கடுமையான மன நோய் உள்ளது. அப்படி என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி தனது ஒரு கண்ணை இழந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எவ்வாறு கூற வேண்டும்..?  காரணம் இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் பயன்படுத்திய ஆயுதங்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவை சந்திரிக்கா காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டவை என அப்போதைய இராணுவத் தளபதியே கூறி இருந்தார். சந்திரிக்காவிற்கு நந்தசேனவை போல மன நோய் இல்லாத காரணத்தால் அவர் ஜனாதிபதிக்கு பொறுத்தமான கருத்துக்களை வௌியிட்டார். இன்றும் வௌியிடுகிறார்.

கையாலாகாத சண்டியர் நந்தசேன மற்றும் உண்மையான சண்டியர் மஹிந்த..

உண்மையில் நந்தசேன போன்று கையாலாகாத சண்டியர்கள் கிராமங்களில் வேண்டிய அளவு உள்ளனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ நந்தசேன போன்று கையாலாகாத சண்டியர் கிடையாது. அதனை அவர் செயற்பாட்டில் நிரூபித்துக் காட்டியுள்ளார். அது தொடர்பான சாட்சியை எழுத்தாளர் நினைவுபடுத்துகிறார். 1973 அல்லது 1974ம் ஆண்டாக இருக்கக் கூடும். ஓவல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்ஸ்டன் - இசிபத்தன பாடசாலை கிரிக்கெட் இறுதிப் போட்டி முடிவில் ஏற்பட்ட கைகலப்பில் நன்கு உயர்ந்த தடித்த அப்போது பெயர் போன பொலிஸ் அதிகாரியான இன்ஸ்பெக்டர் கபூர் என்ற கட்டுடல் கொண்ட அதிகாரி மீது தாக்குதல் நடத்தினார். வாழை மரம் சாய்வது போல உயர்ந்த பருமன் கொண்ட பொலிஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் கபூர் அவ்விடத்தில் சரிந்து விழுந்தார். தாக்குதல் நடத்திய உயர்ந்த தடித்த பழைய மாணவரை கைது செய்வதற்கு பதிலாக சில பொலிஸ் அதிகாரிகள் அவரை காப்பாற்றி அழைத்துச் சென்றனர். இந்த தகவலை தௌிவாக அறிந்து கொள்ளக்கூடிய வயதினை எட்டாத எழுத்தாளர் மறுநாள் ஆராய்ந்து பார்த்த போது பொலிஸ் அதிகாரி கீழே விழும் அளவிற்கு தாக்குதல் நடத்தியது அப்போதைய இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பர்சி மஹிந்த ராஜபக்ஷ என்பதை அறிந்து கொண்டார். இந்த எழுத்தாளர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த முதல் நாளும் அதுவே ஆகும்.  

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரிடம் கன்னத்தில் அடி வாங்கியவர்கள் அதிகம் உள்ளனர். அதில் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, பஸ் கெமுனு விஜேரட்ன, மறைந்த லொக்கு அத்துல உள்ளிட்டவர்கள் அடங்குவர். தனியாக அறைக்குள் அழைத்துச் சென்று கன்னத்தில் தாக்குதல் நடத்தி பின்னர் தோளில் கையிட்டு எதுவுமே நடக்காதது போல வெளியில் அழைத்து வரும் கைங்கரியத்தை மஹிந்த கையாள்வார். மஹிந்த ராஜபக்ஷ இளம் பராயத்தில் இருந்த சண்டித் தனத்தை அரசியலுக்கு வந்த பின் தன்னை பதப்படுத்திக் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டார். சண்டித்தனத்தை பயன்படுத்தும் வழி முறையையும் மாற்றிக் கொண்டார். ஜனாதிபதி மற்றும் பிரதமாராக பதவி வகித்து ஒருநாளும் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக கொலை அறிக்கை விடுத்து தனது முகத்திரையை தானே கிழித்துக் கொள்ளவில்லை. ஆனால் நந்தசேன அதனை செய்து கொண்டார்.  

நந்தசேனவின் முட்டாள்தனமான கொலை சண்டியர் செயல்..

நந்தசேன மஹிந்த போன்று அல்ல. அமெரிக்காவில் ஒழிந்திருந்த நந்தசேன தனது சகோதரர் ஜனாதிபதியாக வந்த பின் பாதுகாப்பு செயலாளராக பதவி பெற்று அநீதியை கையிலெடுத்து குண்டல் குழுவை உருவாக்கி தனது எதிராளிகளை கொலை செய்தார். அந்த கொலைகள் யுத்தத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு கொண்டவை அல்ல என்பதுடன் தனது ஆத்திர குணத்தின் வௌிப்பாடாக அவை அமைந்தன. அதற்கு சிறந்த உதாரணம் யுத்தம் முடிவுக்கு வந்த பின் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேராத கிறிஸ்தவ மதகுரு உள்ளிட்டவர்களை காணாமல் போகச் செய்தார். யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற இந்த கேடுகெட்ட யுத்தக் குற்றச்சாட்டில் இருந்து இலங்கை ஒருபோதும் தப்பிக்க முடியாது.

