~

சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமை அலுவலகத்தில் கொரோனா கொத்தணி..! நிர்வாகிகள் தூக்கம்...!

(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 20 பிற்பகல் 05.15) சிவில் பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் (மொரட்டுவ) தற்போதைக்கு 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். இந்நிலை ஏற்பட காரணம் நிர்வாகிகளின் கவனயீனமாகும். சம்பவத்தின் ஆரம்பம் இதோ.

சிவில் பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு இலங்கையில் பல பாகங்களிலும் கடமையில் ஈடுபட்டுள்ள சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் வருகை தருவது வழக்கம். அவர்கள் மொரட்டுவ தலைமை அலுவலக தங்குமிடத்தில் இருந்து தமது கடமைகளை நிறைவேற்றிக் கொள்வர்.

இந்த சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சிலருக்கு 2021ம் ஆண்டு ஜனவரி 4ம் மற்றும் 5ம் திகதிகளில் இருந்து காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்ட போதும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் உயர் அதிகாரிகளான செயற்திட்டப் பணிப்பாளர் கர்னல் ரத்னசிங்க மற்றும் தலைமையக கட்டளையிடும் அதிகாரி மேஜர் வீரகோன் ஆகியோருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் இது குறித்து எவ்வித பொறுப்பான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் காய்ச்சல் காணப்படும் சிவில் பாதுகாப்பு படையினருக்கு பரிசிட்டமோல் அருந்துமாரு ஆசோலனை வழங்கியுள்ளனர்.

2021ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் செல்லும் சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸுக்கு மிஹிந்தளையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வுக்கு தடை ஏற்படும் என்பதால் மேற்கூறிய அதிகாரிகள் கண்டும் காணாதது ம் போல செயற்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் ஒரு சிவில் பாதுகாப்பு படை வீரருக்கு காய்ச்சல் அதிகமான காரணத்தால் லுனாவ பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் மருந்து பெற்றுக் கொடுத்துனர். ஆனால் கொரோனா சந்தேகத்தை தேடிப் பார்க்கவில்லை. 201ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் சிலருக்கு காய்ச்சல் அதிகரித்த காரணத்தால் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்ன மற்றும் மாவட்ட அதிகாரி யொஹான் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அதன்போது 8 சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமை அலுவலகத்தில் கொரோனா அச்சம் இருக்கும் நிலையில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரல் ஆனந்த பீரிஸின் பிரியா விடை நிகழ்வு மிஹிந்தளையில் நடத்தப்பட்டு சுமார் 500 சிவில் பாதுகாப்பு படையினர் அதில் கலந்து கொண்டனர். மொரட்டுவ தலைமையகத்தில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர். இவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்ட பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் ஆவர். எனவே ஒட்டு மொத்த சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவலை ஏற்படுத்தும் திட்டமா என்ற சந்தேகம் இதன் ஊடாக எழுந்துள்ளது.

'காரமான பானம் மற்றும் கடித்தல் உணவு'

பணிப்பளார் நாயகம் ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸின் பிரியாவிடை நிகழ்வில் ஏற்பாட்டு குழுக்கள் மத்தியில் 'காரமான பானம் மற்றும் கடித்தல் உணவு' எனும் குழுவொன்று உருவாக்கி இரவில் மதுபான விருந்தும் நடத்தப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு படையினரின் செலவில் இந்த விருந்து இடம்பெற்றுள்ளது. (சிவில் பாதுகாப்பு திணைக்கள அனைத்து கட்டளை அதிகாரிகளுக்கும் நடத்தப்படும் கூட்டம் இறுதியில் மது விருந்துடன் நிறைவு பெறுவது வழக்கம். இதற்கு சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தின் பணம் செலவிடப்படும்.)

2021ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி இரவு இவ்வாறு சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் குடிபோதையுடன் விருந்து நடத்திய நிலையில் மறுநாள் 10ம் திகதி காலை விடியும் போது மொரட்டுவ சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமை அலுவலகத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிசீஆர் பரிசோதனைியில் இது உறுதியானது.

செனிடைஸர் சவக்கார துண்டுகூட இல்லை...

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். காரணம் சிவில் பாதுகாப்பு திணைக்கள மொரட்டுவ தலைமையகத்தில் கொரோனா சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதன் செயற்திட்ட பணிப்பாளர் கர்னல் ரத்னசிங்க மற்றும் கட்டளை அதிகாரி மேஜர் வீரகோன் ஆகியோர் தவறி விட்டனர். கை கழுவுவதற்கு செனிடைஸர் அல்லது ஒரு துண்டி சவக்காரம் கூட வழங்கவில்லை.

சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு செனிடைஸர் மற்றும் சவக்காரம் கொள்வனவு செய்து கொடுக்காத செயற்திட்ட அதிகாரி கர்னல் ரத்னசிங்க மற்றும் கட்டளை அதிகாரி மேஜர் வீரகோன் ஆகியோர் சாப்பிட முடியாத உணவுகளை வழங்கி அதற்கு ஒதுக்கும் பணத்தை கொள்ளையிடும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான வீண் செலவுகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட்டுள்ள இவர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸின் மனைவிக்கு 2021ம் ஆண்டு ஜனவரி 14ம் திகதி கொழும்ப ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணத்தில் விருந்து வைத்துள்ளனர்.

ஊழல்வாதிகளுக்கு கொண்டாட்டம்...

நிர்வாக செயற்திட்ட பொறுப்பாளர் கர்னல் ரத்னசிங்க நீண்ட காலம் சிவில் பாதுகாப்பு படை திணைக்களத்தில் பணியாற்றி அங்கிருந்து நீக்கப்பட்டவர் ஆவார். எனினும் பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸின் விருப்பத்திற்கு அமைய மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்ட ரத்னசிங்க நிர்வாக பொறுப்பு மற்றும் ஊடக பொறுப்பாளராக (நிர்வாக பொறுப்பின் கீழ் சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான உணவு கொடுப்பனவு மூலம் நன்கு பணக்கொள்ளை இடலாம்) நியமிக்கப்பட்டார். இவர் சிவில் பாதுகாப்பு படை வீரர்களை கெட்ட வார்த்தையில் திட்டி அவர்களை கேவலமாக நடத்தி அகௌரவப்படுத்தும் இராணுவ அதிகாரி ஆவார்.
 
இவ்வாறான ஊழல் மிகுந்த இராணுவ அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

விசேட எழுத்தாளர்.

---------------------------
by     (2021-01-20 17:54:30)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links