~

இலங்கை கடற்படை கூறியது பொய்..! இந்திய மீனவர்கள் துப்பாக்கிச்சூட்டில் மரணம்..! இதோ துப்பாக்கிசூடுகள்...!

-எழுதுவது கீர்த்தி ரத்நாயக்க

(லங்கா ஈ நியூஸ் - 2020, ஜனவரி, 22, பிற்பகல் 08.00) வடக்கு கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகை சோதனை செய்யச் சென்ற போது இந்திய மீன்பிடி படகுடன் இலங்கை கற்படையின் அதிவேக படகு மோதி விபத்து ஏற்பட்டதாக இலங்கை கடற்படை 20ம் திகதி அறிக்கை வௌியிட்டு உத்தியோகபூர்வமாக அறித்தது.

அத்துடன் படகு விபத்தில் இந்திய மீனவர்கள் படகு சேதமடைந்து படகில் இருந்தவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போனதாக இலங்கை கடற்படை அறிவித்திருந்தது.

எனினும் காணாமல் போன மீனவர்களின் சடலங்கள் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து திராவிட முன்னேற்றக் கழக தலைவர் எம்.கே.ஸ்டாலின் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுடன் மீட்கப்பட்டுள்ள மீனவர்களின் சடலங்கள் அதற்கு சாட்சி என ஸ்டாலின் கூறியுள்ளார். (அதற்கான சாட்சி புகைப்படத்தில் உள்ளது.)

மீன்பிடி படகில் 4 இந்திய மீனவர்கள் இருந்ததாகவும் ஒருவருக்கு தலா 10 கோடி இந்திய ரூபா படி 40 கோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என எம்.கே.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இல்லையேல் கடுமையான அரசியல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை உண்மை. அதுபோலவே நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவத்திலும் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனாலும் அதற்கு பதிலாக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்பதுடன் வலய அரசியலில் இலங்கைக்கு கடும் அவப்பெயராகும்.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடும் யோசனை ஒன்று முன்வைக்கபடவுள்ளது.

இந்திய மீனவர்கள் நேரடியாக இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்ற போதிலும் இலங்கை கடற்படை நேரடியாக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அதனால்  இந்திய மீனவர்களால் செய்யப்படும் குற்றங்களை விட கடற்படையினர் செய்யும் குற்றம் கடுமையானது. கடற்படையினர் இவ்விடயத்தில் ஒரு அடி பின்வாங்கி இருந்தால் அது தோல்வியாக அல்லாது வலய அரசியல் வெற்றியாக அமைந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆட்சியாளர்களின் 'சண்டித்தன அரசியல்' நாட்டை அழிவு நோக்கி அழைத்துச் செல்லும்.

கீர்த்த ரத்நாயக்க

முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி

---------------------------
by     (2021-01-22 16:51:17)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links