அது மாத்திரமன்றி ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்றவர்களின் கொலை, உபாலி தென்னகோன், கீத் நோயர் போன்ற ஊடகவியலாளர்கள் மீதான கொலை வெறித் தாக்குதல் லங்கா ஈ நியூஸ் போன்ற ஊடக நிறுவனங்கள் மீது தீ வைத்தல் போன்ற முட்டாள்தனமான செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பது நந்தசேனவே.  

லசந்தவின் சவப்பெட்டியை எடுத்து சடலத்தை இழுத்து வீதியில் போடவும்

நந்தசேன அம்பாறையில் தெரிவித்த மனநிலை பாதிக்கப்பட்ட கருத்தும் லசந்தவின் கொலை நடந்து 12 வருடங்கள் பூர்த்தியாகும் தருணத்திலாகும்.

லசந்தவின் கொலை நந்தசேனவின் திரிபுபட்ட மனநிலைக்கு சிறந்த உதாரணமாகும். உதயங்க வீரதுங்கவுடன் இணைந்து நந்தசேன முன்னெடுத்த மிக் விமான கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான ஆவணங்கள் லசந்த விக்ரமதுங்கவிடம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பில் ஏற்பட்ட ஆத்திரத்தால் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார் என்பதை அறியாதவர்கள் உள்ளார்களா? லசந்த விக்ரமதுங்க வௌியிட்ட சில ஆவணங்கள் நீதிமன்றில் நிரூபிக்க முடியாதவையாக சில இருந்த போதும் லசந்தவை கொலை செய்தது நந்தசேனவின் மன நிலையில் உள்ள கோளாறு காரணமாகும். அதற்கு அபூர்வமான சாட்சி உள்ளது. லசந்தவின் இறுதிக் கிரிகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அவரது சடலத்தை சுமந்த சவப்பெட்டியுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பொரளை கனத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது நந்தசேன தெரிவித்த கருத்தாகும். கடுவெல பிரதேச அரசியல்வாதி ஒருவரிடம் " ஆய்சே, ..... அடியாட்களுடன் சென்று அந்த லசந்தவின் சவப் பெட்டியை பறித்து அவனது சடலத்தை இழுத்து வீதியில் வீச உனக்கு முடியாதா..?' என்று கேட்டுள்ளார். மேற்கூறிய பிரதேச அரசியல்வாதி இன்னும் உயிருடன் இருப்பதால் அவரது பெயரை வௌியிட முடியாது. ஆனால் இந்த கதை உண்மையானது. இதன் ஊடாக நந்தசேனவின் கொடுமையயான மன நிலையை விளங்கிக் கொள்ள முடியும்.

வாயை திறக்கும் போது கண்ணை மூடும் முதலை..

எனினும் அம்பாறையில் உரையாற்றிய நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு பாதுகாப்பு செயலாளராக இருந்த போது செய்ததை ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டும் செய்ய முடியும் என கூறினார். ஆனால் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் செய்த முட்டாள் தனமான கேடுகெட்ட செயற்பாடுகளால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இரண்டு வருடங்கள் அதிகாரம் இருக்க முன்கூட்டியே வீடு செல்ல நேர்ந்தது மாத்திரம் அல்லாது நாட்டு மக்களுக்கு இரத்த ஆறும் நாட்டுக்கு பாரிய பின்னடைவும் ஏற்பட்டது. பாதுகாப்பு செயலாளர் காலத்தில் செய்த செயற்பாடுகளால் தனது அண்ணனுக்கு ஜனாதிபதி பதவியில் இருந்து வீடு செல்ல நேர்ந்தது என்றால் ஜனாதிபதியான பின்னரும் அதனையே செய்தால் வீட்டுக்கு அல்ல தனக்கு 6 அடி நிலத்திற்கு கீழ் செல்ல நேரிடும் என்பதை ஜனாதிபதி நந்தசேன தெரிந்து கொள்ள வேண்டும்.

அம்பாறையில் தெரிவித்த கருத்தினால் தற்போது சிக்கலில் விழுந்திருப்பது நந்தசேன ஜனாதிபதியே தவிர ஹரேன் பெனாண்டோ அல்ல. ஹரேன் பெனாண்டோவின் வேறு யாரேனும் எதிராளிகள் ஏதேனும் ஒரு ஆபத்தை ஏற்படுத்தினால் அதற்கு முழு பொறுப்பையும் ஜனாதிபதி ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். உலக அரசியலின் நகர்வு எவ்வாறு இருக்கும் என்பதை ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் முன்னேறி வந்த நந்தசேனவிற்கு நன்கு தெரியும். அதனால் நந்தசேன ஜனாதிபதி உடனடியாக ஹரேன் பெனாண்டோவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அது ஹரேன் மீதுள்ள அன்புக்காக அல்ல மாறான தனது வாயால் தனக்கு ஏற்படுத்திக் கொண்ட மிகப் பெரிய ஆபத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவாகும்.

இறுதியாக வாய் திறக்கும் போது கண்ணை மூடும் முதலை போல கையாலாகாத நந்தசேன போன்ற சண்டியர்கள் கிராமத்தில் வேண்டிய அளவு உள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் தெரியாத சிறியவர்களின் கத்திக் குத்துக்கு இலக்காகி பரலோகம் சென்று விடுவர்.  

விமல் தீரசேகர

Watch the Video 

---------------------------
by     (2021-01-10 18:10:48)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links