~

முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சந்தேகத்திற்கு இடமான சடலம் மீட்பு..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 20 பிற்பகல் 05.10) தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் எரியுண்ட சடலம் ஒன்று புத்தளம் - ரத்மல்யா - மொஹமதியா மஸ்ஜீன் என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் இருந்து இன்று (20) பகல் மீட்கப்பட்டுள்ளது.

செய்தியை பரப்பியுள்ள நபர்கள் கூறும் தகவல் படி உயிரிழந்த நபர் நுஷாத் மின்ஹாட் என்ற 27 வயதுடைய இளைஞர் ஆவார். இவர் தம்பபன்னி - மானல்குண்டு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரது பெற்றோர் அங்கு வசிக்கின்றனர். இவரது தந்தையின் பெயர் நௌசாத் எனவும் பழைய ஆடைகள் விற்பனை செய்வது தொழில் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நபரின் குடும்பம் ஒரு காலத்தில் மன்னாரில் இருந்து பின் புத்தளத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அலுமினியம் பிட்டிங்ஸ் வியாபாரம் செய்யும் நபர் ஒருவரிடம் கூலி வேலை செய்து வந்த மின்ஹாத் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மின்ஹாத் இதற்கு முன்னரும் ஒரு தடவை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர் எனவும் அவர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீட்கப்பட்டுள்ள ரத்மல்யா - மொஹமதியா மஸ்ஜீன் என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் குறித்த நபர் இதற்கு முன்னர் ஒரு தடவை வந்துள்ளதாகவும் இரண்டாவது முறை வந்தபோதே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் செய்தியை பரப்பும் நபர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களும் எரியுண்ட சடலத்தின் புகைப்படமும் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைத்துள்ளது.

மரணத்தில் சந்தேகம்...

சடலம் காணப்படும் பள்ளிவாசல் புகைப்படத்தை பார்க்கும் போது குறித்த இடத்தில் ஒருவர் தீ வைத்துக் கொண்டதற்கான அடையாளங்கள் இல்லை. வேறு இடத்தில் எரியுண்ட சடலத்தை பள்ளிவாசலுக்குள் கொண்டுவந்து போட்டுள்ளதாக புகைப்படத்தில் தெரிகிறது.

மற்றுமொரு சந்தேகத்திற்கு இடமான விடயம் உயிரிழந்த சந்தேகநபரின் பூரண தகவல்கள் விரைவில் பரப்பிவிடப்பட்டுள்ளமையாகும். உயிரிழந்து சில மணித்தியாலங்களில் அனைத்து தகவல்களும் வௌிவந்துள்ளன.

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் சடலங்களை புதைக்க அனுமதி அளிக்காது பலாத்காரமாக எரிக்கும் விடயத்தை அடிப்படையாக வைத்து இந்த தற்கொலை இடம்பெற்றிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத் தொடரின் போது கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை பலாத்காரமான எரிக்கும் இலங்கையின் நடவடிக்கை குறித்து எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படும் போது "இலங்கையில் முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் முஸ்லிம் நபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என தெரிவித்து அரசாங்கத்தால் சாட்சியுடன் விடயத்தை சமாளிக்க முடியும்.

இதற்கு முன்னரும் சந்தேகத்திற்கு இடமான தற்கொலை மரணங்கள்..

எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சந்தேகத்திற்கு இடமான இரண்டு தற்கொலை மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒன்று சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ஊடகவியலாளரின் மரணம். தற்கொலை செய்ய பயன்படுத்தி துப்பாக்கி சடலத்திற்கு அடியில் காணப்பட்டமை சந்தேகத்திற்கு பிரதான காரணம். இறப்பதற்கு முன் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவு கையொப்பம் இன்றி காணப்பட்டுள்ளது. இவைகள் அந்த மரணத்தில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.  
 
இரண்டாவது மரணம் ரத்கம களப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொல்கஸ்துவ ஆரன்னிய மடத்தில் இருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தேரரின் மரணம். இது தற்கொலை என நிரூபிக்க கால்கள் இரண்டில் கொங்கிரீட் தூண்கள் கட்டப்பட்டிருந்தன. தேரர் தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்ய முயற்சித்த போதும் அதற்கான உறுதியான சாட்சிகள் இல்லை. மரணம் சந்தேகத்திற்கு இடமானது என்பதையே தேரரை சுற்றி இருந்த பலரும் கூறுகின்றனர்.

அதேபோன்ற சந்தேகத்திற்கு இடமான மூன்றாவது தற்கொலை மரணமே இது.

அலுவலக செய்தியாளர்

---------------------------
by     (2021-01-20 17:48:39)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links